ஞாயிறு, ஜூன் 19, 2011

கள்ளத்தனமாய்.....நான் பிறந்ததும் மகிழ்ந்திருப்பாய்,
நான் நடக்கவில்லையாம் சரியான வயதில்...
"என்னை நடக்க வைக்க ,
என்னுடன் சேர்ந்து நீயும் நடந்தாயாம்.." :)
-- அம்மா சொன்னாள்

நான் பேசிய கொஞ்சும் மொழிகளை ,
நான் அறியாமல் பதிவு செய்தாயாம்..
நீ பேசிய அனைத்தையும் கிளிப்பிள்ளை போல்,
நான் பேசித் திரிந்தேனாம்.... :)
என் மொழி கேட்டு குறள் சொல்வாயாம்...
"யாழ் இனிது குழல் இனிது.." என்று  வள்ளுவனாய் மாறி...

காய் வண்டிக்காரனை,
"காய் காய்.... இங்க இங்க வா .." என்று நான்
கேலி பேசியதை,
கள்ளத்தனமாய்.. ஒளிந்து ரசித்தாயம்... :)

இன்றும் என் கள்ளத்தனத்தை நீ ரசிக்க..
நான் மட்டும் உன் பேச்சை கேட்க,
மறக்கிறேன்... இல்லை இல்லை...
மறுக்கிறேன்.... :(
-- "வயதுக் கோளாறாம் ".. அம்மா சொன்னாள்.


மறுக்கிறேனோ...
மறக்கிறேனோ..
மனதால் சொல்கிறேன்....
நேசிக்கிறேன் அப்பா....
என்றும் நேசிப்பேன்...
கள்ளத் தனமாய் என் மனதுள்ளே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக