புதன், ஜனவரி 04, 2012

சபலம் சூறையாடியது அவனை!!! ---> உஷார்!!!

பாத்திரம் முழுவதும்,
குருதியை நிரப்பி,
கண்முன் வந்து
சிரிக்கிறான்!!!

கண்ணை மூடி
உறங்க இயலாமல்,
சபலம் தந்து
நடிக்கிறான்!!!

இன்னும் இன்னும்
இதயத்தை இறுக்கி,
ஈட்டி கொண்டு
இடிக்கிறான்!!!

சந்தோஷத்தைக் கூறு
போட்டுப் பூட்டி
சாவி தொலைத்து
வதைக்கிறான்!!!

பதுமைகளைப் பார்க்கும்
பொழுதெல்லாம்
கூறு போட்டுக்
கொல்கிறான்!!!

ஊதி ஊதி
புகையை விட்டு
வாழ்வில் நெருப்பு
மூட்டினான்!!!

பொழுது போக்கை
போதை ஏற்றி
உயிரைக் கொஞ்சம்
குடிக்கிறான்!!!

இயந்திரம் போல
இயக்கி வைத்து
இயல்பை வெறுக்க
வைக்கிறான்!!!

கொடூரம் கொண்ட
காமன் அவன்
அம்பு வீசி
வீழ்த்தினான்!!

சுலபமாக சூறையாடி
அவனை,
கொடிய வியாதி
கொடுத்து வீழ்த்தினான்!!!

உஷார் உஷார்
உனக்குள்ளும்
இவன் ஒளிந்து
இருக்கிறான்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக