முந்தைய பாகங்கள்:
காதலி காதலி! #1 | #2 | #3 | #4 | #5 | #6 | #7 | #8 | #9 | #10 | #11 | #12 | #13 | #14 | #15
| #16
"இங்க... முரளினு...", முரளி தங்கி இருந்த வீட்டில் இருந்த பெரியவரிடம் விசாரித்தார் ராமச்சந்திரன்.
"அவன் பயிற்சிக்குப் போயிருக்கான் ஐயா, இப்போ வர்ற நேரம் தான்.. நீங்க...?", பெரிய மீசை வைத்திருந்த அந்தப் பெரியவர் பதிலளித்தார். அவர் தான் முரளியின் நண்பனின் தந்தை.
"நான் முரளியோட அப்பா.."
"வாங்க, சாவி என்கிட்டே தான் இருக்கு, அவன் வர வரிக்கும் காத்திருங்க. வந்துடுவான்..நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.."
சாவியை வாங்கிக் கொண்டு முரளியின் அறையில் அமர்ந்திருந்தார்கள் ராமச்சந்திரனும் ரேணுகாவும்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை, நினைவுகளே பேசிக்கொண்டு இருந்தன அங்கே.
மகன் வந்ததும் எப்படிப் பேசுவது? என்ன சொல்வது? ஏன் இத்துனை நாள் வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது. அவனுக்கு எந்த உண்மையும் தெரியாதே.. என்னவென்று சொல்வது.. அம்மாவும் அப்பாவும் சண்டை இட்டுப் பிரிந்தோம் என்றா? மனைவி பிள்ளையை தனியே தவிக்க விட்டுச் சென்ற அப்பா என்று தன் மீது வெறுப்பு வந்துவிடுமோ? ரேணுகா தான் வெளிநாடு சென்றதாய் சொல்லி இருக்கிறாளே, அதே பொய்யை சொல்லி விடுவோமா? இல்லை வேண்டாம், தவறாக எண்ணி விடுவான் உண்மை தெரியும் போது. உண்மையை சொல்லிவிடுவோம். எல்லா உண்மையையும் சொல்லி விடுவோம். எண்ணங்கள் பழைய உடைந்த ஒலிப்பதிவுப் பெட்டி போல மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
முரளி வந்துவிட்டான். அதையும் கவனிக்காமல் எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தார் ராமச்சந்திரன்.
"அப்பா..." முரளி சற்று தயக்கத்தோடு தான் அழைத்தான்.
நினைவு கலைந்தது.
மகனாகவே இருப்பினும், இத்துனை நாள் பார்க்கவில்லையே, அருகில் இல்லையே.. என்ன பேசுவது எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று சற்று தயங்கித்தான் இருந்தார்.
முரளியின் கண்களிலும் கண்ணீர் ராமச்சந்திரனும் அழுதுவிட்டிருந்தார்.
"அப்பா.. இப்போ தான் என்ன நியாபகம் வந்ததாப்பா? எங்கப்பா போனிங்க இவ்ளோ நாள்..? என்னப் பாக்கணும் பேசணும்னு ஒருதடவ கூடத் தோனலயாப்பா? உங்களுக்கும் அம்மாக்கும் என்னப்பா பிரச்சன? கடைசி வரைக்கும் அம்மா என்கிட்டே சொல்லவே இல்லப்பா.. நீங்க வெளிநாடு போயிருக்றதா சொல்லிட்டாங்க. சின்ன வயசுல நம்பினேன் அத. பெரியவன் ஆனதும் புரிஞ்சது, உங்களுக்கும் அம்மாக்கும் ஏதோ பிரச்சனணு, ஆனா அம்மாக்கு உங்களைப் பத்திப் பேசுனாலே அழுகையும் கோவமும் வருமேன்னு கேக்ரதயே விட்டுட்டேன்"
ராமச்சந்திரன் பேசவில்லை, குற்றவாளி போல் உணர்ந்தார். கண்கள் மட்டும் பாசத்தாலும், கண்ணீராலும் பேசிக் கொண்டு இருந்தன.
"ஏன்பா என்னப் பாக்க வரல.. என்னப்பா பிரச்சன உங்களுக்கும் அம்மாக்கும்..? சின்ன வயசுல இருந்து, ஒவ்வொருத்தரும் அவங்க அப்பா கூடப் போறதப் பாக்றப்போலாம் எவ்ளோ ஏங்கிருக்கேன்னு தெரியுமாப்பா.. தினமும் அம்மா நான் தூங்கிட்டேன்னு நெனச்சு உங்களைப் பத்திப் பேசி அழுவாங்க, அதெல்லாம் எவ்ளோ நரகமா இருந்தது தெரியுமாப்பா.. ஏன்பா எங்கள விட்டுப் போனிங்க...", கண்ணீர் வழியக் கேட்டான் முரளி.
"அப்பா பண்ணது தப்புதான்பா.. மன்னிச்சிடு.. மன்னிச்சிடுப்பா.. உங்களைப் பிரிஞ்சு தூரமா இருந்தேனே தவிர, உங்கள நெனைக்காத நொடி இல்லப்பா.. உங்கள தனியாத் தவிக்க விட்டு நான் உல்லாசமா வாழப் போகலப்பா.. உங்க அம்மாவுக்கும் எனக்கும் பிரச்சனையாப் போன, பணத்த சம்பாதிக்கத் தான் போனேன்., உங்கம்மாவும் நானும் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க, எனக்காக கைய வெட்டிகிட்டு, அப்பாவப் பகச்சுக்கிட்டுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க அம்மா.. ஆனா, நாள் போகப் போக, பணம் இல்லாம சண்ட வர ஆரமிச்சது, ஒரு நாள் பெருசா சண்ட வந்து, பணம் சம்பாதிக்காம உன்னப் பாக்கக்கூட மாட்டேன்னு கெளம்புனேன். அந்தக் கோவம், உங்கம்மா பணம் இல்லன்னு பேசுன பேச்சு, இதெல்லாம் தான் என்ன இத்தன நாளா பிரிச்சுவசிருச்சு. இப்போ என்கிட்டே பணம் இருக்கு.. ஆனா...", உடைந்து அழுதார்.. " என்ன மன்னிச்சிடுப்பா...", மகன் என்றும் பாராமல் காலில் விழச் சென்றார்.
"அப்பா..", விழ விடாமல் பிடித்தான் முரளி. "அப்பா.. உங்க மேல வருத்தம் அவ்ளோதான், கோவமில்லப்பா.. உங்க மேல எனக்கு எவ்ளோ பிரியம் தெரியுமாப்பா.." அப்பாவின் மீது சாய்ந்து அழுதான்.
கண்ணீரோடு அமைதியாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரேணுகா. தான் செய்த பிழை, பணத்தின் மீது கொண்ட மோகம், தன் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டு இருந்தது என்பதை உணர்ந்தாள்.
----------------------------------------------------------------------------
முடிவு அடுத்த பாகத்தில்!
காதலி காதலி! #1 | #2 | #3 | #4 | #5 | #6 | #7 | #8 | #9 | #10 | #11 | #12 | #13 | #14 | #15
| #16
"இங்க... முரளினு...", முரளி தங்கி இருந்த வீட்டில் இருந்த பெரியவரிடம் விசாரித்தார் ராமச்சந்திரன்.
"அவன் பயிற்சிக்குப் போயிருக்கான் ஐயா, இப்போ வர்ற நேரம் தான்.. நீங்க...?", பெரிய மீசை வைத்திருந்த அந்தப் பெரியவர் பதிலளித்தார். அவர் தான் முரளியின் நண்பனின் தந்தை.
"நான் முரளியோட அப்பா.."
"வாங்க, சாவி என்கிட்டே தான் இருக்கு, அவன் வர வரிக்கும் காத்திருங்க. வந்துடுவான்..நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.."
சாவியை வாங்கிக் கொண்டு முரளியின் அறையில் அமர்ந்திருந்தார்கள் ராமச்சந்திரனும் ரேணுகாவும்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை, நினைவுகளே பேசிக்கொண்டு இருந்தன அங்கே.

முரளி வந்துவிட்டான். அதையும் கவனிக்காமல் எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தார் ராமச்சந்திரன்.
"அப்பா..." முரளி சற்று தயக்கத்தோடு தான் அழைத்தான்.
நினைவு கலைந்தது.
மகனாகவே இருப்பினும், இத்துனை நாள் பார்க்கவில்லையே, அருகில் இல்லையே.. என்ன பேசுவது எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று சற்று தயங்கித்தான் இருந்தார்.
முரளியின் கண்களிலும் கண்ணீர் ராமச்சந்திரனும் அழுதுவிட்டிருந்தார்.
"அப்பா.. இப்போ தான் என்ன நியாபகம் வந்ததாப்பா? எங்கப்பா போனிங்க இவ்ளோ நாள்..? என்னப் பாக்கணும் பேசணும்னு ஒருதடவ கூடத் தோனலயாப்பா? உங்களுக்கும் அம்மாக்கும் என்னப்பா பிரச்சன? கடைசி வரைக்கும் அம்மா என்கிட்டே சொல்லவே இல்லப்பா.. நீங்க வெளிநாடு போயிருக்றதா சொல்லிட்டாங்க. சின்ன வயசுல நம்பினேன் அத. பெரியவன் ஆனதும் புரிஞ்சது, உங்களுக்கும் அம்மாக்கும் ஏதோ பிரச்சனணு, ஆனா அம்மாக்கு உங்களைப் பத்திப் பேசுனாலே அழுகையும் கோவமும் வருமேன்னு கேக்ரதயே விட்டுட்டேன்"
ராமச்சந்திரன் பேசவில்லை, குற்றவாளி போல் உணர்ந்தார். கண்கள் மட்டும் பாசத்தாலும், கண்ணீராலும் பேசிக் கொண்டு இருந்தன.
"ஏன்பா என்னப் பாக்க வரல.. என்னப்பா பிரச்சன உங்களுக்கும் அம்மாக்கும்..? சின்ன வயசுல இருந்து, ஒவ்வொருத்தரும் அவங்க அப்பா கூடப் போறதப் பாக்றப்போலாம் எவ்ளோ ஏங்கிருக்கேன்னு தெரியுமாப்பா.. தினமும் அம்மா நான் தூங்கிட்டேன்னு நெனச்சு உங்களைப் பத்திப் பேசி அழுவாங்க, அதெல்லாம் எவ்ளோ நரகமா இருந்தது தெரியுமாப்பா.. ஏன்பா எங்கள விட்டுப் போனிங்க...", கண்ணீர் வழியக் கேட்டான் முரளி.
"அப்பா பண்ணது தப்புதான்பா.. மன்னிச்சிடு.. மன்னிச்சிடுப்பா.. உங்களைப் பிரிஞ்சு தூரமா இருந்தேனே தவிர, உங்கள நெனைக்காத நொடி இல்லப்பா.. உங்கள தனியாத் தவிக்க விட்டு நான் உல்லாசமா வாழப் போகலப்பா.. உங்க அம்மாவுக்கும் எனக்கும் பிரச்சனையாப் போன, பணத்த சம்பாதிக்கத் தான் போனேன்., உங்கம்மாவும் நானும் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க, எனக்காக கைய வெட்டிகிட்டு, அப்பாவப் பகச்சுக்கிட்டுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க அம்மா.. ஆனா, நாள் போகப் போக, பணம் இல்லாம சண்ட வர ஆரமிச்சது, ஒரு நாள் பெருசா சண்ட வந்து, பணம் சம்பாதிக்காம உன்னப் பாக்கக்கூட மாட்டேன்னு கெளம்புனேன். அந்தக் கோவம், உங்கம்மா பணம் இல்லன்னு பேசுன பேச்சு, இதெல்லாம் தான் என்ன இத்தன நாளா பிரிச்சுவசிருச்சு. இப்போ என்கிட்டே பணம் இருக்கு.. ஆனா...", உடைந்து அழுதார்.. " என்ன மன்னிச்சிடுப்பா...", மகன் என்றும் பாராமல் காலில் விழச் சென்றார்.
"அப்பா..", விழ விடாமல் பிடித்தான் முரளி. "அப்பா.. உங்க மேல வருத்தம் அவ்ளோதான், கோவமில்லப்பா.. உங்க மேல எனக்கு எவ்ளோ பிரியம் தெரியுமாப்பா.." அப்பாவின் மீது சாய்ந்து அழுதான்.
கண்ணீரோடு அமைதியாய் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரேணுகா. தான் செய்த பிழை, பணத்தின் மீது கொண்ட மோகம், தன் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டு இருந்தது என்பதை உணர்ந்தாள்.
----------------------------------------------------------------------------
முடிவு அடுத்த பாகத்தில்!
excellent
பதிலளிநீக்கு