வெள்ளி, ஏப்ரல் 20, 2012

உசுரக் குடிச்சுப் போனியே...!

உசுரக் குடிச்சுப் போனியே,
என்,

உசுரக் குடிச்சுப் போனியே...!

எதமா பதமா மழையில நனைஞ்சு,
பனியில பூவா நான் நின்ன போது,
உசுரக் குடிச்சுப் போனியே..
என்,
உசுரக்குடிச்சுப் போனியே...!

நெத்தியில விழுந்த மழைத் துளி,
அது,
நெஞ்சுக்குழி தேடி ஒடுச்சே...!
கண்ணுக்குள்ள விழுந்த உன் முகம்,
அது,
கனவுல நெனவுல கபடி ஆடுதே..
நெஞ்சுக்குள்ள சடுகுடு சத்தம் போடுதே..!

(உசுர குடிச்சுப் போனியே..)

ஒருதரம் பாத்துட்டு போயிட்ட,
ஒருமாசமா
எண்ணி எண்ணி ஏங்குனேன்...!
கூட்டுக்குள்ள ஒளிஞ்ச நத்தையா,
என்,
நெனைப்பெல்லாம் மனசுல மறைக்கப் பாத்தனே,
அது எட்டி எட்டி பாத்துதான் ஊர கூட்டுதே...!

(உசுர குடிச்சுப் போனியே..)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக