ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

புரியலையா?


உண்மைக்கும் பொய்க்கும் நடுவே,
வானுக்கும் மண்ணுக்கும் ஊடே,
இரவுக்கும் பகலுக்கும் மத்தியில்,
இதமாய் நான் தீட்டிய ஓவியம்!

உனது தூரிகை களவாடி,
உன்னையே தீட்டிக் காட்டினேன்!

உன்னுள் இருக்கும்,
என் மீதான காதலை
உயிரோவியமாய் தீட்டிக் காட்டினேன்!

ஊரில் ஓவியர்கள் தீட்டிய
உயிரற்ற ஓவியமெல்லாம்,
உற்று நோக்கி ரசித்தாயே..

உன்னையே எண்ணி ஏங்கும்,
இப்பேதையின் உயிரோவியம்,
காதலோவியம்..
கண்ணில் விழவில்லையா?
காதல் எழவில்லையா?

தினம் தினம் ஏங்கி ஏங்கி
தீட்டும் என் கவிதைக் காவியம்,
புரியவில்லையா?

1 கருத்து:

  1. உன்னை தேடி அழைந்தேன் நான் ஏனோ தெரியவில்லை உனக்கு நான் உன்னை பின் தொடர்கிறேன் என்று ஆனாலும் ஒரு நாள் அறிந்து கொள்வாய் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பேன் அழகே!!!

    பதிலளிநீக்கு