வெள்ளி, ஜனவரி 13, 2012

கல்லூரி மரங்களும் ...!!!
கடைசி வகுப்பு 
கடைசியில் நடக்காமல்
விடுமுறை விட்டார்கள்!!!
பொங்கலை முன்னிட்டு 
பட்டமாய் எங்களை பறக்கவிட!!!


தோழிகளோடு நான் 
பேருந்து ஏற 
பறந்து வந்து,
கூட்டம் போட்டு, 
குரலெழுப்பி கதைகள்
பறக்க விட,

ஒரு மணி நேரம்,
ஒன்றுமே இல்லாமல்;
"என்ன பேசினோம்???"
விடையே தெரியாமல்,
நீண்டு கொண்டு
நிலவை எட்டியது
எங்களது அரட்டை!!

கடைசியில் பேருந்து
நடத்துனர் விரட்டிய
விரட்டில்,
வேகமாய் நாங்கள்,
பேருந்தில் ஏறிட,

கல்லூரி மரங்களும்,
கதை பேச,
கற்றுக் கொண்டு இருந்தன,
கிளைக் காதுகளால் 
எங்கள் கதைகளை
கேட்ட பின்பு!!! 

கல்லூரி மரங்களும்
கீதம் பாடும்,
எங்கள் குரலோசை
கேட்ட பின்பு!!!

2 கருத்துகள்:

 1. nalla irukku ..... கல்லூரி மரங்களும்,
  கதை பேச,
  கற்றுக் கொண்டு இருந்தன,
  கிளைக் காதுகளால்
  எங்கள் கதைகளை
  கேட்ட பின்பு!!!
  indha varigal niramba azhaghu kondadhu ....

  பதிலளிநீக்கு