முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாவம் இவை எல்லாம்!!!

என்றோ ஆயுத பூஜைக்கு போட்ட மாலையுடன், ஏங்கி நிற்கும்., கடைகளின் பெயர்ப் பலகைகள்!!!
கல்யாணம் முடிந்த பின்பு., கவனிக்கப்படாமல் போன, வாழை மரங்கள்!!!
எல்லை மீறிக் கட்டியதால்., இடிக்கப்படும் கட்டிடங்கள்!!!
கழிவு பெருகி ஓடுவதால், கொக்கை இழந்த குளம் குட்டைகள்!!!
கட்டிடங்கள் எழுப்ப., கற்கள் ஊன்றி., காத்திருக்கும் விவசாய நிலங்கள்!!!
ஞாயிறு விடுமுறையில்., பிள்ளைகளை எண்ணி வாடும், பள்ளிக்கூட வகுப்பறைகள்!!!
நீ பேசாத நாட்களில் மூச்சை வெறுக்கும் நான்!!!


பெண்ணின் கண்கள்!!!

கொஞ்சிப் பேசும்  சகோதரனிடம்  செல்லப் பார்வை!!!
அன்பாய் பேசும்  அன்னையிடம் , அணைக்கும் பார்வை!!!            
தெம்பாய் பேசும்  தந்தையிடம், நிம்மதிப் பார்வை!!!
சீண்டிப் பேசும்  தோழியிடம்  சிணுங்கள் பார்வை!!!! 
காதல் பேசும், கணவனிடம்  தீண்டல் பார்வை!!! 
கழுகுப் பார்வை பார்க்கும்
கயவர்களை எரிக்கும்,
கோபப் பார்வை!!!

சில சமயம்
பொய்யைக்  கூட
மெய்யாய் பேசும்
நச்சுப் பார்வை!!!

பார்வையிலே பேசும்,
பழகும் வித்தை,
புரிந்தவள் இவளே!!!டா !!!

போ"டா" வா"டா" போடுவது,         மரியாதை குறைவு,          நினைத்திருந்தேன்             நேற்று வரை!!! 
    நீ "போடா னு சொல்லு"          கேட்ட போது தான்.,            "டா" வில் உள்ள ,       காதல் உணர்ந்தேன்...!!! 
     "ச்சிப்  போடா.."        நான் சொல்ல,                நீ மகிழ,      நூறாயிரம் முறை    நேசத்தோடு சொல்ல  விழைகிறேன், "போடா!!!"

ஆகாயத் தாமரை :

ஒவ்வொரு நொடியும்,  காதோரம், நீ பேசும் வார்த்தைகள், நீரூற்றி என் இதயக் குளம், நிறைக்க.... 
அதில் என் காதல்,  அதிவேகத்தில் வளர்கிறது, ஆகாயத் தாமரையாய்,  அன்பினால்!!!  
பேசாமல் நாணின நான்  பேச நினைத்த வார்த்தைகள் கூட!!! 

திறமைகள் அழகாகும் தருணம்!!!

நாட்டியம், இசை, ஓவியம், கவிதை, நடிப்பு, நகைச்சுவை... கலைகளின் எண்ணிக்கை  கை விரல்களால்  எண்ண இயலாது!!
கலைஞனின் திறமைகள், கரை சேரும் அற்புதத் தருணம்  கருவறை சொந்தமோ, வழி வந்த பந்தமோ, இறுதியில் கைபற்றும், இணைப்போ!!
நம் பிரியமானவருக்காக, நேசத்தோடு நேர்த்தியாய் நுணுக்கம் சேர்த்து  செதுக்கும் பொழுதே, திறமைகள் அழகாகின்றன!!!

கல்லூரி மரங்களும் ...!!!

கடைசி வகுப்பு  கடைசியில் நடக்காமல் விடுமுறை விட்டார்கள்!!! பொங்கலை முன்னிட்டு  பட்டமாய் எங்களை பறக்கவிட!!!

தோழிகளோடு நான்  பேருந்து ஏற  பறந்து வந்து, கூட்டம் போட்டு,  குரலெழுப்பி கதைகள் பறக்க விட,
ஒரு மணி நேரம், ஒன்றுமே இல்லாமல்; "என்ன பேசினோம்???" விடையே தெரியாமல், நீண்டு கொண்டு நிலவை எட்டியது எங்களது அரட்டை!!
கடைசியில் பேருந்து நடத்துனர் விரட்டிய விரட்டில், வேகமாய் நாங்கள், பேருந்தில் ஏறிட,
கல்லூரி மரங்களும், கதை பேச, கற்றுக் கொண்டு இருந்தன, கிளைக் காதுகளால்  எங்கள் கதைகளை கேட்ட பின்பு!!! 
கல்லூரி மரங்களும் கீதம் பாடும், எங்கள் குரலோசை கேட்ட பின்பு!!!
அன்பிற்கும் உண்டோ!!!!

எனக்கு முதல் எதிரி அவன் தான்,
அவனுக்கும் நான் அப்படித் தான்!!!

பகிர்ந்து கொள்வது.,
பகல் கனவு இருவருக்குள்ளும்!!!

பாசமலர்களின் எதிர்மறை ,
பொருத்தமாக நாங்கள் இருவருமே!!!

இருவருக்குள்ளும் நெருக்கம்
இருப்பதே,
அன்று அவன்
 கீழே விழுந்து குருதி சொட்ட,
கிறங்கி வந்த போதுதான்
புரிந்தது!!!

துடித்துப் போய்
தன்னையும் அறியாமல்
கசிந்திருந்தன கண்மணியின்
கண்கள்,
நனைந்திருந்தன கன்னங்கள்!!

" அழாத "
கண்களை துடைத்த அவன் கரங்கள்!!!
அந்த நொடி,
உள்ளே இருந்த

உயிரின் வார்த்தைகள்
கண்ணீராய் பேசியது
அவனிடம்!!!

சிறு சிறு சீண்டல்களால்
சின்னதாகிப் போவதில்லை
எங்கள் அன்பு!!!

உலகத்தில் உன்னதமான
உயிருள்ள உறவு,
சகோதரன் சகோதரி!!!
முடிவுகள்!!!

பரிட்சைக்கு முன் தினம்  பத்து மணி, படுத்து விட்டேன்!!! முடிவுகள் இன்றாம், முகம் கழுவி விழித்திருக்கிறேன்!!


"கடவுளே..
தேரிடனும் பலமா!!!"
இணையத்தில் வரும்
இன்றைய முடிவுக்காக,
கணினியின் முகம்
பார்த்து,
காத்திருக்கும் இரவுகள்
மட்டும்
கடவுள் கண்ணுக்கு
நெருக்கமாய் இருக்கிறார்!!

வேண்டேன்!!!

தொலைந்து போன கனவுகளையும்;
தொலைத்துப் போன கனவுகளையும்,
மறந்து போன பின்பும்;
மௌனமாய் புன்னகைக்கும்,
உந்தன் நினைவுகள்,
ஊமையாய் உயிருள்ளே!!!


நின்னை வேண்டேன்.,
நின் நினைவுகள் மட்டும்.,
நிரந்தரமாய்ப் போதும்!!!
நின்னை வேண்டேன்!!!

சபலம் சூறையாடியது அவனை!!! ---> உஷார்!!!

பாத்திரம் முழுவதும்,
குருதியை நிரப்பி,
கண்முன் வந்து
சிரிக்கிறான்!!!

கண்ணை மூடி
உறங்க இயலாமல்,
சபலம் தந்து
நடிக்கிறான்!!!

இன்னும் இன்னும்
இதயத்தை இறுக்கி,
ஈட்டி கொண்டு
இடிக்கிறான்!!!

சந்தோஷத்தைக் கூறு
போட்டுப் பூட்டி
சாவி தொலைத்து
வதைக்கிறான்!!!

பதுமைகளைப் பார்க்கும்
பொழுதெல்லாம்
கூறு போட்டுக்
கொல்கிறான்!!!

ஊதி ஊதி
புகையை விட்டு
வாழ்வில் நெருப்பு
மூட்டினான்!!!

பொழுது போக்கை
போதை ஏற்றி
உயிரைக் கொஞ்சம்
குடிக்கிறான்!!!

இயந்திரம் போல
இயக்கி வைத்து
இயல்பை வெறுக்க
வைக்கிறான்!!!

கொடூரம் கொண்ட
காமன் அவன்
அம்பு வீசி
வீழ்த்தினான்!!

சுலபமாக சூறையாடி
அவனை,
கொடிய வியாதி
கொடுத்து வீழ்த்தினான்!!!

உஷார் உஷார்
உனக்குள்ளும்
இவன் ஒளிந்து
இருக்கிறான்!!!

நானும் நிலவானேன்...!!!

நிலவு அவளைப்  பாடாமலும், பார்க்காமலும் யாரும்  இருந்ததில்லை!!!
வெள்ளை நிறப்  பதுமை அவள்., கருமையினால் தான் அழகு கொண்டாள்!!!

கலங்கங்கள் காயாமல் கார் இருளில்  கருத்தில் நின்றாள்!!!
---------
என்னையும் எழிலென , ஏக வசனம்  எழுதிச்  சென்றான்!!
கருமை மேகம் அவனோடு  நானும் நிலவாம் நாணம் தந்தான்!!!
கலங்கங்கள் கொண்டதால்  தான் நானும்  காயம் தந்து  கொன்றேன் கண்ணா...!!!
நிலவென நானும் ஒரு நாள்  நடித்த கதை  இதுவே அம்மா!!!
-------------------