மரியாதைக்குரிய ஐயா,
தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!!
நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று!
எல்லா ஆசிரியர்களும், " வகுப்பு முடிந்ததும், புத்தகத்தைப் பார்த்து மீண்டும் ஒரு முறை படியுங்கள், அப்போது தான் இன்னும் நன்றாகப் புரியும்!", என்று சொல்லுவார்கள், ஆனால், நீங்களோ, "புத்தகமே வேண்டாம், நான் நடத்தியதை மட்டும் குறிப்பு எடுத்துப் படியுங்கள், போதும்", என்கிறீர்கள்.
காரணம்? "புத்தகம் படித்தால், நீங்கள் நடத்துவதில் இருக்கும் பிழைகள் தெரிந்து விடும் என்றா?"
கல்லூரியில் எல்லா ஆசிரியர்களும், எங்கள் அறிவைப் பெருக்க வேண்டும் என்று பாடம் சொல்லித் தருகிறார்கள். ஆனால், நீங்களோ... "இந்தக் கேள்வியைப் படித்தால், உறுதியாக பரிட்சையில் வரும் எழுதி விடலாம்...", என்று மதிப்பெண்களுக்காக பாடம் சொல்கிறீர்கள்!
"மதிப்பெண் வாங்கப் படிப்பது சரியா?", நீங்களே சொல்லுங்கள்! சரியா?
எனக்கு இப்படி நீங்கள் பாடம் சொல்லித் தருவதில், அத்தனை கோபம்.
நீங்களும் கூட மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்து தான் படித்து வந்திருக்கிறீர்கள் இந்த ஆசிரியர் வேலைக்கு. நன்றாகத் தெரிகிறது அது நீங்கள் வகுப்பில் முன் நின்று கண்களை மூடி ஒப்பிப்பதில் இருந்தே!
நீங்கள் நடத்தும் முறை, எங்களுக்கு படிக்கச் சொல்லித் தரும் முறைகள், எல்லாமே தவறாக இருக்கிறது. அதைப் பின்பற்றினால், நிறைய மதிப்பெண்கள் கிடைக்கலாம், ஆனால், அறிவு ஒரு போதும் வளராது!
உங்களை குறை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள், உண்மையைத் தான் சொல்கிறேன்... வேதனையோடு, அளவில்லா வேதனையோடு!
ஆனால், உங்களுக்கே தெரியாது என்று எனக்குத் தெரியும், அதாவது, நீங்கள் நடத்துவது "தவறு" என்று உங்களுக்கே தெரியாது என்பதும் எனக்குத் தெரியும்.
இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் ஐயா...
நீங்கள் மிகவும் நல்ல மனிதர், பக்திமான், ஆனால், நல்ல ஆசிரியராக உங்களால் இருக்க முடியாது! முடியவில்லை!
உங்கள் பாடத்தில் புரிந்து எழுதினால், மதிப்பெண் நீங்கள் வழங்குவதில்லை, மனப்பாடம் செய்து, அப்படியே நீங்கள் தரும் குறிப்புகளை எழுதினால் தான் மதிப்பெண்!
மிக்க நன்றி ஐயா, மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் எங்களுக்கு.
முயலுங்கள் இனியாவது, மதிப்பெண்ணுக்காக பாடம் நடத்துவதைத் தவிர்க்க!
இது தவறு என்றால், மன்னிக்கவும்! முடிந்தால், மாற்றம் செய்ய முயலுங்கள்!
------
உங்கள் மாணவி!
(இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எனக்கு இவர்களைப் பிடிப்பதே இல்லை! இவர்கள் இப்படி இருப்பது சரியா? இல்லை நான் தான் தவறாக இருக்கிறேனா?)
நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி.
ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால், அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன்.
தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!!
நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?"
உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( "
நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம் தவறாகப் புரிகிறதோ? எல்லாமே தப்பும் தவறுமாக நடத்துகிறீர்கள்!
எல்லா ஆசிரியர்களும், " வகுப்பு முடிந்ததும், புத்தகத்தைப் பார்த்து மீண்டும் ஒரு முறை படியுங்கள், அப்போது தான் இன்னும் நன்றாகப் புரியும்!", என்று சொல்லுவார்கள், ஆனால், நீங்களோ, "புத்தகமே வேண்டாம், நான் நடத்தியதை மட்டும் குறிப்பு எடுத்துப் படியுங்கள், போதும்", என்கிறீர்கள்.
காரணம்? "புத்தகம் படித்தால், நீங்கள் நடத்துவதில் இருக்கும் பிழைகள் தெரிந்து விடும் என்றா?"
கல்லூரியில் எல்லா ஆசிரியர்களும், எங்கள் அறிவைப் பெருக்க வேண்டும் என்று பாடம் சொல்லித் தருகிறார்கள். ஆனால், நீங்களோ... "இந்தக் கேள்வியைப் படித்தால், உறுதியாக பரிட்சையில் வரும் எழுதி விடலாம்...", என்று மதிப்பெண்களுக்காக பாடம் சொல்கிறீர்கள்!
"மதிப்பெண் வாங்கப் படிப்பது சரியா?", நீங்களே சொல்லுங்கள்! சரியா?
எனக்கு இப்படி நீங்கள் பாடம் சொல்லித் தருவதில், அத்தனை கோபம்.
நீங்களும் கூட மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்து தான் படித்து வந்திருக்கிறீர்கள் இந்த ஆசிரியர் வேலைக்கு. நன்றாகத் தெரிகிறது அது நீங்கள் வகுப்பில் முன் நின்று கண்களை மூடி ஒப்பிப்பதில் இருந்தே!
நீங்கள் நடத்தும் முறை, எங்களுக்கு படிக்கச் சொல்லித் தரும் முறைகள், எல்லாமே தவறாக இருக்கிறது. அதைப் பின்பற்றினால், நிறைய மதிப்பெண்கள் கிடைக்கலாம், ஆனால், அறிவு ஒரு போதும் வளராது!
உங்களை குறை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள், உண்மையைத் தான் சொல்கிறேன்... வேதனையோடு, அளவில்லா வேதனையோடு!
ஆனால், உங்களுக்கே தெரியாது என்று எனக்குத் தெரியும், அதாவது, நீங்கள் நடத்துவது "தவறு" என்று உங்களுக்கே தெரியாது என்பதும் எனக்குத் தெரியும்.
இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் ஐயா...
நீங்கள் மிகவும் நல்ல மனிதர், பக்திமான், ஆனால், நல்ல ஆசிரியராக உங்களால் இருக்க முடியாது! முடியவில்லை!
உங்கள் பாடத்தில் புரிந்து எழுதினால், மதிப்பெண் நீங்கள் வழங்குவதில்லை, மனப்பாடம் செய்து, அப்படியே நீங்கள் தரும் குறிப்புகளை எழுதினால் தான் மதிப்பெண்!
மிக்க நன்றி ஐயா, மனப்பாடம் செய்யக் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள் எங்களுக்கு.
முயலுங்கள் இனியாவது, மதிப்பெண்ணுக்காக பாடம் நடத்துவதைத் தவிர்க்க!
இது தவறு என்றால், மன்னிக்கவும்! முடிந்தால், மாற்றம் செய்ய முயலுங்கள்!
------
உங்கள் மாணவி!
(இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எனக்கு இவர்களைப் பிடிப்பதே இல்லை! இவர்கள் இப்படி இருப்பது சரியா? இல்லை நான் தான் தவறாக இருக்கிறேனா?)
ஒரு ஆசிரியராக கூறுகிறேன், இப்படி சில பேர் இருப்பதால்தான் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மீதான மரியாதை சுத்தமாக குறைந்து விட்டது. என்ன செய்வது? கல்வி நிறுவனங்களும் மதிப்பெண்களை கேட்டுத்தானே ஆசிரியர்களை விரட்டுகிறது.
பதிலளிநீக்கு:( அதுவும் உண்மை தான். கல்வி நிறுவனங்களும் மதிப்பெண் கேட்டுத் தானே ஆசிரியர்களை வேலை வாங்குகின்றன :(
நீக்குகருத்துக்கு நன்றி...
//கல்வி நிறுவனங்களும் மதிப்பெண்களை கேட்டுத்தானே ஆசிரியர்களை விரட்டுகிறது.
நீக்குபதிலளி...//
ஆசிரியரே!!! இரும் நிர்வாகத்திற்கு பார்வேர்டு பன்னுறோம்..
நடக்கும் உண்மையை தானே எழுதி உள்ளீர்கள்...
பதிலளிநீக்குஅன்று கல்வி ஒரு சேவை...
இன்று கல்வி ஒரு தொழில்... (பலரைத் தவிர... மன்னிக்கவும்... சிலரைத் தவிர...)
நன்றி...
ஆம், பெரும்பாலும் அப்படித் தான் மாறிக்கொண்டிருக்கிறது! :(
நீக்குவருகைக்கு நன்றி :)
DOn't ask for sorry... in fact most of the teachers are like this..:)
பதிலளிநீக்குநன்றி... christopher
நீக்குநானும் சிலரை சந்தித்ததுண்டு....
பதிலளிநீக்குபுதிதாக ஆசிரியர் பணியை துவக்குவோர் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார்கள்... அனுபவம் அவர்களை உயர்த்தும்...
அதுமட்டுமின்றி நமது பாடதிட்டங்களிலும் குறை உள்ளது! நமது பாடதிட்டங்கள் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை தான் வளர்க்கிறதே அன்றி அறிவை அல்ல!
ஆம், மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை :( வருகைக்கு நன்றி...
நீக்குகண்மணி,
பதிலளிநீக்குநன்றாகத்தான் விமர்சித்து இருக்கிறீர்கள் உங்கள் ஆசிரியரை ! படிப்பு முடித்து ஒருவருட காலம் நானும் ஆசிரியர் பணியில் இருந்தேன். ஆங்கிலம் நன்றாக வராது, பாடத்திலேயே நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனாலும் முதுகலைப் படிப்பில் நான் எழுபத்தி ஐந்து சதவிகித மதிப்பெண்கள். சுமார் ஐம்பது மாணவர்கள் நிரம்பிய வகுப்பு ( மாணவர்கள் மட்டும் ) அது. நான் போய் நின்றாலே மாணவர்கள் சிரிப்பார்கள். என் நிலையை நினைத்து எனக்கே கேவலமாக இருக்கும். ஆனாலும் மனம் தளராமல் பாடங்களைப் படித்து மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் நான் பாடங்களை நடத்த என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன்.
இந்த சமயத்தில் கல்லூரியின் தாளாளர், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியில் இருந்து " நல்ல அனுபவமுள்ள " ஆசிரியரைக் கூட்டி வந்து பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களை நடத்தத் தொடங்கினார். அந்த அனுபவ ஆசரியர் நடத்தும் தேர்வுத் தாள்களை திருத்தி மதிப்பெண்கள் போடுவது மட்டுமே எனது பணி ! மனம் வெறுத்து ஆசிரியர் பணியையே விட்டு விட்டு, தற்போது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.
நான் எனது ராஜினாமா கடிதத்தை அந்தப் பள்ளி தாளாளரின் கையில் கொடுத்து விட்டு வெளியே வரும்போது என்னை அறியாமல் கண்ணில் சடசடவென நீர் வழிந்தது.
கட்டப்பஞ்சாயத்து நடத்துபவன்களும், ரவுடிகளும், குண்டர்களுமே தற்போது பெரிய பெரிய பள்ளிகள், கல்லூரிகளின் தாளாளராகவும் நிர்வாகிகளாகவும் இருந்து வருகின்றனர். மாணவர்களுக்கு மதிப்பெண்களைப் பெற வைக்க அவர்களுக்கு சில இயந்திரங்கள் தேவைப் படுகின்றன. அந்த " இயந்திரங்கள் " தான் அது போன்ற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள். மேலிடம் சொல்லும் பணியை மட்டும் செய்வது அவர்கள் வேலை !
ஒருவேளை நீங்கள் விமர்சிக்கும் அந்த ஆசிரியரும் நிர்வாகத்தின் கட்டாயத்தினால் அப்படி இருக்கலாமோ என்னவோ ?
தங்களை இந்தப் பதிவு ஏதாவது வகையில் பாதித்திருந்தால் மன்னிக்கவும். வருகைக்கு நன்றி...
நீக்குசரி தான்...சமீபத்தில் நடந்த TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வானவர்கள் 2000 .
பதிலளிநீக்குநம் கல்வியின் நிலை :( .கற்பிக்க கசடற என்று ஒரு தொடர் பதிவு எழுத தீர்மானித்துள்ளேன்...!
-அன்புடன்
துரைராஜ்
நல்லது, பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது எனக்கு தெரியப்படுத்துங்கள். நானும் வாசிக்கிறேன். நன்றி...
நீக்குநிச்சயம் சொல்கிறேன்,ஆதரவிற்கு மிக்க நன்றி
நீக்குஎனக்கும் இப்படி பலரை சந்தித்த அனுபவம் தொடர்கிறது. தெரியாத பகுதிகளை "chezhiyan, you have to take seminar about networking in java" என்று சொல்ல்கிறார்கள், " அஸ்திவார சக்தி குறைவு, கட்டிடமோ பலம் அவர்களுக்கு , நல்ல பதிவு சகோதரி
பதிலளிநீக்கு:) ஆனால், செமினார் கொடுக்கும் எல்லா ஆசிரியர்களும் அப்படி என்று சொல்லிவிட முடியாது.
நீக்குகருத்துக்கு நன்றி...
ஐயோ , நான் அப்டி சொல்லல, கட்டாயம் நான் முதுகலையில் தனி வகுப்பு எடுத்தே ஆகவேண்டும், நான், சிலரை மட்டுமே சொன்னேன்,
பதிலளிநீக்கு