முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#1

[இது எனது இரண்டாவது தொடர்கதை முயற்சி. எனது முதல் "சிக்ன(க)ல்" தொடர்கதைக்கு அழித்த ஊக்கத்திற்கு நன்றி.]
                                             ------------------------------
நெடுநேரமாக அவளது காதோரம் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது! மிகவும் பிடித்த பாடல், தனிமையில் நேரத்தைப் போக்க அவள் திருப்பித் திருப்பி கேட்கும் பாடல்! இன்றும் தனிமையைக் கொல்ல இரவு ஒரு மணிக்கும் சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்படியே தூங்கிப் போனாள். தினமும் கனவுகள் வந்து அவளை வதைத்திடும், ஆனால், அன்று சற்று நிம்மதியாகவே தூக்கம் அமைந்தது.

காலையில் வழக்கம் போல ஐந்து மணிக்கு அலாரம் அடித்து எழுந்தாள். வாசல் தெளித்து பால் வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு, குழந்தையை எழுப்பச் சென்றாள்.

"முரளி, முரளி.. school -க்கு நேரமாச்சு எந்திரி", ஒரு உழுக்கு உழுக்கி விட்டு, அடுப்பில் வைத்த பாலை இறக்க ஓடினாள்!

சற்று விழித்தும் விழிக்காமலும் ஜன்னல் வெளியே பார்த்து, நேரம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் போர்த்திப் படுத்தான் முரளி.

முரளி, ரேணுகாவின் 12 வயது மகன். ஆறாம் வகுப்பு மாணவன். படிப்பில் படு சுட்டி. வகுப்பில் முதல் மாணவன். ரேணுகாவின் ஒரே துணை.

முரளிக்குப் பிடித்த boost கலந்து பால் எடுத்து வந்து மீண்டும் எழுப்பினாள், "முரளி.. எந்திரி கண்ணா.. நேரமாகுது, கொஞ்ச நேரம் படி, அப்புறம் schoolக்கு ready ஆகணும், எந்திரி செல்லம்.."

முரளி சமத்தாய் எழுந்து பால் குடித்து, அம்மாவுக்கு முத்தம் வைத்தான் கன்னத்தில்.

"என் செல்லம், பல் தேச்சுட்டு பால் குடின்னு சொன்னா மட்டும் கேக்காத எப்பவும்", செல்லமாய் மகனின் தலையில் கொட்டி, உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் ரேணுகா.

பக்குவமாய் சாம்பார் சாதத்தில் நெய்விட்டுக் கிளறி, உருளைக் கிழங்கு பொரியல் செய்து, மதியத்திற்கு சாப்பாடு கட்டினாள், முரளிக்கு.

சமத்தாய் பள்ளிக்கு தயாராகி, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான், முரளி.

சாப்பிட்டதும், முதுகில் பொதியை ஏற்றி, பள்ளிக்குத் தயாரானான், "அம்மா..
bus வந்துடும், நேரமாச்சு, சீக்ரமா lunch எடுத்துட்டு வாங்க.." சத்தம்போட்டான்!

"இதோ வரேன்டா..", வேகமாக lunch bag ஐ தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.

lunch bagஐ வாங்கிக் கொண்டு, முத்தமிட்டான் அவளது கன்னங்களில், தினமும் கேட்பது போல் அன்றும் அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

அந்தக் கேள்வியை அவன் கேட்கும் பொழுதெல்லாம், இதயத்தில் ஆயிரம் ஊசியைக் குத்தும் வலி உணர்வாள் ரேணுகா. முரளியை சமாதானம் செய்ய அவள் படும் அவஸ்தை யாராலும் உணர இயலாது!

"அம்மா.. அப்பா......?"

என்ன கேள்வி அது?

முரளி ரேணுகாவிடம் கேட்ட கேள்வியை அறிய நாளை வரை காத்திருக்கவும். தொடரும் அடுத்த பகுதியில்.

--------------------------------------------------------------------------------------

குறைகள் இருப்பின் சுட்டுங்கள், நிறைகளையும் பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
வாசித்தமைக்கு நன்றி.

என்றும்,
கண்மணி அன்போடு.

கருத்துகள்

  1. குறை இது தான் அப்படி என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. அனால் நிறைகள் நிறைய... குறையாய் பட்டது.. தெரிந்த எளிதாய் கணிக்கக் கூடிய கதை அமைப்பு... நிறை... அருமையான முதல் பாகம்... வழக்கமான தொடர் கதைகளின் சாயல் இருந்தாலும் வரும் பகுதிகளில் அந்த சாயல் நீங்கி நலமாய் கதை வரும் என்ற நம்பிக்கையுடன் உன் அன்பு அண்ணன் :)

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி அண்ணா. எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்