உனக்காக என் நாட்குறிப்பின்,
சிறு கிறுக்கல்கள்!
♥ ♥
என்னவோ! தேர்வுகள்
எழிது தான்!
அதில் நீ என்னை காதலோடு,
அதட்டலாய்ப் பரிட்சிக்காத வரை!
♥ ♥
நாளின் இருபத்திநான்கு மணிநேரம்,
நீள வேண்டும்,
நின் நேசம் அந்நேரமும் என்னை,

♥ ♥
தலையணையோடு சண்டையிட்டே,
கோபம் தீர்த்தேன்!
பொம்மைக்கு முத்தமிட்டே,
காதல் வளர்த்தேன்!
இரவெல்லாம் என் இரவெல்லாம்!
♥ ♥
கானல் நீர் தான் நின் கோபம்,
அதில்,
காதல் உண்டு அது போதும்!
அது,
காயம் செய்யும் சில நேரம்!
இருந்தும் ஏங்குதே,
அதை
என் இதயம் கேட்குதே!
♥ ♥
முற்றியபின் தலை குனியாத நல்ல நெல்லும்,
காதலில் நாணாத தமிழ்ப் பெண்ணும்,
உலகில் உண்டோ?
kudos
பதிலளிநீக்கு:) :) நன்றி :)
பதிலளிநீக்குதங்கள் இந்த கவிதையில்,கவிதையின் சாரம் உள்ளது ஆனால் கவிதையின் நடை Missing.நல்ல கவிதை தங்களின் கவிதை நடையை மேம்படுத்தினால் மேலும் அருமையாக இருக்கும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி, விஜயன். மெருகேற்ற முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்கு