எப்படி இப்படி ஒரு காதல் வந்ததென்று, வியக்க அவசியமில்லை.
சிறு வயது முதலே உன்மீது எனக்குக் காதல் இருந்தது உள்ளூரே!
எல்லாத் தந்தையையும் போல, என் தந்தைக்கும் என் காதலில் நம்பிக்கை இல்லை.
இந்தக் காதல் என் வாழ்வை நன்றாக அமைக்குமோ? தயக்கம் கொண்டார்.
வேறு ஒரு காதலைக் கை காட்டி, காதலி என்றார்.
தந்தையிடம் வாதாடி, தோற்றுத் தான் போனேன்.
அவர் கை காட்டியதையே காதலித்தேன். காதலிக்கிறேன் இன்றும்.
"விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்ப கற்றுக் கொள்ள வேண்டும்", யாரோ சொன்னதாய் நினைவு.சரியாகப் பின்பற்றினேன் இதை.

இருப்பினும், என் முதல் காதல், நான் நேசித்து சுவாசித்து, உருகி ஏங்கிய காதல்! புத்தியில் அது மறைந்து போய் இருந்தாலும், மனதில் நீங்காது இருந்து வந்தது! பழைய காதலை எண்ணி ஏங்கிய இரவுகள் மிக நீளமானவை.
அன்று இரவு, தோன்றியது, எப்படியேனும் என் முதல் காதலில் வென்றிட வேண்டும். எனக்குப் பிடித்தது, நான் நேசித்தது. எனக்கு நிச்சயம் வேண்டும்! மனம் முழங்கியது.
இன்று வழி கண்டேன்,
இளங்கலை தமிழ் படிக்க முடிவு செய்துள்ளேன் :)
என் முதல் காதல், தமிழ் படிக்க வேண்டும் என்பது.
தந்தையோ, "தொழில் நுட்பம் படி" என்றார். வாழ்வு சிறக்கும், நிறைய புதியதாய் கண்டுபிடிக்கலாம். உயிரியல் தொழில்நுட்பம் படிக்கிறேன் இன்று.
அருமையான தொழில்நுட்பம் தான். மிகவும் பிடித்துள்ளது தான்.
ஆயினும், என் முதல் காதல் போல் வருமா? என் தமிழை நான் நேசித்துப் படிப்பது போல வருமோ?
ஆகையால், இளங்கலை - தமிழ் - அஞ்சல் வழிக் கல்வி - முடிவு செய்து விட்டேன்.
என் காதல், என் கையில்!
மிகுந்த மகிழ்ச்சி!
பிடித்ததைப் படிக்க முடியவில்லை, பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்,
சோர்ந்து போக வேண்டாம்! நீங்கள் நினைத்தால், ஏதேனும் ஒரு வழியில் நிச்சயம் உங்கள் காதலை அடையலாம்!
லட்சியம் அடைய வாழ்த்துக்கள்!
நல்ல வழி . அருமையான முடிவு. எனக்கும் படிக்கும் ஆசை வந்து விட்டது. நன்றி தங்கையே :) வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா, சேந்து படிக்கலாம் நாம!
நீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குvery nice!
பதிலளிநீக்கு//என் காதல், என் கையில்!
மிகுந்த மகிழ்ச்சி!//
காதல் இனிதே அமைய
வாழ்த்துக்கள் சகோதரி...காதல் தொடரட்டும்!
நன்றி தோழரே! :)
நீக்குSo sweet!
பதிலளிநீக்கு