வியாழன், நவம்பர் 29, 2012

ரோஜா மலர்ந்தது இன்று!

உங்களோடு பேசியதுண்டா?
ரோஜா மலர்?
உங்களோடு பேசியதுண்டா?

அழகாய் சிரித்ததுண்டா?
ரோஜா மலர், 
உங்களைப் பார்த்து 
அழகாய் சிரித்ததுண்டா?

உங்கள் இன்பத்தில்,
உங்கள் துன்பத்தில்,
தோள்  கொடுத்து,
தாங்கியதுண்டா?

இல்லையோ?
நீங்கள் கொடுத்து வைத்தது,
அவ்வளவு தானோ?
ஆனால்,
நான் கொடுத்து வைத்தது,
எவ்வளவோ!

என் தோட்டத்து,
வெள்ளை ரோஜா,
இன்று மலர்ந்த,
நல்ல ரோஜா.

என்னோடு,
தினமும் என்னோடு,
தித்திப்பாய் பேசிடும்,
அழகாய் வாசம் சுமந்து,
அன்பாய் பார்வை பார்க்கும்.

பனிக்காற்றில் என் ரோஜாவோடு,
பனிக்கூழ் சாப்பிட்டதுண்டு,
வெயிலில் என் ரோஜாவோடு,
குடையில் சென்றதுண்டு!
என்றும் வாடாத,
வெள்ளை ரோஜா,
என்றும் என் மனம்,
கொள்ளை கொள்ளும் ரோஜா!

மலர்கள் என்றுமே,
நமக்கு நல்ல தோழிகளாம்;
என் ரோஜா போல,
மலர்கள் என்றுமே,
நமக்கு நல்ல தோழிகளாம்!இதோ, இன்று பூத்த,
என் வெள்ளை ரோஜாவுக்கு,
வாழ்த்து சொல்லுங்கள்,
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள்!


## இன்று என் தோழி "ரோஜாவுக்குப்" (அவள் பெயர் ரோஜா, என் தோட்டத்துப் பூ என்று நினைத்துவிடாதீர்கள்) பிறந்த நாள், அவளுக்காக எழுதியது இது.


6 கருத்துகள்:

 1. ரசனைமிக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருமை. உங்கள் தோழிக்கு என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்குங்க... எனது வாழ்த்தையும் மறக்காமல் சொல்லிடுங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. சொல்லிவிடுகிறேன் :)

   நீக்கு
 3. எத்தனை அருமையான பிறந்தநாள் வாழ்த்து!கவிதை பாடும் கண்மணியை தோழியாக அடைந்ததற்கு பாராட்டுக்கள்!
  எங்கள் வாழ்த்துக்களையும் உங்கள் தோழிக்குச் சொல்லுங்கள்.

  பி.கு.: எனது பிறந்த நாளை முன் கூட்டியே அறிவிக்கிறேன். ஒரு கவிதை ப்ளீஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) கண்டிப்பாமா, உங்க பிறந்த நாளுக்கும் ஒரு கவிதை உண்டு :)

   நன்றி... :)

   நீக்கு