செவ்வாய், செப்டம்பர் 18, 2012

அத்தனைக்கும் ஆசைப்படு!


ஆயிரம் கனவுகள் இருந்தபோதும்,
ஒருசில மட்டுமே நனவாகும்!
கோடிகள் அதிலே இருந்துவிட்டால்,
ஆயிரம் நனவாகும் வாய்ப்பு தரும்!

நினைவு தெரிந்த நாள் முதலாய்,
ஆசை நிறைய, நிறைய உண்டு.
களிமண் பொம்மை உடைய வேண்டாம்,
காகிதக் கப்பல் கிழிய வேண்டாம்.

பாலின் நிறம் வெண்மை வேண்டாம்,
புல்லின் நிறம் பசுமை வேண்டாம்.
"இப்படி ஆசை இருந்த போது,
எப்படியம்மா நிறைவேறும்?
அது எப்படியம்மா நிறைவேறும்?"

இப்படி சொன்ன சிலருக்காக,
நல்லன சில நான் ஆசைப்பட்டேன்!
நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.

இதற்கும் இல்லை என்று சொன்னால்,
பேதை எங்கே சென்றிடுவேன்,
"அத்தனைக்கும் ஆசைப்படு"
சொன்னது யார்?
சொல்லுங்கள் அவரிடம்,
ஆசையே சாபம் என்று!

14 கருத்துகள்:

 1. // சொல்லுங்கள் அவரிடம்,
  ஆசையே சாபம் என்று!// அழகாய் முடித்தீர்கள்

  //நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
  சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.// மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுவோம்.... ஆசைக்கும் கனவிற்கும் வித்தியாசம் நூலளவு தான்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், உண்மை தான். ஆசைபட்டுக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதேனும் செயலில் செய்தால் நன்மை தான்.

   நீக்கு
 2. எனக்கு மட்டும் அந்த சிவபெருமானை போல் 'வரம்' கொடுக்கும் 'சக்தி' இருந்திருந்தால்.... இந்தா பிடி என்று தங்களுக்கு வரம் அருளியிருக்கலாம் என்ன செய்வது எனக்கு அந்த சக்தி இல்லையே :) :)

  எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி! தொடர்ந்து கவி மழை பெய்யட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி :) :) கவி மழை பொழியும். தொடர்ந்து நனைய வாருங்கள்! :)

   நீக்கு
 3. ஆசை சாபம் அன்று அதை மெய்யாக்கும் முயற்சி இல்லாமல் சோம்பி விதியையும் , காலத்தையும் , மற்றவரையும் குறை கூறுவதே சாபம்

  கவிதை வரிகள் அருமை ஆனால் பொருள் தான் கொஞ்சம் உதைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்.. சிலசமயம் எவ்வளவு முயன்றாலும் சில காரியங்கள் நடப்பதில்லயே? அதான் அப்படி எழுதினேன்.

   நன்றி.

   நீக்கு
 4. அத்தனைக்கும் ''ஆசைப்படு''
  காலம் வரும்வரை காத்திரு,,
  கொடுத்த கடமையை சரிவர செய்திடு
  கோடிகளும் நினைவாகும்...!

  நல்லது கண்மனி!!

  ஏன் ''நம்ம'' பக்கம் நேற்று வரவில்லை..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் நனவாகும்.
   நன்றி.
   மன்னிக்கவும். கல்லூரியில் வைத்து இந்தப் பதிவு செய்தேன்.
   சிறிது நேரம் தான் இணைப்புக் கிடைத்தது. அதான் பதிவு போட இயலவில்லை

   நீக்கு
 5. சரிதான்....ஆசையே அனைத்திற்கும் காரணம்...இப்ப நீங்க படுவது கூட ஆசைதான்...ஆசை சாபம் மற்றும் வரம் இரண்டின் சேர்க்கை..இப்ப நீங்க இணையம் வழி எழுதுவது கூட ஆசையின் வெளிப்பாடுதான்.ஆசைபடுங்கள்,ஆசைபடாதிருக்க ஆசைப்படுங்கள்..
  தொழிற்களத்தில் என் முதல் சிறுகதை மறக்காமல் வாசிங்க: http://tk.makkalsanthai.com/2012/09/godshortstory.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) :) ஆசைப்படாமல் யாராலும் இருக்க முடியாது என்பது தானே உண்மை! நன்றி...

   நீக்கு
 6. பாத்துங்க , ஜக்கி வாசுதேவ் உங்க மேல வழக்கு போட்டுட போறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) அப்படி எல்லாம் போடா மாட்டாங்க!

   நீக்கு