முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடர்கதை --> காதலி காதலி!#18

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12 | #13 | #14 | #15 | #16 | #17


முரளி தன் தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தான். அவனுக்கு முன் சுவரில், ரேணுகா ஊருக்குக் கிளம்பும் முன் வாங்கித் தந்த ஓவியம் தொங்கிக் கொண்டு இருந்தது.

-----------------

முரளி தில்லிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தினம்.

விரைவாகக் கிளம்பிக் கொண்டு இருந்தாள் ரேணுகா, "சீக்கிரமாப் போய் வாங்கிட்டு வந்துடனும்.. நல்ல பரிசா வாங்கிட்டு வரணும் முரளிக்கு புடிக்கணும், என்ன வாங்கறது... சரி கடைல போய் நல்லதாப் பாத்து வாங்கலாம்.." எண்ணியவாறே வீட்டை விட்டு வெளியே வந்தாள் ரேணுகா.

அது சென்னையில் பிரபலமான, பரிசுப் பொருள் விற்பனை செய்யும் இடம், உள்ளே நுழைந்தாள் ரேணுகா.

அழகழகாக வித விதமாக இருந்தன பரிசுப் பொருள்கள். பெரும்பாலும் எல்லாப் பொருள்களுமே காதலன் காதலிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாயும் தோழமையை வெளிப்படுத்தும் விதமாகவுமே இருந்தன. ஒரு பகுதியில் இருந்தது, அம்மா மகனுக்குக் கொடுக்கும் வண்ணம், அழகாகவரையப் பட்ட ஒரு ஓவியம். ஒரு ஏழைத் தாய் , கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடையுடன், குழ…

தொடர்கதை --> காதலி காதலி!#17

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12 | #13 | #14 | #15
#16


"இங்க... முரளினு...", முரளி தங்கி இருந்த வீட்டில் இருந்த பெரியவரிடம் விசாரித்தார் ராமச்சந்திரன்.

"அவன் பயிற்சிக்குப் போயிருக்கான் ஐயா, இப்போ வர்ற நேரம் தான்.. நீங்க...?", பெரிய மீசை வைத்திருந்த அந்தப் பெரியவர் பதிலளித்தார். அவர் தான் முரளியின் நண்பனின் தந்தை.

"நான் முரளியோட அப்பா.."

"வாங்க, சாவி என்கிட்டே தான் இருக்கு, அவன் வர வரிக்கும் காத்திருங்க. வந்துடுவான்..நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.."

சாவியை வாங்கிக் கொண்டு முரளியின் அறையில் அமர்ந்திருந்தார்கள் ராமச்சந்திரனும் ரேணுகாவும்.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை, நினைவுகளே பேசிக்கொண்டு இருந்தன அங்கே.

மகன் வந்ததும் எப்படிப் பேசுவது? என்ன சொல்வது? ஏன் இத்துனை நாள் வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது. அவனுக்கு எந்த உண்மையும் தெரியாதே.. என்னவென்று சொல்வது.. அம்மாவும் அப்பாவும் சண்டை இட்டுப் பிரிந்தோம் என்றா? மனைவி பிள்ளையை தனியே தவிக்க விட்டுச் சென்ற அப்பா என்று தன் மீது …

தொடர்கதை --> காதலி காதலி!#16

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12 | #13 | #14 | #15


"இங்க ரேணுகானு ஒருத்தவங்க? அவங்கள பாக்கணும்..? பாக்க முடியுமா?", ராமச்சந்திரன் கேட்டார் அந்த நிறுவனத்தில் வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம்.

"அப்படி இங்க யாரும் வேல பாக்கலையே..", பொறுமையாய்ப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.

"இல்ல... இங்கதான் ரொம்ப வருசமா வேல பாக்றதா சொன்னாங்க.."

"அப்டியா..? எனக்கு சரியா தெரிலயே, நான் வேலைக்குப் புதுசு.., கொஞ்ச நேரம் காத்திருங்க, நான் உள்ள போய் கேட்டுட்டு வரேன், இங்க உக்காந்திருங்க..", அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினார் அந்தப் பெண்.

