[இது எனது இரண்டாவது தொடர்கதை முயற்சி. எனது முதல் "சிக்ன(க)ல்" தொடர்கதைக்கு அழித்த ஊக்கத்திற்கு நன்றி.]
------------------------------
நெடுநேரமாக அவளது காதோரம் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது! மிகவும் பிடித்த பாடல், தனிமையில் நேரத்தைப் போக்க அவள் திருப்பித் திருப்பி கேட்கும் பாடல்! இன்றும் தனிமையைக் கொல்ல இரவு ஒரு மணிக்கும் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

காலையில் வழக்கம் போல ஐந்து மணிக்கு அலாரம் அடித்து எழுந்தாள். வாசல் தெளித்து பால் வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு, குழந்தையை எழுப்பச் சென்றாள்.
"முரளி, முரளி.. school -க்கு நேரமாச்சு எந்திரி", ஒரு உழுக்கு உழுக்கி விட்டு, அடுப்பில் வைத்த பாலை இறக்க ஓடினாள்!
சற்று விழித்தும் விழிக்காமலும் ஜன்னல் வெளியே பார்த்து, நேரம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் போர்த்திப் படுத்தான் முரளி.
முரளி, ரேணுகாவின் 12 வயது மகன். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி. வகுப்பில் முதல் மாணவன். ரேணுகாவின் ஒரே துணை.
முரளிக்குப் பிடித்த boost கலந்து பால் எடுத்து வந்து மீண்டும் எழுப்பினாள், "முரளி.. எந்திரி கண்ணா.. நேரமாகுது, கொஞ்ச நேரம் படி, அப்புறம் schoolக்கு ready ஆகணும், எந்திரி செல்லம்.."
முரளி சமத்தாய் எழுந்து பால் குடித்து, அம்மாவுக்கு முத்தம் வைத்தான் கன்னத்தில்.
"என் செல்லம், பல் தேச்சுட்டு பால் குடின்னு சொன்னா மட்டும் கேக்காத எப்பவும்", செல்லமாய் மகனின் தலையில் கொட்டி, உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் ரேணுகா.
பக்குவமாய் சாம்பார் சாதத்தில் நெய்விட்டுக் கிளறி, உருளைக் கிழங்கு பொரியல் செய்து, மதியத்திற்கு சாப்பாடு கட்டினாள், முரளிக்கு.
சமத்தாய் பள்ளிக்கு தயாராகி, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான், முரளி.
சாப்பிட்டதும், முதுகில் பொதியை ஏற்றி, பள்ளிக்குத் தயாரானான், "அம்மா..
bus வந்துடும், நேரமாச்சு, சீக்ரமா lunch எடுத்துட்டு வாங்க.." சத்தம்போட்டான்!
"இதோ வரேன்டா..", வேகமாக lunch bag ஐ தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.
lunch bagஐ வாங்கிக் கொண்டு, முத்தமிட்டான் அவளது கன்னங்களில், தினமும் கேட்பது போல் அன்றும் அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
அந்தக் கேள்வியை அவன் கேட்கும் பொழுதெல்லாம், இதயத்தில் ஆயிரம் ஊசியைக் குத்தும் வலி உணர்வாள் ரேணுகா. முரளியை சமாதானம் செய்ய அவள் படும் அவஸ்தை யாராலும் உணர இயலாது!
"அம்மா.. அப்பா......?"
என்ன கேள்வி அது?
முரளி ரேணுகாவிடம் கேட்ட கேள்வியை அறிய நாளை வரை காத்திருக்கவும். தொடரும் அடுத்த பகுதியில்.
--------------------------------------------------------------------------------------
குறைகள் இருப்பின் சுட்டுங்கள், நிறைகளையும் பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
வாசித்தமைக்கு நன்றி.
என்றும்,
கண்மணி அன்போடு.
குறை இது தான் அப்படி என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. அனால் நிறைகள் நிறைய... குறையாய் பட்டது.. தெரிந்த எளிதாய் கணிக்கக் கூடிய கதை அமைப்பு... நிறை... அருமையான முதல் பாகம்... வழக்கமான தொடர் கதைகளின் சாயல் இருந்தாலும் வரும் பகுதிகளில் அந்த சாயல் நீங்கி நலமாய் கதை வரும் என்ற நம்பிக்கையுடன் உன் அன்பு அண்ணன் :)
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா. எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்கு