செவ்வாய், ஜனவரி 03, 2012

நானும் நிலவானேன்...!!!

                             


நிலவு அவளைப் 
பாடாமலும்,
பார்க்காமலும் யாரும் 
இருந்ததில்லை!!!

வெள்ளை நிறப் 
பதுமை அவள்.,
கருமையினால் தான்
அழகு கொண்டாள்!!!


கலங்கங்கள் காயாமல்
கார் இருளில் 
கருத்தில் நின்றாள்!!!

---------

என்னையும் எழிலென ,
ஏக வசனம் 
எழுதிச்  சென்றான்!!

கருமை மேகம்
அவனோடு 
நானும் நிலவாம்
நாணம் தந்தான்!!!

கலங்கங்கள் கொண்டதால் 
தான் நானும் 
காயம் தந்து 
கொன்றேன் கண்ணா...!!!

நிலவென நானும்
ஒரு நாள் 
நடித்த கதை 
இதுவே அம்மா!!!

-------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக