சனி, நவம்பர் 03, 2012

யாரேனும் சொல்லுங்களேன்!

எனக்கு நுனி நாக்குல,
ஆங்கிலம் வராது!
நாகரிக உட போட,
நாணம் விடாது!
உதட்டுக்குச் சாயமும்,
நகத்துக்கு வண்ணமும்,
ஏனோ எனக்குக் கிடையாது!

ஒரு அடிக்கு,
செருப்புப் போட்டால்,
காலு நடக்காது!!
ரெட்டை ஜடை பின்னல் தவிர,
வேற தெரியாது!

கிரிக்கெட்டு ஆட்டமெல்லாம்
கொஞ்சமும் புரியாது!

காலைல எந்திச்சி,
கோலம் போட்டு,
கம்மஞ்சோறு காச்சி,
எருவு தட்டிப் போட்டு,
சோழி ஆடத் தெரியும்!

சொலவட கத பேசி,
சிரிச்சி விடுகதைக்கு,
சரியா விட சொல்லி,
சாமி கும்புட்டு,
சிவனேன்னு பாட்டுப் பாடத் தெரியும்!

எம்மாடி எம்புள்ள,
பட்டணம் போய் வந்து,
"போம்மா நீ பட்டிக்காடு,
ஒனக்கொன்னும் தெரியல..!"
சொல்லிச் சொல்லிச்
சிரிக்கிறான்!

சிரிக்க என்ன கெடக்கு?
"ஒதட்டுச் சாயமும்,
ஒரு அடிச் செருப்புமா?
தெரிய வேண்டிய சமாச்சாரம்?"
யோசிச்சுத் தான் பாக்குறேன்,
வெட கெடைக்க மாட்டேங்குது,
யாரேனும் சொல்லுங்களேன்!
யாரேனும் சொல்லுங்களேன்!8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குட்டி ரஞ்ஜனி அம்மாவா? அப்பாடி எவ்ளோ பெரிய பாராட்டு...
   ரஞ்ஜனி அம்மா கேட்டா தான் வருத்தப்படப் போறாங்க :)

   நீக்கு
 2. எதுவுமே தெரியாது, புரியாது என்றாலும்... இவர்களிடம் மனம் முழுவதும் சந்தோசம் இருக்குமே... ஏன்...? யாரேனும் சொல்லுங்களேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ளம் கபடம் இல்லாதவங்க சந்தோஷமா இருப்பாங்களாமே!

   நீக்கு
 3. வெகு நாளைக்குப் பிறகு கிராமிய மணம் கமழும் ஒரு கவிதை ! ஒரு கிராமத்துக் கருவாச்சியிடம் உள்ள அழகு , நவ நாகரிக உடையில் பதுவிசாக பவனி வரும் பெண்களிடம் இருப்பதில்லை ! அவர்களிடம் இருப்பதெல்லாம் வெளிப்பூச்சு பகட்டு ஆடம்பரம் மட்டுமே ! கவிதையின் யதார்த்தம் அழகாக வெளிப்பட்டுள்ளது தோழி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி, உண்மையாகவே அவ்வளவு நல்லா இருக்கா? நான் எழுதறது?
   நன்றி...

   நீக்கு