நேரில் பேச தைரியம் இல்லை எனக்கு, அதனால் தான் இந்தக் கடிதம். தயவு செய்து வாசியுங்கள், என் உண்மை உணர்வரிய வாசியுங்கள்! இதை வாசித்து முடிக்கும் போது, என் ஏக்கம், ஏமாற்றம், என் அன்பு எல்லாம் உங்களுக்குப் புரியும்!
நீங்கள் என் எதிர் வீட்டில் தான் இருக்கிறீர்கள், ஆனாலும் என்னைப் பார்த்தால் சிரிப்பதில்லை! என்னிடம் பேசுவதில்லை!
எனக்கும் உங்களோடு பேச வேண்டும் என்று தான் ஆசை, ஆனால், அம்மா திட்டுவாரோ..? அப்பா திட்டுவாரோ? அத்தனை பயம் எனக்கு! :(
உங்கள் வீட்டுச் சுட்டிகளோடாவது விளையாடலாம் என்றால், அதுவும் கூடாதாம், சொல்லிவிட்டார்கள் வீட்டில்!
நீங்களும் நாங்களும், இந்தியா பாகிஸ்தான் போல எப்படி ஆனோம்? என்று ஆனோம்? இன்னும் புரியவில்லை!
காரணம் கேட்டால், "பேசாதே என்றால் பேசாதே", இது தான் அம்மாவின் பதில்!
சண்டை கூட போடவில்லையே? பிறகு ஏனாம்?
முன்பெல்லாம் நாம் பேசிக்கொண்டு தானே இருந்தோம்? உங்கள் வீட்டு வாசப்படியில் உட்கார்ந்து, நீங்களும் நானும், தெருவின் சுட்டிப் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடினோமே? அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை?
ஒன்றாக அமர்ந்து, நாம் எல்லோரும், நிலாச்சோறு சாப்பிட்டோமே? அந்த நாட்கள் எத்தனை பசுமையானவை?
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவேன் நான், தெருச் சிறுவர்களோடு, நீங்கள் உட்கார்ந்து ரசிப்பீர்கள்! அதெல்லாம் நினைவுகளில் மட்டும் தான் இன்று!
நீங்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போதெல்லாம் முறைக்கிறீர்கள்! கதவை "படார்" என்று முகத்தில் அடித்தார் போலச் சாத்துகிறீர்கள்! ஏன்???
அத்தனை வெறுப்பா? எனக்கு என்றும் உங்களைப் பிடிக்காமல் இருந்ததே இல்லை! ஆனால், ஏன்? நீங்கள் மட்டும் பிடிக்காதது போலவே நடக்கிறீர்கள்?
ஒருவேளை, நான் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இதோ, அதற்காகத் தான் இந்தக் கடிதம். உங்கள் மீது எனக்கு வெறுப்பு துளியும் இல்லை என்பதைச் சொல்வதற்கே இந்தக் கடிதம்!
மீண்டும் அந்தப் பசுமையான, இனிமையான நாட்கள் வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதம்!
இப்போதாவது புரிகிறதா அக்கா? என் அம்மாவுக்குக் கூடத் தெரியாது, உங்களுக்கு நான் இந்தக் கடிதம் எழுதுவது.
எதிர் எதிர் வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும்? தயவு செய்து, என் உள்ளம் இப்போதேனும் புரிந்திருந்தால், பேச வேண்டாம், ஒரு புன்னகை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை போதும் அக்கா! உங்கள் வீட்டுக் குட்டிப் பையன்களையும் சிரிக்கச் சொல்லுங்கள் கொஞ்சம் என்னைப் பார்த்து.
என்னமா முறைக்கிறார்கள் தெரியுமா? ஐந்து வயதில், இத்தனை கோபமா அவனுகளுக்கு என் மீது? சொல்லுங்கள் அக்கா அவர்களையும் புன்னகைக்கச் சொல்லுங்கள்!
என்றும் உங்கள் அன்பை விரும்பும்,
இவள்,
கண்மணி அன்போடு!
எனக்கும் உங்களோடு பேச வேண்டும் என்று தான் ஆசை, ஆனால், அம்மா திட்டுவாரோ..? அப்பா திட்டுவாரோ? அத்தனை பயம் எனக்கு! :(
உங்கள் வீட்டுச் சுட்டிகளோடாவது விளையாடலாம் என்றால், அதுவும் கூடாதாம், சொல்லிவிட்டார்கள் வீட்டில்!
நீங்களும் நாங்களும், இந்தியா பாகிஸ்தான் போல எப்படி ஆனோம்? என்று ஆனோம்? இன்னும் புரியவில்லை!
காரணம் கேட்டால், "பேசாதே என்றால் பேசாதே", இது தான் அம்மாவின் பதில்!
சண்டை கூட போடவில்லையே? பிறகு ஏனாம்?
ஒன்றாக அமர்ந்து, நாம் எல்லோரும், நிலாச்சோறு சாப்பிட்டோமே? அந்த நாட்கள் எத்தனை பசுமையானவை?
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவேன் நான், தெருச் சிறுவர்களோடு, நீங்கள் உட்கார்ந்து ரசிப்பீர்கள்! அதெல்லாம் நினைவுகளில் மட்டும் தான் இன்று!
நீங்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போதெல்லாம் முறைக்கிறீர்கள்! கதவை "படார்" என்று முகத்தில் அடித்தார் போலச் சாத்துகிறீர்கள்! ஏன்???
அத்தனை வெறுப்பா? எனக்கு என்றும் உங்களைப் பிடிக்காமல் இருந்ததே இல்லை! ஆனால், ஏன்? நீங்கள் மட்டும் பிடிக்காதது போலவே நடக்கிறீர்கள்?
ஒருவேளை, நான் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இதோ, அதற்காகத் தான் இந்தக் கடிதம். உங்கள் மீது எனக்கு வெறுப்பு துளியும் இல்லை என்பதைச் சொல்வதற்கே இந்தக் கடிதம்!
மீண்டும் அந்தப் பசுமையான, இனிமையான நாட்கள் வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதம்!
இப்போதாவது புரிகிறதா அக்கா? என் அம்மாவுக்குக் கூடத் தெரியாது, உங்களுக்கு நான் இந்தக் கடிதம் எழுதுவது.
எதிர் எதிர் வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும்? தயவு செய்து, என் உள்ளம் இப்போதேனும் புரிந்திருந்தால், பேச வேண்டாம், ஒரு புன்னகை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை போதும் அக்கா! உங்கள் வீட்டுக் குட்டிப் பையன்களையும் சிரிக்கச் சொல்லுங்கள் கொஞ்சம் என்னைப் பார்த்து.
என்னமா முறைக்கிறார்கள் தெரியுமா? ஐந்து வயதில், இத்தனை கோபமா அவனுகளுக்கு என் மீது? சொல்லுங்கள் அக்கா அவர்களையும் புன்னகைக்கச் சொல்லுங்கள்!
என்றும் உங்கள் அன்பை விரும்பும்,
இவள்,
கண்மணி அன்போடு!
தேவையான அவசியமான பதிவு.. இப்போது சிவகாசி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் கூட காஸ்மோபாலிடன் நகரங்கள் போல வாழ்க்கை முறை எந்திரத்தனமாக மாறிவிட்டது.. வீட்டிற்கு மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் இதயத்திற்கும் காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொள்கின்றனர் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் கண்மணி :-)
பதிலளிநீக்குஉண்மை தான் :( நன்றி...
நீக்குakkavukaa? aiyoyo :P
பதிலளிநீக்குpesirunga akka... valapora konja nalula ethuku pagaiya vera thooki sumanthukittu :)
அம்மா அண்ணா, அக்காவுக்கு தான் :)
நீக்குIts good but you gonna get black and blue from your mom...:P
பதிலளிநீக்கு:) christopher, It's purely an imaginary letter :P
நீக்குசிரமம் தான்... தீரட்டும்...
பதிலளிநீக்குசில விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் ! அவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் அது சரியாகவே இருக்கும் !
பதிலளிநீக்குஇருக்கலாம்! சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்! பெரியவர்கள் என்பதற்காக எல்லா நேரங்களிலும் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாதே?
நீக்குதுவக்கம் முதல் இறுதிவரை அருமையான வார்த்தை பிரயோகம்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.. @ வரலாற்றுச் சுவடுகள்!
நீக்குதீபாவளிக்கு வாங்குன அந்த 120ய வாசலுக்கு நேர வைச்சு விட்டிருந்த அக்கா தன்னால பேசிருப்பாங்கல்லா?
பதிலளிநீக்குகற்பனை காவியம் அருமை!!
:) அப்டியெல்லாம் செஞ்சா சண்டைக்கு தான் வருவாங்க :)
நீக்குஅக்காவுக்கு கடிதம் கிடைத்ததா??...குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!
பதிலளிநீக்கு:) அக்காவுக்கு அனுப்பல :(
நீக்குஇது உங்களுக்கு உண்மை அனுபவமோ அல்லது கற்பனையோ எனக்கும் பலருக்கும் அக்கம்பக்கம் அல்லது நண்பர்கள் மூலம் ஏற்படும் ஊசியால் குத்தாமல் குத்தும் வலி.அருமை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி. உண்மை தான், இன்று நடப்பதை தான் எழுத முயற்சித்திருக்கிறேன்.
நீக்கு