முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளியாம் தீபாவளி!

"சாமி மழ வரக்கூடாது!",
"ரெயின் ரெயின் கோ அவே"
என்று பட்டாசு கொழுத்த,
சிறுவர்கள் எல்லாம்
சேரும் நாள்!

உங்கள் வீட்டு மாடியிலா?
எங்கள் வீட்டு மாடியிலா?
ராக்கெட் விடுவது எங்கிருந்து?
"ஸ்ரீஹரிகோட்டா சைண்டிஸ்ட்" போல,
சுட்டிகள்  எல்லாம்,
சண்டையிடும் நாள்!

புதுச் சொக்காயில்,
பெரிய ஓட்டை,
போட்டது யார்?
போட்டி போடும்,
ஒரு நாள்!

கையெல்லாம் வெடிமருந்து,
வாயெல்லாம் பெரும் விருந்து,
"டேய்.., கை கழுவாம,
லட்டு சாப்டாத...",
அம்மாவின் சத்தத்தோடும்,
அதிரும் திருநாள்!

காயமே இல்லாமல்,
கட்டாயம் முடியாது,
கொஞ்சம் கண்ணீர்  கொடுக்கும்,
கருப்பு நாள்!

அத்தை வீடு,
அக்கா வீடு,
வீடு வீடாய்,
இனிப்பு கொடுத்து,
கொண்டாடும் இனிய  நாள்!

உலகில் இத்தனை வண்ணங்களா?
உடையில் இத்தனை ரகங்களா?
உங்களையும் என்னையும்,
வியக்க வைக்கும்,
விழா நாள்!

"இருப்போருக்கு" இத்தனையும்,
இல்லாதோருக்கு????
"நாமும் கொண்டாடுவோம் ஒருநாள்",
என்று மனதைத் தேற்றிக் கொள்ளும்,
ஏழைகளுக்கு,
ஏக்கப் பெருநாள்!  

கருத்துகள்

 1. ஒவ்வொரு வரியும் உண்மை... விரைவில் அனைத்தும் மாறட்டும்...

  பதிலளிநீக்கு
 2. கருத்துரைக்கு நன்றி ஐயா, விரைவில் மாறட்டும்,

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. தீபாவளித் திருநாளில் எல்லோரையும் சிந்திக்க வைத்து விட்டாய், கண்மணி!
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நல்ல கவிதை, உங்கள் எழுத்து நடை அழகாய் இருக்கிறது சகோதரி, இன்னும் மெருகேற்றுங்கள், தொழிற் களத்திலே உங்கள் தொழில் தர்மம் பற்றிய கட்டுரையை படித்தேன், நானும் முதுகலை கணினிப் பயன் பாட்டு துறை மாணவன் என்ற முறையிலே அத்தகைய கொடுமையை அனுபவித்து வருகின்றேன். வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. தொழில் தர்மம் படிப்பதிலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

   நீக்கு
 5. நல்ல கவிதை, உங்கள் எழுத்து நடை அழகாய் இருக்கிறது சகோதரி, இன்னும் மெருகேற்றுங்கள், தொழிற் களத்திலே உங்கள் தொழில் தர்மம் பற்றிய கட்டுரையை படித்தேன், நானும் முதுகலை கணினிப் பயன் பாட்டு துறை மாணவன் என்ற முறையிலே அத்தகைய கொடுமையை அனுபவித்து வருகின்றேன். வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. நன்மைகள் இருக்கிறது நான் மறுக்கவில்லை, தொழிற் களத்தில் என் பதிவு
  எங்கேயும் எப்போதும்
  இணைப்பு : http://tk.makkalsanthai.com/2012/11/tamil.html

  என் வலைப் பதிவில் தமிழ் மண் எடுப்போம், ஈழத்தில்
  இணைப்பு :
  http://kavithai7.blogspot.in/2012/11/srilanka.html

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதை கண்மணி.. எல்லோரும் வாழ்வில் முன்னேறுவோம்.. எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புவோம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…