அமர்ந்தார் அந்த நாற்காலியில் ராமச்சந்திரன். நல்ல குளிரூட்டப்பட்ட அறை, நவீனமான கட்டிடம், மெத்தென இருந்தது அந்தப் பஞ்சு நாற்காலி. முன்னே நிறைய ஆங்கில நாளேடுகள் இருந்தன மேசையில்.
நாளேடுகளைப் படிக்க மனம் வரவில்லை. ரேணுகாவைப் பார்க்க வேண்டும், ரேணுகாவின் முகம் தான் அவர் கண் முன் தெரிந்தது எல்லாப் புறமும். உள்ளே சென்ற பெண் எப்போது வெளி வருவார் என்று எட்டி எட்டிப் பார்த்தவாறு …

ஒத்தை மரமாய்!

"இருள் சூழத் தொடங்கும் நேரம்,
நீ காதலோடு இங்கே காத்திரு!"உன் வார்த்தைக்காக,
இருள் சூழும் முன் வந்தேனடா!

தோழி வந்தாள்,
"ஏமாற்றுக்காரனடி" ஏளனமாய்ச் சொன்னாள்!
தங்கை வந்தாள்,
"ராமனல்ல அவன்" எள்ளி நகையாடினாள்!

கோபித்துக் கொண்டேன் தோழியிடம்,
கண்டிப்புக் காட்டினேன் தங்கையிடம்!

காத்திருக்கிறேனடா,
நாட்கள் நாலு,
இருள் சூழ்ந்ததும்,
மரம் தேடி வந்தமர்ந்து,
நாம் பழகிய
நினைவுகளோடு காத்திருக்கிறேன்,
நம்பிக்கையோடு உறைந்திருக்கிறேன்,
காதலோடு ஒத்தையாய்!
இந்த ஒத்தை மரம் போலே,
நானும் ஒத்தை மரமாய்!

உன்னைத் தேடி வெளி வந்த,
கண்ணீரும் கூட,
வழிந்து வழிந்து,
காய்ந்து போகிறது தானாய்!
நான் மட்டும்,
நம்பிக்கை காயாமல்,
காத்திருக்கிறேனடா,
ஒத்தை மரமாய்! ♥ ♥

தொடர்கதை --> காதலி காதலி!#15

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12 | #13 | #14


அருமையான உணவு, தமிழ்நாடும் தில்லியும் சேர்ந்தார் போல இருந்தது!
தமிழக உணவு வகைகளும், தில்லியின் உணவு வகைகளும் சேர்த்துப் பரிமாறி இருந்தார்கள்.

சிந்துவின் தந்தையும் முரளியும் சாப்பாட்டு மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க, சிந்து மறுபுறம் அமர்ந்திருந்தாள் முரளியின் எதிரே!

சிந்துவின் தந்தையும் முரளியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிந்துவின் தந்தை வெங்கட்ராமன். சற்று ஒல்லியான உடல், வயதால் கண்களுக்குக் கீழ் கருப்புப் படிந்திருந்தது! ஐந்தரை அடி உயரம்!

" அப்போ இங்க நம்ம வீட்டு மாடில எடம் இருக்குது தம்பி, இங்கயே தங்கிக்கோங்க.", வெங்கட்ராமன் முரளியிடம் சொல்ல,

"இல்லபா, என்னோட நண்பனோட வீடு, பயிற்சி மையத்துக்கு பக்கத்லயே இருக்கு. அதனால அங்க தங்கிக்கறேன். அது தான் வசதியா இருக்கும்."

"சரி தம்பி, வாரத்துக்கு ஒரு தடவ சனி ஞாயிறு இங்க வாங்க.. நல்லபடியா படிங்க, இங்க தங்குனா இந்த சிந்துவே உங்கள படிக்க விடமாட்டா.. அதுவும் இருக்கு.", சொல்லியவாறே செல்லமாய் சிந்துவைப் பார்…

என் முதல் காதல்!

எப்படி இப்படி ஒரு காதல் வந்ததென்று, வியக்க அவசியமில்லை.
சிறு வயது முதலே உன்மீது எனக்குக் காதல் இருந்தது உள்ளூரே!

எல்லாத் தந்தையையும் போல, என் தந்தைக்கும் என் காதலில் நம்பிக்கை இல்லை.

இந்தக் காதல் என் வாழ்வை நன்றாக அமைக்குமோ? தயக்கம் கொண்டார்.
வேறு ஒரு காதலைக் கை காட்டி, காதலி என்றார்.

தந்தையிடம் வாதாடி, தோற்றுத் தான் போனேன்.
அவர் கை காட்டியதையே காதலித்தேன். காதலிக்கிறேன் இன்றும்.
"விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும்", யாரோ சொன்னதாய் நினைவு. சரியாகப் பின்பற்றினேன் இதை.

இருப்பினும், என் முதல் காதல், நான் நேசித்து சுவாசித்து, உருகி ஏங்கிய காதல்! புத்தியில் அது மறைந்து போய் இருந்தாலும், மனதில் நீங்காது இருந்து வந்தது! பழைய காதலை எண்ணி ஏங்கிய இரவுகள் மிக நீளமானவை.

அன்று இரவு, தோன்றியது, எப்படியேனும் என் முதல் காதலில் வென்றிட வேண்டும். எனக்குப் பிடித்தது, நான் நேசித்தது. எனக்கு நிச்சயம் வேண்டும்! மனம் முழங்கியது.

இன்று வழி கண்டேன்,
இளங்கலை தமிழ் படிக்க முடிவு செய்துள்ளேன் :)

என் முதல் காதல், தமிழ் படிக்க வேண்டும் என்பது.


தந்தையோ, "தொழில…

தொடர்கதை --> காதலி காதலி!#14

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12 | #13


தில்லியைச் சென்று அடைந்திருந்தான் முரளி. ரயில் நிலையம், புரியாத மொழி, சற்று பதட்டமாகத் தான் இருந்தது!

நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறான் முரளி, "இந்தி தெரியாம தில்லிப் பக்கம் போனா, கொஞ்சம் பாத்து தான் இருக்கணும்.."

அது வரை அப்படிப் பதட்டமாக உணர்ந்ததில்லை முரளி. தன்னை அழைக்க வருவதாய்ச் சொன்னவரும் வரவில்லை அங்கு.

அலைபேசியை வெளியே எடுத்தான். பட படவென எண்களை அழுத்தினான். அந்த எங்கள் நியாபகமாக இருந்தது, என்றும் மறக்காத எண்கள்.

பேசிமுடித்து வைத்தான் அலைபேசியை. இன்னும் சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னதால், அமர்ந்தான் அங்கிருந்த வரிசை நாற்காலிகளில். சுற்றி பார்வையைப் பரவவிட்டான்.

பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த நகர மக்கள். அப்போது தான் ரயில் வந்து சென்றிருந்ததால், கூட்டம் நிறையவே இருந்தது.

கூட்டத்தில் தன் உடைமை எதையும் இழக்க விரும்பாத முரளி, பத்திரமாக தன் பையை, கையிலேயே வைத்திருந்தான்.

என்ன தான் பெரும் நகரமாக இருப்பினும், தலை நகரமாக இருப்பினும், நெரிசலும் மாசும் அத…

உனக்காக சில வரிகள்! #1

உனக்காக என் நாட்குறிப்பின்,
சிறு கிறுக்கல்கள்!

♥ ♥
என்னவோ! தேர்வுகள்
எழிது தான்!
அதில் நீ என்னை காதலோடு,
அதட்டலாய்ப் பரிட்சிக்காத வரை!

♥ ♥
நாளின் இருபத்திநான்கு மணிநேரம்,
நீள வேண்டும்,
நின் நேசம் அந்நேரமும் என்னை,
நீவ வேண்டும்!

♥ ♥
தலையணையோடு சண்டையிட்டே,
கோபம் தீர்த்தேன்!
பொம்மைக்கு முத்தமிட்டே,
காதல் வளர்த்தேன்!
இரவெல்லாம் என் இரவெல்லாம்!

♥ ♥
கானல் நீர் தான் நின் கோபம்,
அதில்,
காதல் உண்டு அது போதும்!
அது,
காயம் செய்யும் சில நேரம்!
இருந்தும் ஏங்குதே,
அதை
என் இதயம் கேட்குதே!

♥ ♥
முற்றியபின் தலை குனியாத நல்ல நெல்லும்,
காதலில் நாணாத தமிழ்ப் பெண்ணும்,
உலகில் உண்டோ?

தொடர்கதை --> காதலி காதலி!#13

முந்தைய பாகங்கள்:

காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11 |  #12


அந்தச் சின்ன வீடு, ஏழ்மையின் சின்னமாக இருந்தது. மருந்து வாசனை நிறைந்து இருந்தது வீடு முழுவதும், குமாரசாமியின் தோற்றமும், அந்த மருந்து வாசனையும், அவரது உடல் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டு இருந்தன.

"குமாரண்ணே, ஆளே மாறிப் போய்ட்டிங்களே.. ஒடம்புக்கு என்னாச்சு? முன்னாடி எவ்ளோ திடமா இருப்பிங்க, என்ன சொல்விங்கலே, வயசுப் பையன் நல்லா சாப்டுபா, ஒல்லியா இருக்கியேன்னு.. உங்க ஒடம்புக்கு இப்போ என்னாச்சு-ணா?"

"ஒண்ணும்ல தம்பி, முன்னாடி நல்லா இளம் வயசுல, தண்ணி போட்டுட்டு திரிஞ்சேன், கொஞ்ச வயசு ஒன்னும் தெரியல, ஆனா இப்போ தான் எல்லாம் வேலையக் காட்டுது, வைத்துல புத்துநோய் கணக்கா ஏதோ வந்த்ருக்காம்.. மருந்து சாப்டுட்டு இருக்கேன்.. என் பொண்டாட்டி போனப்றம் ரொம்ப சிரமமா போச்சுப்பா., ஒத்தைல இந்த வியாதியோட அவதிப்படறேன், என் பையன் எனக்கு மாசம் மாசம் பணம் மட்டும் குடுக்கறான், பணம் குடுக்கக் கூட அவன் இங்க வரது இல்ல, யார்கிட்டயாவது குடுத்து விடுவான், பணம் போதுமாப்பா?, இப்போ எனக…

தொடர்கதை --> காதலி காதலி!#12

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10 |   #11

காரைக்குடி, அந்த வரிசை வீடுகளின் முன் வந்து தேவதை போல, அழகாய், வெள்ளை நிறத்தில், சொர்க்கம் போல நின்றது அந்த மகிழ்வுந்து.

கதவு திறந்தது, உள்ளிருந்து இறங்கினார், வெள்ளைச் சட்டை, கருப்பு கால்ச்சட்டை அணிந்த ஒருவர். வயது முப்பது தான் இருக்கும், மிடுக்காய் இருந்தார். ஆயினும், அனுபவம் பளிச்சிட்டது கண்களில். கையில் விலை உயர்ந்த கடிகாரம். பார்த்தாலே பெரும் பணக்காரர் என்று பட்டது.

நீண்ட நாட்களாக, தண்ணீருக்காய் ஏங்கிய ஒரு பாலைவன வழிப்போக்கன் போல, பார்வையில் தாகம் இருந்தது, தேடல் தெரிந்தது.

தனக்குத் தெரிந்த ஒன்றை, தொலைத்த ஒன்றை விட்டுச் சென்ற ஒன்றைத் தேடி வந்தவன் போலத் தேடினார் எதையோ.

அந்த வரிசை வீடுகளில், ஒரு வீட்டின் முன் பதிந்தது அவரது பார்வை.

அந்த வீட்டின் வாசலில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பத்து வயதுக்கு உள்ளே இருக்கும் அவர்களுக்கு. இந்தக் காட்சியைப் பார்த்த அந்த பணக்காரரின் முகம் சற்று வாடியது. தேடி வந்தது, தொலைந்தே போனது நிரந்தரமாய் என்பது போல இருந்தது அவரது உணர்வு.

குண்டான தோ…

தொடர்கதை --> காதலி காதலி!#11

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 | #10
ரயிலின் தாலாட்டில் அம்மாவின் நினைவு தான் வந்தது முரளிக்கு. சன்னலோரம் வீசும் குளிர்ந்த காற்று அம்மாவின் சுவாசம் தீண்டும் சுகம் தந்தது. வாகனங்களால் விஷமாகிப் போன வளியில் இன்னும் கொஞ்சம் ஈரம் காற்றில் மிஞ்சி தான் இருக்கிறது, அதற்கு சான்றாய் இருந்தது அந்த வாடைக் காற்று. நினைத்துப் பார்த்தான்.

தான் தூங்கிவிட்டதாக எண்ணி, தினமும் தன் நெத்தியில் முத்தமிடும், முத்தமிட்டவாறே அழும் தன் தாயின் அன்பு.

இனி மீண்டும் என்று கிடைக்கும் அந்த முத்தம்? தந்தை அருகில் இல்லாவிடினும், நத்தைக்குக் கூடு போல, ஆமைக்கு ஓடு போல, தன்னை வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் மூடி அணைத்துக் காத்து வந்த அன்னையின் பிரிவு அவனை வாட்டியது. நரகத்தின் மடியில் இருப்பது போல உணர்ந்தான் தாயின் பிரிவில்.

