வியாழன், ஏப்ரல் 26, 2012

தீண்டும் நாள் வரும்!

துயரம் நீங்கிப் போகும் அன்பே,
தூரம் செல்லாதே!
காதல் இன்னும் கூடும் கண்ணே,
அருகில் நெருங்காதே!

வாடைக் காற்றில் ஈரம் குறையும்,
நெருப்பை மூட்டாதே!
வயது வந்த பெண்ணின் இதயம்,
கசக்கிப் பிழியாதே!

கையின் ரேகை,
அது அழிந்து போகும்!
இதழின் சாயம்,
அது கரைந்து போகும்!
மூச்சின் வேகம்,
தொடர்ந்து ஏறும்,
மெதுவாய் காய்ச்சல்,
மேனியில் கூடும்!
என்னைத் தீண்டாதே,
இன்று என்னைத் தீண்டாதே!
தீண்டும் நாள் வரும்,
இன்று என்னைத் தீண்டாதே..

இன்று போய்
அன்று வா என் அன்பே!


2 கருத்துகள்:

  1. நாணம் தங்கள் கவிதையில் ஏக்கமும் ,நாணமும் சரி விகிதத்தில் கலந்து இருக்கிறது.கவி அழகு

    பதிலளிநீக்கு