இதற்கு முன்பு எழுதிய அப்பாவுக்குத் தெரியாதா #1 பதிவு படிக்கவில்லையா? அதையும் படித்துவிட்டு இங்கே வந்தால், இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் :P "ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்"
ஆக மொத்தம் என்னை என் அப்பா தனியாக சைக்கிளில் பள்ளிக்கு இனி அனுப்பவேமாட்டார்கள் என்று தான் நினைத்திருந்தேன். எப்போதும் அப்பாவோடு தான் செல்ல வேண்டும், மற்ற பிள்ளைகள் எல்லாம் அவர்களாகவே சைக்கிளில் வர, நான் மட்டும் அப்பாவோடு மட்டும் தான் செல்ல வேண்டும்.
இப்படி நினைத்துக் கொண்டு இருந்தேன். பத்தாம் வகுப்பு. ஒரு நாள் ஆசையாக இருக்கவே, "அப்பா, நான் ஸ்கூலுக்கு சைக்கிள்ல போறேன்பா..." இப்படி மெதுவாய் பூனை போல அப்பாவிடம் கேட்டேன். எப்படியும் அப்பா வேண்டாம் என்று தான் சொல்வார் என்பது முன்பே தெரிந்த கதை. இருந்தாலும் ஆசைக்கு ஒரு முறை கேட்டேன்.
அதே போல, அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்! :(
அட, இறுதி வரை நாம் இப்படித் தான் அப்பா பின்னே மட்டும் செல்வோம் போல என்று நினைத்து இரண்டு நாட்கள் சோகமாகவே இருந்தேன்.
அம்மா, "என்ன உம்முனு இருக்க?", இப்படிக் கேட்க, "ஒன்னும் இல்ல" என்று சொல்ல, அம்மா தான் சொன்னார் அந்த மகிழ்ச்சியான செய்தியை, ஆம், நான் சைக்கிளில் போகலாம் இனி பள்ளிக்கு! :) :) :)
எனக்கு ஒரே ஆனந்தம், "போலாமா?", என்றேன் அம்மாவிடம், "ஆமா, போலாம்", என்றார் அம்மா.
"நீங்க சொல்விங்க, அப்பா வேணாம்னு சொல்லிடுவாங்க", என்று மறுபடி சோகமாக முகம் எனக்கு மாறவே, அம்மா சொன்னார், "அப்பா தான் சொன்னங்க, நீ சைக்கிள்ல போலாம்னு"
எனக்கு அத்தனை ஆனந்தம், ஓடிப் போய் எனது சைக்கிளை நன்றாகத் துடைத்தேன், வெறும் துணியால் ஒரு முறை, தண்ணீர் வைத்து ஒரு முறை, என்று தொடைத்து, எண்ணெய் எல்லாம் போட்டு, ஒரே அமர்க்களமாக தயார் செய்தேன்.
ஆனால், இன்று வரை எனக்கு ஒன்று மட்டும் புரிவதே இல்லை, என்ன நல்ல விஷயம், எனக்கு ஆனந்தம் தரும் விஷயம் என்றாலும், என் அப்பா என் அம்மாவிடம் சொல்லி தான் என்னிடம் சொல்லச் சொல்வார், அது ஏன்? அது ஏனென்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கும்?
பிறகு கல்லூரிக்குச் செல்கிறேன் வண்டியில் என்று கேட்டேன் முதலாம் ஆண்டு படிக்கும் போது, அப்பா விடவில்லை.
ஆனால் இப்போது, அப்பாவே சொல்கிறார், பார்த்து மெதுவாகப் போய்
வரவேண்டும் என்று.
பத்தாம் வகுப்பில் சைக்கிளில் தொடங்கினேன், இப்போது கார் ஓட்டப் பழகப் போகிறேன் :)
இதுவரை என்னை தனியே வெளியே அனுப்ப அப்பா கொஞ்சம், கொஞ்சம் இல்லை நிறையவே தயங்குவார். ஆனால், இப்போதோ? நானே துணைக்கு அழைத்தாலும், "போயிட்டு வா பாத்து", இப்படிச் சொல்கிறார்!
அப்பாவுக்குத் தெரிகிறதே, எனக்கு எது எப்போது வரும், வேண்டும் என்று.
பிறகு இன்னொன்று, "அவங்க ரொம்ப நல்ல அப்பா, ஏமாத்தமாட்டாங்க" :)
உங்க அப்பா எப்படி?
![]() |
அப்பா! |

/// என் அப்பா என் அம்மாவிடம் சொல்லி தான் என்னிடம் சொல்லச் சொல்வார், அது ஏன்...? ///
பதிலளிநீக்குஅங்கே தான் ரகசியம் இருக்கிறது... இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் இவ்வாறு தான் செய்ய வேண்டும்... (செல்ல-->[!!!-?]) தம்பிக்கோ / தங்கைக்கோ எது செய்தாலும்... கொடுத்தாலும்... ஒரு சின்ன சாக்லேட் கொண்டு வந்தாலும், ஒரே மாதிரி (நிறம் கூட) கொண்டு வந்து முதலில் பெரிய குழந்தைகளிடம் அவைகளை கொடுத்து, சின்ன குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்... பிற்காலத்தில் பல பிரச்சனைகள் வராது. உதாரணத்திற்காக சாக்லேட் என்று சொன்னேன்.... எல்லாவற்றையும் அவ்வாறே செய்ய வேண்டும்...
என்றும் குடும்பம் கூட்டுக் குடும்பம் தான்...
ரகசியங்கள் பலவற்றை அப்பா அம்மாவிடம் கேட்டுக் கொள்ளவும்... ஹா...ஹா... வாழ்த்துக்கள்...
அது இருக்கட்டும்... இப்போது நான் யாரைப் பாராட்டுவது...? உங்களையா...? அப்பாவையா...? பாராட்டுக்கள்...
ஒ... சரி அம்மாவிடம் கேட்கிறேன் ரகசியம். "ஏ பாராட்டு வாங்கிட்டேன்!", ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டியதற்கு!
நீக்குஇந்த அப்பாக்கள் என்ன செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும் தான் போல!
நன்றி :)
//அவங்க ரொம்ப நல்ல அப்பா, ஏமாத்தமாட்டாங்க// ஹா ஹா இந்த வார்த்தைகளை ஒரு வகையில் என் மூலமாக சொல்லியிருக்கிறீர்கள் என நம்புகிறேன்.. நீங்களும் உங்கள் அப்பாவும் கண்டிப்பாக அந்தப்படத்தைப் பாருங்கள்.. அப்பாவுக்கு பொதுவாகவே தான் தான் head of the family என்கிற எண்ணம் இருக்கும்... உங்கள் கல்லூரியில் ஒரு விசயம் நடக்க வேண்டும் என்றால் உங்கள் principal நேரடியாக வந்து சொல்வாரா? அல்லது துறை ஆசிரியர்கள் மூலம் சொல்வாரா? அது போல் தான் அப்பாக்களும்.. நேரடியாக நம்மிடமே சொன்னால் நாம் அவர் மீது வைத்திருக்கும் பயமோ மரியாதையோ குறைந்து விடும் என நினைப்பார்கள்.. அதுவே அம்மா மூலம் சொல்லும் போது நமக்கும் அவர் மீது மானசீகமான அன்பும் மரியாதையும் வளரும்..
பதிலளிநீக்குகார் ஓட்டப் பழகுவதற்கு வாழ்த்துக்கள் :-)
ஒ... "அப்போ எங்கப்பா பிரின்சிபாலா... :(
நீக்குநன்றி, நன்றி :) அப்புறம். நான் எல்லாம் எங்கப்பாக்கு பயப்படமாட்டேன் :)
ஹா ஹா நான் மட்டும் என்ன பயப்படுவேனா? நாம் பயப்படவில்லை என்பது அவருக்கும் தெரியும்.. இருந்தாலும் தனது மரியாதை என்று ஒன்று இருக்கிறதே? அதான் அப்படி.. நான் சொன்னது பிள்ளைகளின் வழியாக தந்தையின் செயல்களை.. ஆனால் திண்டுக்கல் தனபாலன் அண்ணன், ஒரு தந்தையாக அந்த செயல்பாடுகளுக்கான அர்த்தங்களை கூறியிருக்கிறார்.. ஒரு விதத்தில் அவர் சொல்வது தான் சரி என்று படுகிறது.. இப்போது மறைமுகமாக பேசும் அப்பா, நாளை ஒரு முக்கிய விசயத்திற்கு நம்மிடமே நேரடியாக பேசும் போது, நாம் அதற்கு கொடுக்கும் மதிப்பு அதிகம், உடனே அதை சரி என்று கேட்டுக்கொள்வோம்..
நீக்கு//அப்போ எங்கப்பா பிரின்சிபாலா... :( //
நல்ல பிரின்சிபல் :-) நீங்கள் நினைக்கும் பிரின்சிபல் அல்ல :-D :-P
கண்மணியின் "அப்பாவுக்குத் தெரியாதா" பதிவை ரசிச்சு படிச்சிட்டு இருக்கேன், எப்பவும் போல :)
பதிலளிநீக்கு