ஞாயிறு, ஜனவரி 29, 2012

பெண்ணின் கண்கள்!!!கொஞ்சிப் பேசும் 
சகோதரனிடம் 
செல்லப் பார்வை!!!

அன்பாய் பேசும் 
அன்னையிடம் ,
அணைக்கும் பார்வை!!!            

தெம்பாய் பேசும் 
தந்தையிடம்,
நிம்மதிப் பார்வை!!!

சீண்டிப் பேசும் 
தோழியிடம் 
சிணுங்கள் பார்வை!!!! 

காதல் பேசும்,
கணவனிடம் 
தீண்டல் பார்வை!!! 

கழுகுப் பார்வை பார்க்கும்
கயவர்களை எரிக்கும்,
கோபப் பார்வை!!!

சில சமயம்
பொய்யைக்  கூட
மெய்யாய் பேசும்
நச்சுப் பார்வை!!!

பார்வையிலே பேசும்,
பழகும் வித்தை,
புரிந்தவள் இவளே!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக