செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கிறுக்கல்கள்!

இராமேஸ்வரத்தில் ஒரு கோவிலின் சுவரில்
குருட்டுக் காதல் செய்யும் கூட்டத்திற்காக!!
நூதனமாய் நடக்கும்,
நட்பிற்காக!


"காதலிற்கு கண்கள் இல்லை"
கூற்றை நான் நம்பத்தான் இல்லை!

"ருபாய் நோட்டு, கோயில் சுவர்கள்,
பேருந்தின் ஜன்னல் ஓரம்!
பார்க்கும் இடமெல்லாம்,
காதலியின் பெயரையும் உன் பெயரையும்
கிறுக்கும் காதலுக்கு
கண்கள் இல்லை தான்!
நின் கண்கள் புண்கள் என உணர்ந்திடு!!
"கிறுக்குவது பெருமையோ??"

சிறப்பாக நிற்கும் ,
சரித்திரக் குறியீடுகளை,
கிறுக்கிக் கிறுக்கியே,
சீரழிக்கும் உன்னை,
சரித்திரத்தில் இடம் பெறுவாய் என
சரீரத்தை உருக்கி,
குருதியை பிரித்து,
பெற்றெடுத்த உன் அன்னை,
வெட்கி வருந்துவதை உணர்ந்திடு!!
கிறுக்குவது சரித்திரமோ??

நம் நாட்டை,
நாடி வரும்,
நூற்றுக்கணக்கான வெளிநாட்டோர்
நம்மை தூற்றுவது விருப்பமோ?
நின் குருட்டுக் காதலாலும்,
கிருக்கல்களாலும்,
நன்மை தான் இல்லை,
தீமை குறைத்திடேன்?
உன்னால் நாடே நாணுது,
உச்சியில் உரைக்கட்டும்,
உனது பிழை உணர்ந்திடு!
கிறுக்குவது இன்பமோ?

காதலர்கள் மாடுமல்ல ,
பல நல்லவர்களும் இதிலடக்கம்,
நண்பர்களும் இதிலடக்கம்!
நீ கிறுக்கிக் கிறுக்கி,
நின் பெருமை தொலைத்ததோடு,
நாட்டின் பெருமையும் ஏனடா அழிக்கிறாய்?

காகிதமும், புத்தகமும்,
தொட்டு எழுத வலிக்கும்,
கல்லூரி செல்ல கசக்கும்,
சுற்றிச் சுற்றி கோயிலிலும்,
பேருந்திலும், பொதுச் சுவரிலும்,
கிறுக்க மட்டும் இனிக்குதோடா?
முட்டாளே,
நின் முட்டாள்த் தனம் உணர்ந்திடு!

(தயவு செய்து, பொது இடங்களை தூய்மையாக, மாசு படுத்தாமல் காத்திடுங்கள்! கோயில், பேருந்து போன்ற பொதுச் சொத்துக்களை சேதம் செய்ய வேண்டா)

4 கருத்துகள்:

 1. மிக அருமையான கவிதை
  வாழ்த்துக்கள் தோழி.

  எனினும் எழுதுங்கள்
  காத்திருக்கின்றோன்.
  உங்கள் ஆக்கத்தை திருடிவிடவே..

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி. நிச்சயமாகத் தொடர்வேன்...

  பதிலளிநீக்கு
 3. சரியாக சொன்னீர்கள்,கிறுக்குத்தனமானவர்களின் காதல்கள் இது போலத்தான் தன்னை பொது இடங்க்ளில் கிறுக்கி விளம்பரம் செய்து கொள்கிறது.இவர்கள் அசிங்கப்படுத்துவது இவர்களை மட்டுமல்ல புராதான சின்னங்களையும்,பொது இடங்களையும் தான்.அருமையான சிந்தனை பொதிந்த கவி.

  பதிலளிநீக்கு