முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேண்டுகிறேன் தனிமையில்....

தனிமையை உணரும், தருணம் மட்டும், தன்னாலே என்னுள், நுழைகிறாய்... தவிப்பைத் தந்து, தனிமையில் கொன்று, தாமரை நீர் போல்., தீண்டினாய்... மறுக்க மறுக்க, மீட்க முடியாமல்   நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை , வேண்டிக் கேட்கிறேன், வேண்டாம் இந்த மரண ரணம்..... என்னிடம் வந்திடு, என்னுயிரே...

நானும் தான் ...

நானும் பட்டாம் பூச்சி தான், நீ பேசினால்..., படபடக்கிறேனே......

கள்ளத்தனமாய்.....

நான் பிறந்ததும் மகிழ்ந்திருப்பாய், நான் நடக்கவில்லையாம் சரியான வயதில்... "என்னை நடக்க வைக்க , என்னுடன் சேர்ந்து நீயும் நடந்தாயாம்.." :) -- அம்மா சொன்னாள் நான் பேசிய கொஞ்சும் மொழிகளை , நான் அறியாமல் பதிவு செய்தாயாம்.. நீ பேசிய அனைத்தையும் கிளிப்பிள்ளை போல், நான் பேசித் திரிந்தேனாம்.... :) என் மொழி கேட்டு குறள் சொல்வாயாம்... "யாழ் இனிது குழல் இனிது.." என்று  வள்ளுவனாய் மாறி... காய் வண்டிக்காரனை, "காய் காய்.... இங்க இங்க வா .." என்று நான் கேலி பேசியதை, கள்ளத்தனமாய்.. ஒளிந்து ரசித்தாயம்... :) இன்றும் என் கள்ளத்தனத்தை நீ ரசிக்க.. நான் மட்டும் உன் பேச்சை கேட்க, மறக்கிறேன்... இல்லை இல்லை... மறுக்கிறேன்.... :( -- "வயதுக் கோளாறாம் ".. அம்மா சொன்னாள். மறுக்கிறேனோ... மறக்கிறேனோ.. மனதால் சொல்கிறேன்.... நேசிக்கிறேன் அப்பா.... என்றும் நேசிப்பேன்... கள்ளத் தனமாய் என் மனதுள்ளே....

அவள்...

ஆயிரம் நட்சத்திரங்கள் அழகாய் சிரித்தாலும், அவள் புன்னகையில் அழகற்றுத் தோன்றும்.... ஆயிரம் மலர்கள் அசைந்தாலும்.. அவள் அன்பில் அவை சருகாகும்..... தென்றலின் தாலாட்டும், அவள் தீண்டலில் தோற்றுப் போகும்... அவள் மடியில் கிடக்க , ஆயுள் ஆயிரம் போதாது... அவளே என்னைத் தாலாட்டும்... அன்பின் பிறப்பிடம்... --- அம்மா :)