என் ஐந்து வயது
![]() |
நினைவுகள் - என் செல்லப் பிராணிகளும், காய்கறித் தோட்டமும்! |
காலைச் சுற்றும் நாய்க்குட்டிகள்,
வீட்டைச் சுற்றி,
விழைந்து கிடக்கும்,
வாழையும், பூசணியும்!
என் வீட்டுக் கோழி இட்ட,
முட்டை உடைத்து குஞ்சுகள்,
முதலில் உலகை
மெதுவாய்ப் பார்த்த நேரம்,
பூரித்துப் போகும்,
பாட்டி தாத்தா போல,
கையில் அள்ளி,
கொஞ்சிக் கொஞ்சி,
பூரித்துப் போனேனே!
பள்ளி செல்லும் சாலையில்,
என் வண்டி பின்னே,
பாசமாய் ஓடி வரும்,
என் குட்டி நாய்களுக்கு,
செல்லப் பிள்ளைக்கு,
டாட்டா சொல்லும் அம்மா போல,
டாட்டா சொல்லிப் போனேனே!
எனக்கு 18 வயது!
கோழிகளும் நாய்க் குட்டிகளும்,
வாழையும் பூசணியும்,
இன்று சுவர்களாகிப் போயினவே...
நாகரிக வளர்ச்சியால்,
பசுமையும் குளுமையும்,
பகல் கனவு ஆகவே,
இன்றும் நினைவுகளில் மட்டும்,
என் வீட்டுச் செல்லப் பிராணிகளும்,
காய்கறித் தோட்டமும்!
கருத்துகள்
கருத்துரையிடுக