முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#15

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13 | #14


அருமையான உணவு, தமிழ்நாடும் தில்லியும் சேர்ந்தார் போல இருந்தது!
தமிழக உணவு வகைகளும், தில்லியின் உணவு வகைகளும் சேர்த்துப் பரிமாறி இருந்தார்கள்.

சிந்துவின் தந்தையும் முரளியும் சாப்பாட்டு மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க, சிந்து மறுபுறம் அமர்ந்திருந்தாள் முரளியின் எதிரே!

சிந்துவின் தந்தையும் முரளியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிந்துவின் தந்தை வெங்கட்ராமன். சற்று ஒல்லியான உடல், வயதால் கண்களுக்குக் கீழ் கருப்புப் படிந்திருந்தது! ஐந்தரை அடி உயரம்!

" அப்போ இங்க நம்ம வீட்டு மாடில எடம் இருக்குது தம்பி, இங்கயே தங்கிக்கோங்க.", வெங்கட்ராமன் முரளியிடம் சொல்ல,

"இல்லபா, என்னோட நண்பனோட வீடு, பயிற்சி மையத்துக்கு பக்கத்லயே இருக்கு. அதனால அங்க தங்கிக்கறேன். அது தான் வசதியா இருக்கும்."

"சரி தம்பி, வாரத்துக்கு ஒரு தடவ சனி ஞாயிறு இங்க வாங்க.. நல்லபடியா படிங்க, இங்க தங்குனா இந்த சிந்துவே உங்கள படிக்க விடமாட்டா.. அதுவும் இருக்கு.", சொல்லியவாறே செல்லமாய் சிந்துவைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"அப்பா .. உங்களுக்கு என்ன வம்புக்கு இழுக்கலைனா தூக்கம் வராதே.. ஆமா முரளி, உன்ன நான் படிக்க விடமாட்டேன், அப்பா சொல்றதும் சரி தான். மாடில இருந்தேனா உன்கிட்ட வந்து பேசிப் பேசியே படிக்க விடாம செஞ்சிடுவேன்.", சொல்லி விட்டு குறும்பாய் சிரித்தாள் சிந்து.

"சாப்டுங்க சும்மா பேசிக்கிட்டு இருக்காம,", தன் பங்குக்குப் பேசினார் சிந்துவின் அம்மா.

சாப்பிட்டு முடித்து கிளம்பினான் முரளி தன் நண்பனின் வீட்டுக்கு.

"நானும் வரேன்டா, வீட பாத்துக்கிட்டேன்னா அடுத்து நானா வந்துடுவேன்ல..?",உடன் கிளம்பினாள் சிந்து.

"ம்ம்.. அங்கயும் நான் படிச்சிடக்குடாது.. வந்துடனும்.. என்ன?", செல்லமாய்க் கேட்டான் முரளி.

"உனக்கு நான் பேசுனா எப்டி தான் இருக்குமோ.. போடா நான் வரல."

"ஏ ஏ சும்மா சிந்து, உன்கிட்ட பேசாம எங்க போகப் போறேன்.."

"நீ பேசலனாலும் சும்மா விட்ருவனா.. வா வா கெளம்பு போலாம்.."

இருவரும் செல்லமாய் சண்டையிட்டவாறே கிளம்பினார்கள் முரளியின் நண்பன் வீட்டிற்கு.

-----------------------------------------------------------------------

நண்பனின் வீட்டில் பின் பகுதியில் முரளிக்கு அறை கொடுத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்தார்கள் முரளியும் சிந்துவும். முரளியின் பொருள்களை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தார்கள்.

துணிகளை எடுத்து சிந்து அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

முரளியும் அடுக்க வந்தான். ஒரு சட்டையைக் கையில் எடுத்தான். அடியில் அவனது அம்மாவின் புகைப்படம்.

அம்மாவின் புகைப்படம் பார்த்ததும், அதைக் கையில் எடுத்து அணைத்தவாறு அமர்ந்து விட்டான் முரளி.

சோகத்தில் மூழ்கினான் முரளி. தன்னையே அறியாமல் அழத் தொடங்கினான்.

துணியை அடுக்கிக் கொண்டிருந்தவள் முரளியை கவனிக்கவில்லை.

அடுக்கி முடித்துத் திரும்பினாள் முரளியின் பக்கம்.

முரளியின் கண்ணில் கண்ணீரைப் பார்த்துப் பதறிப் போனாள் சிந்து.

"ஏ.. என்னாச்சு? முரளி........", கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தாள். கையில் இருந்த புகைப் படத்தை அப்போது தான் பார்த்தாள்.

"அம்மாவ நெனச்சு அழறியாடா?", ஏக்கமும் சோகமும் கலந்த குரலில் கேட்டவாறே, ஆறுதலாய் அவன் கை பற்றினாள்.

அமைதியாய் இருக்கும் வானம் மழையின் போது மட்டும் இடியாய் உடைவது போல, உடைந்து அழுதான். மேகமாய் அழுதான். அவளது தோளில் சாய்ந்து அழுதான். சிந்துவையே அம்மாவாய் எண்ணி அழுதான். 
அழாத முரளி, நான் இருக்கேன் உனக்கு, நீ இப்டி ஒடஞ்சு போகக் குடாது. நான் அம்மா அப்பா எலாம் உன்ன பாத்துப்போம்.", தலை கொதி ஆறுதலாய்ப் பேசினாள் சிந்து.

"உன்னப் பாத்தாதான் சிந்து தைரியமா இருக்கு, உன் சிரிப்பைப் பாத்துட்டே இருக்கலாம்"

"ம்ம், அழாத, நான் எப்பவும் உன்னோட சேந்து இருப்பேன், உன்ன நல்லா பாத்துப்பேன்.", அழுத்தமாய் முரளியின் கை பற்றிப் பேசினாள் சிந்து.

"நீ கூட இருந்தாப் போதும் சிந்து, நீ எப்பவும் இதே மாத்ரி என் கையப் புடிச்சுட்டு கடைசி வர என்னோட இருக்கணும்.."


இருவரும் பேசும் போது அழகாய்க் காதல் மலர்ந்து கொண்டிருந்தது மீண்டும் ஒரு முறை இருவருக்குள்ளும், வாசனையோடு, புதிதாய்..!

இவர்களது காதல் செடியில் இன்னொரு பூ. அன்பின் வாசம் கொண்ட பூ.


*****************************************************
அடுத்த பாகத்தில் வாசிக்கலாம் தொடர்ச்சியை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்