இதுவரை ஆசையாய் முத்தமிட்டு காலையில் எழுப்பிய தாயின் குரல் கேட்காமல் விடியலெல்லாம் வசந்தம் இழந்திடுமே!

உறங்கிடும் வேளையில் கூட அன்பாய் தலை கோதும் அந்த அன்புத் தீண்டல் இன்றி, இனி இரவுகள் இருண்டு போகுமே! சூனியம் ஆகுமே!

உணவில் சத்துக்களை விட, அன்பின் விகிதம…

தொடர்கதை --> காதலி காதலி!#10

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 அழகாய் விடிந்திருந்தது அந்த நாள். வீட்டின் வாசலில் அழகாய் பிள்ளையார் கோலத்தின் ஊடே நிமிர்ந்து அமர்ந்திருந்தார். பால் காய்ச்சி முடித்தாயிற்று என்று காற்றில் வரும் பால் வாசம் பறை கொட்டியது.

அடுப்படியில் சாம்பார் கொதித்துக் கொண்டிருக்க, காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் ரேணுகா.

அவளது நெத்தியின் முன் ஊசலாடும் கருங்கூந்தல் இன்று வெள்ளையாய் வெள்ளியாய் மின்னியது.

நிமிர்ந்த தேகம் சற்றே தளர்ந்து இருந்தது. தேகம் தளர்ந்தாலும், அவள் உள்ளிருந்த பாசம் தளரவில்லை, அதிகாலையிலேயே முரளிக்காக சமைக்கத் தொடங்கி இருந்தாள்.

நாற்பது வயது கடந்து இரண்டு வருடங்கள் தான் ஓடி இருந்தாலும், ஐம்பது கடந்தவள் போல் தளர்ந்திருந்தாள்.

செடியை விட்டுப் பறித்த மலரும், கணவனை விட்டுப் பிரிந்த பெண்ணும், சீக்கிரம் வாடித் தான் போவார்கள் போலும்.

முரளி பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான். மீசை முளைத்து, மிடுக்காய் வளர்ந்து நின்றான் முரளி. வயது இருபது கடந்து இருந்தான்.பார்த்தவுடன் எந்தப் பெண்ணையும் வசீகரிக்கும் தோற்றம், ஆணழகனாய் மெருகேறி இருந்தான்.பெட்டிக்க…

தொடர்கதை --> காதலி காதலி!#9

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி! #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8


அன்று இரவும் இருட்டில் தன் நினைவுகளை அசை போட்ட வண்ணம் படுத்திருந்தாள் பாடலின் துணையோடு ரேணுகா, நிலவும் குளிர்ந்த காற்றும் அவளது நினைவுகளைக் கலைக்க சாளரத்தின் வெளியே போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

ராமுவின் மீது இருந்த காதல், பிரிவின் போது நரகமாய் வருத்தியது. தனது முட்டாள் தனத்தால் பிரிந்த அவர்களது உறவை, காதலை, வாழ்க்கையை, எண்ணி எண்ணி கண்ணீர் விடுவதே இரவில் அவளது முழு நேர வேலையாகிப் போய் இருந்தது.

கற்பனை செய்வாள், தன் அருகே ராமு படுத்து தன் கை பற்றி தன் கண்ணீர் துடைப்பதாக. நெற்றியின் முன் ஊசலாடும் தனது கூந்தலை கையால் ஒதுக்கி, கதை பேசுவதாய்.

கற்பனையிலேயே தனது வாழ்க்கை ஓடி விடுமோ என்ற பயம் தொடங்கி விடும் கற்பனை ஒத்திகைகளின் முடிவில்.

பக்கம் படுத்திருக்கும் அன்பு மகனின் தூங்கும் விழிகள் கூட "அப்பா எப்போமா வருவாங்க?" கேள்வி கேட்பது போலவே தோன்றியது அவளுக்கு.

கண்ணீரோடு முரளியின் முகம் பார்த்து, நெத்தியில் முத்தம் வைத்துத் தலை கோதி முடிக்கும் வேளை, மனம் சற்று லேசானது போல் தோன்றினாலும், முரளியை எப்படி நல்ல விதமாய…