வியாழன், ஜூன் 09, 2011

அவள்...
ஆயிரம் நட்சத்திரங்கள்
அழகாய் சிரித்தாலும்,
அவள் புன்னகையில்
அழகற்றுத் தோன்றும்....

ஆயிரம் மலர்கள் அசைந்தாலும்..
அவள் அன்பில் அவை சருகாகும்.....

தென்றலின் தாலாட்டும், அவள்
தீண்டலில் தோற்றுப் போகும்...

அவள் மடியில் கிடக்க ,
ஆயுள் ஆயிரம் போதாது...
அவளே என்னைத் தாலாட்டும்...
அன்பின் பிறப்பிடம்...
--- அம்மா :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக