முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரோஜா மலர்ந்தது இன்று!

உங்களோடு பேசியதுண்டா? ரோஜா மலர்? உங்களோடு பேசியதுண்டா? அழகாய் சிரித்ததுண்டா? ரோஜா மலர்,  உங்களைப் பார்த்து  அழகாய் சிரித்ததுண்டா? உங்கள் இன்பத்தில், உங்கள் துன்பத்தில், தோள்  கொடுத்து, தாங்கியதுண்டா? இல்லையோ? நீங்கள் கொடுத்து வைத்தது, அவ்வளவு தானோ? ஆனால், நான் கொடுத்து வைத்தது, எவ்வளவோ! என் தோட்டத்து, வெள்ளை ரோஜா, இன்று மலர்ந்த, நல்ல ரோஜா. என்னோடு, தினமும் என்னோடு, தித்திப்பாய் பேசிடும், அழகாய் வாசம் சுமந்து, அன்பாய் பார்வை பார்க்கும். பனிக்காற்றில் என் ரோஜாவோடு, பனிக்கூழ் சாப்பிட்டதுண்டு, வெயிலில் என் ரோஜாவோடு, குடையில் சென்றதுண்டு! என்றும் வாடாத, வெள்ளை ரோஜா, என்றும் என் மனம், கொள்ளை கொள்ளும் ரோஜா! மலர்கள் என்றுமே, நமக்கு நல்ல தோழிகளாம்; என் ரோஜா போல, மலர்கள் என்றுமே, நமக்கு நல்ல தோழிகளாம்! இதோ, இன்று பூத்த, என் வெள்ளை ரோஜாவுக்கு, வாழ்த்து சொல்லுங்கள், பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள்! ## இன்று என் தோழி "ரோஜாவுக்குப்" (அவள் பெயர் ரோஜா, என் தோட்டத்துப் பூ

அன்புள்ளவரே! #1

நேரில் பேச தைரியம் இல்லை எனக்கு, அதனால் தான் இந்தக் கடிதம். தயவு செய்து வாசியுங்கள், என் உண்மை உணர்வரிய வாசியுங்கள்! இதை வாசித்து முடிக்கும் போது, என் ஏக்கம், ஏமாற்றம், என் அன்பு எல்லாம் உங்களுக்குப் புரியும்! நீங்கள் என் எதிர் வீட்டில் தான் இருக்கிறீர்கள், ஆனாலும் என்னைப் பார்த்தால் சிரிப்பதில்லை! என்னிடம் பேசுவதில்லை! எனக்கும் உங்களோடு பேச வேண்டும் என்று தான் ஆசை, ஆனால், அம்மா திட்டுவாரோ..? அப்பா திட்டுவாரோ? அத்தனை பயம் எனக்கு! :( உங்கள் வீட்டுச் சுட்டிகளோடாவது விளையாடலாம் என்றால், அதுவும் கூடாதாம், சொல்லிவிட்டார்கள் வீட்டில்! நீங்களும் நாங்களும், இந்தியா பாகிஸ்தான் போல எப்படி ஆனோம்? என்று ஆனோம்? இன்னும் புரியவில்லை! காரணம் கேட்டால், "பேசாதே என்றால் பேசாதே", இது தான் அம்மாவின் பதில்! சண்டை கூட போடவில்லையே? பிறகு ஏனாம்? முன்பெல்லாம் நாம் பேசிக்கொண்டு தானே இருந்தோம்? உங்கள் வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து, நீங்களும் நானும், தெருவின் சுட்டிப் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடினோமே? அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை? ஒன்றாக அமர்ந்து, நாம் எல்லோரும், நிலாச்சோறு சாப்பிட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு!

உன்னைப் பிரிந்து கிடந்த, காகிதப் பூக்கள்! அந்த நாட்கள் எல்லாம், அயர்ந்து கிடந்தது - என் கற்பனையும் காதலும்! உன்னைத் தீண்டாமல் திரிந்த, அந்த தினங்கள் எல்லாம், வாடிக் கிடந்தன - என் பேனா மொட்டும், கண்மணிகளும்! ஏதேதோ காரணத்தால், உன் காகித மேனி தீண்டவில்லை, அதனால் ஏனோ, வாழ்க்கை காகிதப் பூவாய்... வாசம் ஏதுமில்லை! என் சோகம் அழுகை, அறிந்தது நீ தானே! என் இன்பமும் இனிமையும் புரிந்து நீ மட்டும் தானே! உன்னை மறந்து திரிந்த நாட்கள், ஐயோ, நீ என்னை நினைத்து நினைத்து ஏங்கினாயோ? தேடித் தேடி வாடினாயோ? இனியும் இதுபோல், என் நாட்கள் நகராது! உறுதியாய்ச் சொல்கிறேன், இனியும் உன்னைப் பிரியேன், என் நாட்குறிப்பே!

தீபாவளியாம் தீபாவளி!

"சாமி மழ வரக்கூடாது!", "ரெயின் ரெயின் கோ அவே" என்று பட்டாசு கொழுத்த, சிறுவர்கள் எல்லாம் சேரும் நாள்! உங்கள் வீட்டு மாடியிலா? எங்கள் வீட்டு மாடியிலா? ராக்கெட் விடுவது எங்கிருந்து? "ஸ்ரீஹரிகோட்டா சைண்டிஸ்ட்" போல, சுட்டிகள்  எல்லாம், சண்டையிடும் நாள்! புதுச் சொக்காயில், பெரிய ஓட்டை, போட்டது யார்? போட்டி போடும், ஒரு நாள்! கையெல்லாம் வெடிமருந்து, வாயெல்லாம் பெரும் விருந்து, "டேய்.., கை கழுவாம, லட்டு சாப்டாத...", அம்மாவின் சத்தத்தோடும், அதிரும் திருநாள்! காயமே இல்லாமல், கட்டாயம் முடியாது, கொஞ்சம் கண்ணீர்  கொடுக்கும், கருப்பு நாள்! அத்தை வீடு, அக்கா வீடு, வீடு வீடாய், இனிப்பு கொடுத்து, கொண்டாடும் இனிய  நாள்! உலகில் இத்தனை வண்ணங்களா? உடையில் இத்தனை ரகங்களா? உங்களையும் என்னையும், வியக்க வைக்கும், விழா நாள்! "இருப்போருக்கு" இத்தனையும், இல்லாதோருக்கு???? "நாமும் கொண்டாடுவோம் ஒருநாள்", என்று மனதைத் தேற்றிக் கொள்ளும், ஏழைகளுக்கு, ஏக்கப் பெருநாள்!  

கடவுளும் கண்மணியும்!

கந்த ஷஷ்டி கவசம், காயத்ரி மந்திரம்! இது இரண்டும் சொல்லாமல், எனக்கு தூக்கமே வராது. காலையில் பூஜை செய்து, முழுவதுமாக கந்த ஷஷ்டி கவசம் பாடுவேன். வாசிக்க மாட்டேன், பாடுவேன். மாலை, நூற்றி எட்டு முறை காயத்ரி மந்திரம் பாடுவேன்! இது தவிர, இதர தெய்வங்களுக்கும் பாடல்கள் பாடுவேன். பாடல் புத்தகம் இருக்கும், நானே ஒரு ராகம் போட்டுப் பாடுவேன்! பக்கத்து வீட்டு பாட்டி முதல் பியூட்டி வரை எல்லோருக்கும் எனது பாடல் பிடிக்கும். உண்மையாகவே, நன்றாகவே பாடுவேன். இன்று நான் கல்லூரியில் மேடையில் பாடுவதுண்டு, காரணம் சிறுவயதில் தினமும் கந்த சஷ்டிக் கவசம் பாடிப் பழகியது தானோ என்னவோ! நம்பித்தான் ஆக வேண்டும் நீங்கள், நான் நன்றாகவே பாடுவேன்! உடனே "கண்மணி அத்தனை பெரிய பக்தி நிறைந்த பெண்ணா?", என்று நினைத்து விடாதீர்கள். இது நான் ஐந்து, ஆறாம் வகுப்புப் படிக்கும் போது! இப்போது??? இப்போது, நான் பூஜை செய்வதே கிடையாது! சிறுவயதில் அத்தனை பெரிய பக்தி கொண்டிருந்த நான், இப்போது ஏன் அப்படி இல்லை??? காரணம்? உள்ளது! என்ன? காரணம், ஒரு ஆசிரியர்!!! ஆம், நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு அவர் சரித்திர

