செவ்வாய், ஜனவரி 31, 2012

பாவம் இவை எல்லாம்!!!

என்றோ ஆயுத பூஜைக்கு
போட்ட மாலையுடன்,
ஏங்கி நிற்கும்.,
கடைகளின் பெயர்ப் பலகைகள்!!!

கல்யாணம் முடிந்த பின்பு.,
கவனிக்கப்படாமல் போன,
வாழை மரங்கள்!!!

எல்லை மீறிக் கட்டியதால்.,
இடிக்கப்படும் கட்டிடங்கள்!!!

கழிவு பெருகி ஓடுவதால்,
கொக்கை இழந்த
குளம் குட்டைகள்!!!

கட்டிடங்கள் எழுப்ப.,
கற்கள் ஊன்றி.,
காத்திருக்கும் விவசாய நிலங்கள்!!!

ஞாயிறு விடுமுறையில்.,
பிள்ளைகளை எண்ணி வாடும்,
பள்ளிக்கூட வகுப்பறைகள்!!!

நீ பேசாத நாட்களில்
மூச்சை வெறுக்கும்
நான்!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக