முந்தைய பாகங்கள்:
காதலி காதலி! #1 | #2 | #3 | #4 | #5 | #6 | #7 | #8 | #9 | #10 | #11 | #12
அந்தச் சின்ன வீடு, ஏழ்மையின் சின்னமாக இருந்தது. மருந்து வாசனை நிறைந்து இருந்தது வீடு முழுவதும், குமாரசாமியின் தோற்றமும், அந்த மருந்து வாசனையும், அவரது உடல் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டு இருந்தன.
"குமாரண்ணே, ஆளே மாறிப் போய்ட்டிங்களே.. ஒடம்புக்கு என்னாச்சு? முன்னாடி எவ்ளோ திடமா இருப்பிங்க, என்ன சொல்விங்கலே, வயசுப் பையன் நல்லா சாப்டுபா, ஒல்லியா இருக்கியேன்னு.. உங்க ஒடம்புக்கு இப்போ என்னாச்சு-ணா?"
"ஒண்ணும்ல தம்பி, முன்னாடி நல்லா இளம் வயசுல, தண்ணி போட்டுட்டு திரிஞ்சேன், கொஞ்ச வயசு ஒன்னும் தெரியல, ஆனா இப்போ தான் எல்லாம் வேலையக் காட்டுது, வைத்துல புத்துநோய் கணக்கா ஏதோ வந்த்ருக்காம்.. மருந்து சாப்டுட்டு இருக்கேன்.. என் பொண்டாட்டி போனப்றம் ரொம்ப சிரமமா போச்சுப்பா., ஒத்தைல இந்த வியாதியோட அவதிப்படறேன், என் பையன் எனக்கு மாசம் மாசம் பணம் மட்டும் குடுக்கறான், பணம் குடுக்கக் கூட அவன் இங்க வரது இல்ல, யார்கிட்டயாவது குடுத்து விடுவான், பணம் போதுமாப்பா?, இப்போ எனக்கு பக்கத்துல ஆதரவாப் பேச ஆள் இல்லாம, நரகமா போகுதுப்பா வாழ்க்க.", அழுகாத குறையாய்ப் பேசினார் குமரேசன்.
பாசத்திற்காக ஏங்கிக் கொண்டு, தனிமையின் கொடுமையைப் பேசிக்கொண்டு இருந்தன அவரது ஒளி இழந்த கண்கள்!
"நீங்க வருத்தப் படாதீங்கணே, பேசாம நீங்க என்னோட வாங்க, நான் உங்கள பாத்துக்கறேன், நான் இப்போ நல்லா இருகேன், உங்கள நல்ல வைத்தியர்கிட்ட காட்டி, குணப்படுத்திடலாம், என்னோட வாங்க..", தனக்கு உதவி செய்த குமரேசன் அண்ணன் இன்று வாடுவதை மனம் ஏற்கவில்லை, கண்ணீரோடு அழைத்தார் ராமு.
"இல்லப்பா.. என்னதான் இருந்தாலும், உன்னோட வந்துட்டா, ஊர்ல இன்னும் என் புள்ளைய தான்பா தப்பாப் பேசுவாங்க, பாரு, யாரு பெத்த புள்ளையோ பாத்துக்குது, சொந்தப் புள்ள இருந்து என்ன புண்ணியம்னு, என் புள்ளைக்கு அந்தப் பேரு வேணாம்பா.. கால் காசுனாலும் என் புள்ளயோட காசுல வாழ்ந்துட்டு போறேன்பா.. உம்பாசத்துக்கு ரொம்ப சந்தோசம்பா.."
"ஏண்ணே இப்டி பேசறிங்க, நீங்க என் வீட்டுக்கு வரலேனாலும், நான் உங்கள அடிக்கடி வந்து பாத்துக்கறேன்.. உங்கள இப்டி பாக்க முடிலணே என்னால.."
"சரி தம்பி, என் கதையக் கேட்டா இப்டி தான் இருக்கும் அழுகையும் பாரமுமா.. நீ நல்லா இருக்கேல? நீ பெரிய அதிகாரியாகப் போறேன்னு சொல்லிட்டு ஊர விட்டுப் போனியேப்பா, உன் மனசுப்போல நடந்ததா எல்லாம்?"
"இல்லண்ணே.. நான் மாவட்ட ஆட்சியாளரா வரணும்னு நெனச்சேன்.. ஆனா முயற்சி பண்ணி, கடைசிக் கட்டத்துல தோத்துப் போய்டேன்ணே"
"அப்போ இப்போ என்ன வேலப்பா பாக்குற?"
"இப்போ ஒரு பெரிய தொழிற்சாலை வச்சுருக்கேன்ணே, ரொம்ப சிரமப்பட்டு இன்னைக்கு இந்த நிலைக்கு வந்த்ருக்கேன்ணே, என் ரேணுகாவ விட்டுப் போனப்ரமா, ரொம்ப சிரமப் பட்டு தான்ணே இந்த நிலைக்கு வர முடிஞ்சுது. இப்போ நான் நல்லா இருக்கேன் அவள நல்லாப் பாத்துக்க முடியும் என்னால, ரேணுகா இப்போ எங்கண்ணே இருக்கா?"
"ரேணுகா, ஏதோ மெட்ராசுக்குப் போறதா சொல்லிட்டு, நீ போன ரெண்டு வாரத்துலயே, கைக்கொழந்தைய தூக்கிட்டு கிளம்பிச்சுப்பா ., நானும் இங்க இருமானு சொன்னேன், கேக்லப்பா, அதோட அப்பா கூட வந்து கூப்டு பாத்தாரு, போகலப்பா.. நான் தான் கடைசிக்கு என் வண்டில கொண்டுபோய் ரயில் ஏத்திவிட்டேன்.."
"இப்போ எங்க இருக்கானு தெரியுமா மெட்ராசுல?"
"எங்கனு சரியாத் தெரியலயேப்பா.. ஏதோ ஒரு அம்ருதானு ஒரு நிறுவனத்துல வேல பாக்றதா கேள்விப்பட்டேன்.."
"அப்படியாணே, நான் போய்ப் பாக்கறேன்.. அவள விட்டுப் பிரிஞ்சு போய் ரொம்ப வருத்தப்பட்டேணே ஆனாலும் ஒரு வைராக்கியம், அதான் பெரியாலாகாம வரக்குடாதுனு இருந்துட்டேன்.. இப்போ எங்க ரேணுகாவ பாக்கவே முடியாமப் போயிடுமோனு வருத்தமா இருக்குணே.."
"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா, போய் அந்த எடத்துல விசாரிச்சுப் பாரு, விலாசம் கிடைக்கும்..."
"சரிணே, இதுல உங்களுக்கு வாங்கிட்டு வந்த துணி, பழம் எல்லாம் இருக்கு, ஒடம்ப நல்லாப் பாத்துக்கோங்க..", தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு கிளம்பினார் ராமச்சந்திரன்.
"சரிப்பா பாத்துப் போயிட்டு வா.. அடுத்த முறை ரேனுகாவோட என்னப் பாக்க வாப்பா.."
மனம் கனத்தது, வீண் வைராக்கியத்தால் ரேணுகாவை இத்தனை நாள் காணாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தார் வீட்டை விட்டு.
அந்த வரிசை வீட்டின் இறுதியில், அவரும் ரேணுகாவும் முதலில் காதல் வாழ்க்கை தொடங்கிய வீடு, இன்று வேறு யாரோ குடியிருந்தார்கள் அதில், ஆனால், இன்னும் அந்த வீட்டின் வாசலில் ரேணுகா பெட்டியோடு வந்து நின்ற இரவு, தன்னைக் கட்டி அணைத்து அழுதது காட்சியாய்த் தெரிந்தது அவருக்கு. மீண்டும் அதே போல் காதல் வாழ்க்கை வாழ மனம் ஏங்கியது.
காட்சியைக் கலைத்தது, விழியில் தேங்கிய நீர்...!
தான் வந்து சென்றதற்கு அடையாளமாய், கண்ணீரை விட்டுச்சென்றார்.
நினைவுகளோடு, பயணத்தைத் தொடங்கினார் ராமச்சந்திரன் சென்னையை நோக்கி.
------------------------------------------------------------------------------------
சேர்ந்தார்களா ரேணுகாவும் ராமுவும்? வாசிக்கலாம் வரும் பாகங்களில்.

கருத்துகள்
கருத்துரையிடுக