முந்தைய பாகங்கள்:
காதலி காதலி! #1 | #2 | #3 | #4 | #5 | #6 | #7 | #8 | #9 | #10 | #11 | #12 | #13 | #14 | #15
"இங்க ரேணுகானு ஒருத்தவங்க? அவங்கள பாக்கணும்..? பாக்க முடியுமா?", ராமச்சந்திரன் கேட்டார் அந்த நிறுவனத்தில் வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம்.
"அப்படி இங்க யாரும் வேல பாக்கலையே..", பொறுமையாய்ப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.
"இல்ல... இங்கதான் ரொம்ப வருசமா வேல பாக்றதா சொன்னாங்க.."
"அப்டியா..? எனக்கு சரியா தெரிலயே, நான் வேலைக்குப் புதுசு.., கொஞ்ச நேரம் காத்திருங்க, நான் உள்ள போய் கேட்டுட்டு வரேன், இங்க உக்காந்திருங்க..", அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினார் அந்தப் பெண்.
அமர்ந்தார் அந்த நாற்காலியில் ராமச்சந்திரன். நல்ல குளிரூட்டப்பட்ட அறை, நவீனமான கட்டிடம், மெத்தென இருந்தது அந்தப் பஞ்சு நாற்காலி. முன்னே நிறைய ஆங்கில நாளேடுகள் இருந்தன மேசையில்.
நாளேடுகளைப் படிக்க மனம் வரவில்லை. ரேணுகாவைப் பார்க்க வேண்டும், ரேணுகாவின் முகம் தான் அவர் கண் முன் தெரிந்தது எல்லாப் புறமும். உள்ளே சென்ற பெண் எப்போது வெளி வருவார் என்று எட்டி எட்டிப் பார்த்தவாறு ஏக்கத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.
காதலிக்காகக் காத்திருப்பது சுகம் என்று சொல்லித் திரியும் காதலர்களைக் கண்டிருப்பீர்கள். இவர் காதலியைப் பற்றிய செய்திக்காகக் காத்திருப்பதில் இருந்த சுகத்தை உணர்து கொண்டிருந்தார்.
மனைவியானவளை இன்றும் காதலியாகத் தான் எண்ணிக் காதலித்துக் கொண்டிருந்தார். ரேணுகாவைப் பார்த்ததும் அவள் கரம் பற்றி, கட்டி அணைத்து அழ வேண்டும், ஆசையாய்ப் பேச வேண்டும், இருவரும் நெடு நேரம் வாசலில் அமர்ந்து, தெருவில் செல்வோரையும், விளையாடும் குழந்தைகளையும் பார்த்துக் கதை பேசி மகிழ வேண்டும், எண்ணங்கள் வளர்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே சென்ற அந்தப் பெண் வெளி வந்தார், உடன் இன்னொரு பெண்ணும் வந்தார். வயது ஐம்பது இருக்கும் அவருக்கு.
"நீங்க...? ராமச்சந்திரன்?", ராமச்சந்திரனைப் பார்த்த உடன் அந்தப் பெண் கேட்டார்.
"ஆமா.. உங்களுக்கு என்னத்தெரியுமா? ரேணுகா இப்போ எங்க இருக்கா? உங்களுக்கு ரேணுகாவ தெரியுமா?"
"எனக்கு உங்கள ரேணுகா சொல்லித் தான் தெரியும்"
"ரேணுகா எங்கனு கேட்டதுக்கு நீங்க சொல்லலயே..?"
"ம்ம்.. சொல்றேன்.. வாங்க நெறைய பேசணும் உங்க கிட்ட, ரேணுகா என்னோட ரொம்ப நல்ல தோழி, உள்ள போய் தேநீர் சாப்டுட்டே பேசலாம்.."
"இல்ல, எனக்கு முகவரி மட்டும் போதும்", சொல்ல நினைத்தார், ஆயினும் அப்படிச் சொல்வது நன்றாக இருக்காது என்றெண்ணி, "சரி" என்றவாறு அந்தப் பெண்ணுடன் தேநீர் அருந்தச் சென்றார்.
-----------------------------------------------------------------------------------
விமான நிலையம்,
விமானத்திற்காகக் காத்திருந்தார் ராமச்சந்திரன். அருகே ரேணுகா, அமைதியாய் அமர்ந்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அருகருகே அமர்ந்திருந்தார்கள், ரேணுகா மட்டும் ராமச்சந்திரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், காதலோடு!
ராமச்சந்திரன் மட்டும் அவள் பக்கம் திரும்பவே இல்லை, எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
கிளம்பினார்கள், விமானத்தில், தில்லி சென்று அடைந்தார்கள், பேசிக்கொள்ளவே இல்லை இருவரும்.
பழைய நினைவுகள் இருவருக்குள்ளும் நிறைந்து இருந்தது பயணம் முழுவதும். வார்த்தைகள் தான் வெளிவர மறுத்தன.
இருவருக்கும், மகனைப் பார்க்கும் ஆசை, ஆவல் நிறைய இருந்தது.
முரளியின் முகவரியை நோக்கிப் பயணப்பட்டார்கள்.
------------------------------------------------------------------------------------
இருவரும் ஏன் பேசிக்கொள்ளவில்லை? வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.

கருத்துகள்
கருத்துரையிடுக