"நாம்" பேசப் போகிறோம்!

என்ன பேசப் போகிறோம்? நம்மைப் பற்றி தான். ஆம், நாம் என்றால் இங்கு யாரைக் குறிக்கிறது இந்த "நாம்"? நாம் --> ஆண், பெண்! இது இரண்டு தான்.சரி, அதில் என்ன? என்கிறீர்களா? பொதுவாகவே, ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது என்பதை பாவமாகப் பார்க்கும் சமூகம் நம்முடையது!??!!  ஆம், நட்பாகப் பேசினால் கூட சில சமயம், இல்லை, பல சமயம், தவறாகத் தான் பார்க்கிறது. சரி, அதனால் என்ன என்கிறீர்களா? ஆணும், பெண்ணும் பேசுவதில் தவறே இல்லை! இப்போது, இந்தப் பதிவை வாசிக்கும் நீங்களே ஓர் ஆணாக இருப்பின், உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்வதில், தவறில்லை. தவறில்லை தானே? ம்ம், பிறகு என்ன? ஏன் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தைத் தவறு என்கிறார்கள்? பெண் பிள்ளை என்றால், பொன்னோ பொருளோ, என்று பொத்தி வைக்கிறார்கள்? பல நேரங்களில் இந்த ஆண் பெண் கருத்துப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றத்தொடு நிற்பதில்லை!!! இது, இதனால் தானோ என்னவோ, பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள்! ஏதோ ஒரு தருணத்தில், வேறு மாதிரியாக வார்த்தைகள் மாறும்போது தான் பிரச்சனை!  முறையோடு பேசுவது அவசியம். ஒரு பெண்ணோ, ஆணோ, புன்னகையோடு பேசுகிறார் என்பதற்க

யாரேனும் சொல்லுங்களேன்!

எனக்கு நுனி நாக்குல, ஆங்கிலம் வராது! நாகரிக உட போட, நாணம் விடாது! உதட்டுக்குச் சாயமும், நகத்துக்கு வண்ணமும், ஏனோ எனக்குக் கிடையாது! ஒரு அடிக்கு, செருப்புப் போட்டால், காலு நடக்காது!! ரெட்டை ஜடை பின்னல் தவிர, வேற தெரியாது! கிரிக்கெட்டு ஆட்டமெல்லாம் கொஞ்சமும் புரியாது! காலைல எந்திச்சி, கோலம் போட்டு, கம்மஞ்சோறு காச்சி, எருவு தட்டிப் போட்டு, சோழி ஆடத் தெரியும்! சொலவட கத பேசி, சிரிச்சி விடுகதைக்கு, சரியா விட சொல்லி, சாமி கும்புட்டு, சிவனேன்னு பாட்டுப் பாடத் தெரியும்! எம்மாடி எம்புள்ள, பட்டணம் போய் வந்து, "போம்மா நீ பட்டிக்காடு, ஒனக்கொன்னும் தெரியல..!" சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறான்! சிரிக்க என்ன கெடக்கு? "ஒதட்டுச் சாயமும், ஒரு அடிச் செருப்புமா? தெரிய வேண்டிய சமாச்சாரம்?" யோசிச்சுத் தான் பாக்குறேன், வெட கெடைக்க மாட்டேங்குது, யாரேனும் சொல்லுங்களேன்! யாரேனும் சொல்லுங்களேன்!