வெள்ளி, ஏப்ரல் 06, 2012

வா அன்பே!!!!


மரணத்தின் வாசற் கதவை,
இழுத்து மூடிவிட்டேன்,
வா அன்பே,
பிரிவே இன்றி நேசம் செய்வோம்!

உலகையே தூங்கச் செய்து,
தனியாக நிற்கிறேன்,
வா அன்பே,
மீண்டும் ஒரு முறை பேசிப் பார்ப்போம்,

பிரிவே இன்றி,
பாசம் குறையாமல்,
வா அன்பே,
தினமும் தினமும் தித்தித்திடுவோம்!

கடவுளின் எழுத்தாணியை,
களவாடி வந்துவிட்டேன்,
வா அன்பே,
நம் காதல் கதையை நாமே தீட்டுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக