வியாழன், ஏப்ரல் 05, 2012

கடந்திடுமே!

உடலின் அங்கங்கள் யாவையும்,
உருக்கும் அளவு சோகமா?

உன் உயிரே உன்னை,
அழிக்கும் நேரமா?

உதிரம் உதிர்ந்து,
உலகம் இருளும் வேளையில்,

உண்மை சொல்கிறேன்,
உனக்காக உறைந்திருப்பேன்,

உறங்காமல் விழித்திருப்பேன்...
என் கண்ணீரைக் கொண்டு,
உன் கனவுகளின் சோகங்கள் கூட,
கழுவி எடுப்பேன்,
கிட்ட வா...
எட்டிப் போகாதே...

இப்படிக்கு
நீருக்காக ஏங்கி நிற்கும்,
வாடாமல் வாடிடும்
வாச மலர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக