முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே,
உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து!
எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்!
சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே?
இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது!


இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான், என்ன மாதிரி ரேனு இல்ல போ...) சமத்தாகிவிட்டான் போலத் தெரிகிறது! அத்தை நேற்று எனக்குக…

நானும் “நார்த்” இந்தியனும்! #1

இந்தியா குறித்து பல இந்தியர்களுக்கே நல்ல கருத்து இல்லை என்பது உண்மை என்றாலும், அந்தப் பலருக்கும் இங்கு இருக்கும் சிறப்புகள் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது! உண்மையில் நம் இந்தியாவைப் பற்றி பள்ளியில் “வேற்றுமையில் ஒற்றுமைகொண்ட நாடு” என்று நான் படித்த போதெல்லாம் அது எவ்வளவு ஆழமான உண்மை என்று அறிந்திருக்கவில்லை, ஆனால், இப்போது, உணர்ந்து கொண்டு இருக்கிறேன்! ”வேற்றுமையில் ஒற்றுமைகொண்ட நாடு இப்படி எழுதையில் உண்மையில் ஏதோ ஒரு பெருமிதமான  உணர்வு எனக்குள்!

சரி சரி மொக்க போடாம நாம கதைக்குள்ள வருவோம்!இது வரை உள்ளூரில் (அதான் என் ஊர் சிவகாசியில்) மட்டுமே குப்பை கொட்டியவள் நான். வெளியூர் சென்று தனியாக இருந்து பழக்கமே இல்லாத எனக்கு, இரண்டு மாதம் திருவனந்தபுரத்தில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வந்து இப்போது ஒரு மாதம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை! இங்கு வந்து நான் தங்கி இருக்கும் விடுதியில் என்னுடைய அறையில் இருப்பது ஒரு தில்லிப் பெண்.
”இந்தி, ஆங்கிலம்”, இது அவளுக்குத் தெரிந்த மொழிகள். எனக்கோ, “தமிழ், ஆங்கிலம்”! ஆக, இருவருக்கும் தெரிந்த ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினோம். உண்மையில் ஆங்கிலம் தெரிய…