திங்கள், மே 13, 2013

என்னையும் நேசிக்க!

இங்கு நீளமாக இருக்கும்
இரவுகளுக்குக் காரணம்
இதோ நீ தான்!

தனியே இதை,
எனக்கு விதித்தது,
இதோ நீ தான்!

நாளை இதே போலவா?
வேண்டாம் எனக்கு!

இந்தத் தனிமையும்,
உந்தன் இனிமை
இல்லாத வெறுமையும்!

இது போல 
இன்னும் ஒருநாளா?
வேண்டாம் அது எனக்கு!

உன்னைத் தவிர,
யாரும் வேண்டாம்!
மீண்டும் ஒருமுறை,
ரணமும் வேண்டாம்!

ஆனாலும் வேண்டும்,
என்னை நேசிக்க,
என் கை கோர்க்க,
எனக்கென ஒருவன்,
ஆனாலும் வேண்டும்,
என் கண்ணீர் துடைத்து,
கட்டி அணைத்து,
ஆறுதல் சொல்ல!

வேறு எதுவும் வேண்டாம்,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

இப்படியும் என் வாழ்க்கை,
இறுதி அடையுமா?
எதுவுமே புரியாமல்,
இப்படியே என் வாழ்க்கை
இறந்துவிடுமா?

உயிருள்ளவரை உண்மையாய்
இருந்துவிட,
உயிர்விடும் வரை,
எல்லாம் பகிர்ந்துகொள்ள!

வேறு எதுவும் வேண்டாம்,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

இன்று இருக்கும்,
வேதனையும் பயமும்
துக்கமும் அழுகையும்
என்றும் வேண்டாம்!

இதை மாற்ற,
என்னைத் தாங்க,
எனக்கும் வேண்டும்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

உனக்காகத் தந்திட,
உள்ளது என்னிடம்,
ஏராளம் ஏராளம்!
எனக்கு வேண்டியதெல்லாம்,
என் கண்ணீர் துடைக்க,
காயங்கள் மறைக்க,
எனக்கென ஒருவன்,
என்னை நேசிக்க,
எனக்கென ஒருவன்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$

"Somebody to love me" என ஒரு ஆங்கிலப் பாடலைக் கேட்டேன், வயதுக் கோளாறு என்பார்களே அது இது தான், எழுதிவிட்டேன்! :) 

8 கருத்துகள்: