![]() |
என் அன்பு; என் செல்லம்; கோகுல் ---> என் சகோதரன் :) |
அவனுக்கும் நான் அப்படித் தான்!!!
பகிர்ந்து கொள்வது.,
பகல் கனவு இருவருக்குள்ளும்!!!
பாசமலர்களின் எதிர்மறை ,
பொருத்தமாக நாங்கள் இருவருமே!!!
இருவருக்குள்ளும் நெருக்கம்
இருப்பதே,
அன்று அவன்
கீழே விழுந்து குருதி சொட்ட,
கிறங்கி வந்த போதுதான்
புரிந்தது!!!
துடித்துப் போய்
தன்னையும் அறியாமல்
கசிந்திருந்தன கண்மணியின்
கண்கள்,
நனைந்திருந்தன கன்னங்கள்!!
" அழாத "
கண்களை துடைத்த அவன் கரங்கள்!!!
அந்த நொடி,
உள்ளே இருந்த
உயிரின் வார்த்தைகள்
கண்ணீராய் பேசியது
அவனிடம்!!!
சிறு சிறு சீண்டல்களால்
சின்னதாகிப் போவதில்லை
எங்கள் அன்பு!!!
உலகத்தில் உன்னதமான
உயிருள்ள உறவு,
சகோதரன் சகோதரி!!!
கருத்துகள்
கருத்துரையிடுக