முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவுக்குத் தெரியாதா? #2

இதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா? அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P "ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்"


ஆக மொத்தம் என்னை என் அப்பா தனியாக சைக்கிளில் பள்ளிக்கு இனி அனுப்பவேமாட்டார்கள் என்று தான் நினைத்திருந்தேன். எப்போதும் அப்பாவோடு தான் செல்ல வேண்டும், மற்ற பிள்ளைகள் எல்லாம் அவர்களாகவே சைக்கிளில் வர, நான் மட்டும் அப்பாவோடு மட்டும் தான் செல்ல வேண்டும்.

இப்படி நினைத்துக் கொண்டு இருந்தேன். பத்தாம் வகுப்பு. ஒரு நாள் ஆசையாக இருக்கவே, "அப்பா, நான் ஸ்கூலுக்கு சைக்கிள்ல போறேன்பா..." இப்படி மெதுவாய் பூனை போல அப்பாவிடம் கேட்டேன். எப்படியும் அப்பா வேண்டாம் என்று தான் சொல்வார் என்பது முன்பே தெரிந்த கதை. இருந்தாலும் ஆசைக்கு ஒரு முறை கேட்டேன்.

அதே போல, அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்! :(

அட, இறுதி வரை நாம் இப்படித் தான் அப்பா பின்னே மட்டும் செல்வோம் போல என்று நினைத்து இரண்டு நாட்கள் சோகமாகவே இருந்தேன்.

அம்மா, "என்ன உம்முனு இருக்க?", இப்படிக் கேட்க, "ஒன்னும் இல்ல" என்று சொல்ல, அம்மா தான் சொன்…

ஆங்கில வழிக் கல்வியா? இல்லை தமிழா? எது சிறந்தது?

இன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ "இங்கு".

ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கட்டும். உண்மை, நான் பொறியியல் மாணவி. சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றேன். மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். அதில் சிறுவயதில் படித்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி தான் என்ற போதிலும், அங்கு படித்தவரை எனக்கு ஆங்கிலம் பேச வராது! படித்து பரிட்சையில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி விடுவேன் ஆனால். பிறகு ஒரு பள்ளிக்கு மாற்றினார்கள் அப்பாவிற்கு வேலை மாற்றம் ஆனபோது. அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். அங்கு சென்று ஒரு மாதம் கடினமாக இருந்தது. பிறகு ஆங்கிலம் பேசப் பழகிவிட்டேன். அடுத்து பயின்ற பள்ளியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, அங்கும் ஆங்கிலம் தான் பேசினார்கள். அங்கும் என்னால் பேச முடிந்தது. நான் ஆங்கில வழிக் கல்வியே சிறுவயதில் இருந்து படித்ததால், எனக்கு சிறுவயதில் ஆங்கிலம் பேச வராத போதிலும், நடுவில் பேசியே ஆக வேண்டும் என்ற நிபந்தனை வந்த போது, கொஞ்சம் கடினமாக இருந்த போ…

என்னையும் நேசிக்க!

இங்கு நீளமாக இருக்கும்
இரவுகளுக்குக் காரணம் இதோ நீ தான்!
தனியே இதை, எனக்கு விதித்தது, இதோ நீ தான்!
நாளை இதே போலவா? வேண்டாம் எனக்கு!
இந்தத் தனிமையும், உந்தன் இனிமை இல்லாத வெறுமையும்!
இது போல  இன்னும் ஒருநாளா? வேண்டாம் அது எனக்கு!
உன்னைத் தவிர, யாரும் வேண்டாம்! மீண்டும் ஒருமுறை, ரணமும் வேண்டாம்!
ஆனாலும் வேண்டும், என்னை நேசிக்க, என் கை கோர்க்க, எனக்கென ஒருவன், ஆனாலும் வேண்டும், என் கண்ணீர் துடைத்து, கட்டி அணைத்து, ஆறுதல் சொல்ல!
வேறு எதுவும் வேண்டாம், என்னைத் தாங்க, எனக்கும் வேண்டும், என்னை நேசிக்க, எனக்கென ஒருவன்!
இப்படியும் என் வாழ்க்கை, இறுதி அடையுமா? எதுவுமே புரியாமல், இப்படியே என் வாழ்க்கை இறந்துவிடுமா?
உயிருள்ளவரை உண்மையாய் இருந்துவிட, உயிர்விடும் வரை, எல்லாம் பகிர்ந்துகொள்ள!
வேறு எதுவும் வேண்டாம், என்னைத் தாங்க, எனக்கும் வேண்டும், என்னை நேசிக்க, எனக்கென ஒருவன்!
இன்று இருக்கும், வேதனையும் பயமும் துக்கமும் அழுகையும் என்றும் வேண்டாம்!
இதை மாற்ற, என்னைத் தாங்க, எனக்கும் வேண்டும், என்னை நேசிக்க, எனக்கென ஒருவன்!
உனக்காகத் தந்திட, உள்ளது என்னிடம், ஏராளம் ஏராளம்! எனக்கு வேண்டியதெல்லாம், என்…

குண்டு!

குண்டா? அட, இது நீங்கள் நினைப்பது போல உடல் பருமன் குறித்த பதிவு அல்ல!.

