ஞாயிறு, நவம்பர் 18, 2012

நீண்ட நாட்களுக்குப் பிறகு!

உன்னைப் பிரிந்து கிடந்த,
காகிதப் பூக்கள்!
அந்த நாட்கள் எல்லாம்,
அயர்ந்து கிடந்தது - என்
கற்பனையும் காதலும்!

உன்னைத் தீண்டாமல் திரிந்த,
அந்த தினங்கள் எல்லாம்,
வாடிக் கிடந்தன - என்
பேனா மொட்டும், கண்மணிகளும்!

ஏதேதோ காரணத்தால்,
உன் காகித மேனி தீண்டவில்லை,
அதனால் ஏனோ,
வாழ்க்கை காகிதப் பூவாய்...
வாசம் ஏதுமில்லை!

என் சோகம் அழுகை,
அறிந்தது நீ தானே!
என் இன்பமும் இனிமையும்
புரிந்து நீ மட்டும் தானே!

உன்னை மறந்து திரிந்த நாட்கள்,
ஐயோ, நீ என்னை
நினைத்து நினைத்து ஏங்கினாயோ?
தேடித் தேடி வாடினாயோ?

இனியும் இதுபோல்,
என் நாட்கள் நகராது!
உறுதியாய்ச் சொல்கிறேன்,
இனியும் உன்னைப் பிரியேன்,
என் நாட்குறிப்பே!2 கருத்துகள்: