சனி, மே 11, 2013

நினைவெல்லாம் நீதானே!

அன்னையர் தினம்! (mother's day)


எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு,
நீ ஒரு புளிப்பு மிட்டாய் வாங்கி,
பாதி கடித்து,
மீதி தந்தாயே,
அன்று தான் எனக்கு விபரம் தெரிந்ததாக நினைவு!

நீ என்னை முத்தமிட்டதாய் நினைவு,
ராணி வேடமிட்டு நாடகத்தில்,
மிடுக்காய் பேசி முடித்தவுடன்,
முதல் முதலாய்,
அன்று தான் நீ முத்தமிட்டாய் நினைவு!

அழகை உணர்ந்ததாய் நினைவு,
எனக்காக நீ சமைத்து விட்டு,
முகமெல்லாம் கரியைப்
பூசிக்கொண்டு நின்றாயே,
அன்று தான் அழகை உணர்ந்ததாய் நினைவு!

மழையை ரசித்ததாய் நினைவு,
வீட்டின் சாளரத்தின் வழியே,
என் காதோடு நீ பாடிய,
மழைப் பாடலைக் கேட்டுக் கொண்டே,
என்றோ நான் மழையை ரசித்ததாய் நினைவு!

கடவுளை நம்பியதாய்  நினைவு,
எனக்குக் காய்ச்சல் என்று,
நீ மண்சோறு சாப்பிட்டபோது,
என்னையும் அறியாமல், கடவுளை நம்பியதாய் நினைவு!

பயத்தைக் கலைந்ததாய் நினைவு,
"பயப்படக் கூடாது", உன் கருவறையில்,
நான் இருந்த போது,
நீ சொன்னதும்,
நான் என் பயத்தை எல்லாம் கலைந்ததாய் நினைவு!

என்றும், என் மீது உயிராக இருக்கும்,
"ஒன்றும் கவலை இல்லை", என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
என் அம்மா, என் நினைவெல்லாம் நீ தானே!

#அன்னையர் தின வாழ்த்துக்கள்!


10 கருத்துகள்:

 1. இனிய நினைவுகள் அற்புதமாய்...

  ரசித்தேன்...

  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

 2. என்ன அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  வாவ்...

  வாழ்த்துக்கள்.

  அன்னை தந்த அகம் அறியுமுன்னே
  அன்னையின் சுகம் அறிந்திருக்கிறோம்.


  வாழ்த்துக்கள்.

  இங்கேயும் வாருங்கள். நேரமிருந்தால்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. வருகிறேன் உறுதியாக.

   நீக்கு
 3. அம்மா செய்த எல்லாம் நினைவில் இருக்கும் ஒரு அருமைப் பெண்ணின் கவிதை அருமையிலும் அருமை!

  பதிலளிநீக்கு
 4. WOW....Awesomeee :D Really Beautiful Kannu..Loved every bit of it :)

  பதிலளிநீக்கு