இது தத்துவம் அல்லது, உண்மை, அல்லது, ஒருவரின் கருத்து என்று கூட வைத்துக் கொள்ளலாம்! ஆம், இது ஒருவரின் கருத்து தான்.

ஒருவர் என்றால் யாராக இருக்கும்? வழக்கம் போல, என் அப்பாக்குட்டி (அப்பா) தான். என்னிடம் அவரைத் தவிர்த்து வேறு யார் கருத்து சொல்வார்கள்?

ஏதோ ஆர்வமாக என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஏதேதோ பேசி, எனக்கும் என் தம்பிக்கும் இருக்கும் சுதந்திரம், அதில் இருக்கும் வேறுபாடு என்று பேச்சு வந்தது.

"எப்பவும் அவன் தான் சுதந்திரமா இருக்கான், என்ன சுதந்திரமா விடவே மாட்டிக்கிறீங்க", இப்படி நான் எப்போதும் போலவே குறைபட்டுக் கொள்ள, என் அப்பா அப்போது தான், இந்த "குண்டு" கருத்தை, கதையைச்  சொன்னார்.

குண்டா? ஆம் குண்டு! சரி, என்னவென்று அதிகம் யோசிக்காதீர்கள், நானே சொல்கிறேன்.

என் அப்பாவுக்கு நான் ஆண் பிள்ளையாகப் பிறக்கவில்லையே என்று வருத்தமாம். உடனே தவறாக நினைக்காதீர்கள், நான் பெண் பிள்ளை என்பதால் வெளியே என்னைத் தனியே அனுப்ப அப்பாவுக்குக் கொஞ்சம் பயம், கொஞ்சம் என்ன, நிறையவே எனலாம்.

நான் வே…

நினைவெல்லாம் நீதானே!

எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு,
நீ ஒரு புளிப்பு மிட்டாய் வாங்கி,
பாதி கடித்து,
மீதி தந்தாயே,
அன்று தான் எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு!

நீ என்னை முத்தமிட்டதாய் நினைவு,
ராணி வேடமிட்டு நாடகத்தில்,
மிடுக்காய் பேசி முடித்தவுடன்,
முதல் முதலாய்,
அன்று தான் நீ முத்தமிட்டாய் நினைவு!

அழகை உணர்ந்ததாய் நினைவு,
எனக்காக நீ சமைத்து விட்டு,
முகமெல்லாம் கரியைப்
பூசிக்கொண்டு நின்றாயே,
அன்று தான் அழகை உணர்ந்ததாய் நினைவு!

மழையை ரசித்ததாய் நினைவு,
வீட்டின் சாளரத்தின் வழியே,
என் காதோடு நீ பாடிய,
மழைப் பாடலைக் கேட்டுக் கொண்டே,
என்றோ நான் மழையை ரசித்ததாய் நினைவு!

கடவுளை நம்பியதாய்  நினைவு,
எனக்குக் காய்ச்சல் என்று,
நீ மண்சோறு சாப்பிட்டபோது,
என்னையும் அறியாமல், கடவுளை நம்பியதாய் நினைவு!

பயத்தைக் கலைந்ததாய் நினைவு,
"பயப்படக் கூடாது", உன் கருவறையில்,
நான் இருந்த போது,
நீ சொன்னதும்,
நான் என் பயத்தை எல்லாம் கலைந்ததாய் நினைவு!

என்றும், என் மீது உயிராக இருக்கும்,
"ஒன்றும் கவலை இல்லை", என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
என் அம்மா, என் நினைவெல்லாம் நீ தானே!

#அன்னையர் தின வாழ்த்துக்கள்!


பழைய சாதமும் பாயாசமும்!

உங்களுக்கு நல்ல பசி! காலையில் இருந்து சாப்பிடவே இல்லை! நல்ல வேலை, நேரம் இப்போது மதியம் மூன்று மணி என்று வைத்துக் கொள்ளுங்கள்!

சாப்பிட, பழைய சாதம் வேண்டுமா? அல்லது, பாயாசம் சேர்த்து இருக்கும் அறுசுவை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பெரும்பாலானோர் அறுசுவை உணவு தான் என்பார்கள், ஆனால், என்னைக் கேட்டால், பழைய சாதம் தான் வேண்டும் என்பேன்!!

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த பழைய சாதம் என் அம்மா கையால் செய்ததாக இருக்க வேண்டும்!

இப்படி எல்லாம் நான் சமீப காலமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், அதுவும், அதிகம் சாப்பாடு குறித்தே இருக்கின்றன யோசனைகள் எல்லாம்!

அடடே என்ன ஆயிற்று கண்மணிக்கு? பயப்படாதீர்கள், "வெயில் அதிகமானதால் ஒருவேளை மூளை கலங்கிவிட்டதோ எனக்கு?", என்று!

காரணம், விடுதியில் இருந்தது தான்! வீடு, அம்மா அப்பா தம்பி இவர்களைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது விடுதிக்குச் சென்ற பிறகு தான்!

இதுவரை வீட்டை விட்டு பிரிந்து சென்றதே கிடையாது நான்! சொல்லிக் கொண்டிருப்பேன் முன்பெல்லாம், "இந்த வீட்ட விட்டு வேற எங்கயாவது போக சொன்னா, வேகமா போய்டுவேன்&q…