புதிதாக வாசிபவர்களுக்கு, இது ஒரு தொடர் பதிவு ஆதலால், கீழே இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி முந்தைய பதிவுகளை படித்துவிட்டு, இங்கே வாருங்கள்!
முந்தைய பதிவுகள்:
அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1 #2 #3
இதுவரை நாம் பத்து முத்துகளை பார்த்துவிட்டோம், இப்போது தொடர்ந்து அடுத்து கொஞ்சம் முத்துக்களை நம் மாலையில் கோர்க்கலாம், வாங்க!
முத்து பதினொன்று:
அவன் எப்போது வருவான் என்று காத்திருந்து, வந்ததும் வராததுமாக உங்கள் உறுத்தல் மூட்டைகளை அவன் முன் அவிழ்த்துக் கொட்டாதீர்கள்!
இது, அப்பா அம்மாவிற்குச் சொல்வது போல இருக்கிறது. சரி இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று பார்க்கலாம்.
அம்மா தனக்கு இருக்கும் வருத்தங்களை, இன்பங்களை, அப்பாவிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும்? உண்மை தான் அப்பாவிடம் தான் சொல்ல முடியும். ஆனால், இங்கே வாதம், அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்லக் கூடாது என்பது தான்.
எந்த அம்மாவும், அப்பா வந்தவுடன் ஏதாவது அழுது பொலம்பி அவரை எரிச்சல் படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, வேண்டும் என்று செய்வதில்லை.
என் வீட்டில் கூட இந்த பிரச்சனை அடிக்கடி நடக்கும். அப்பா வந்ததும் அம்மா ஏதாவது குறை சொல்வதாகச் சொல்வார் அப்பா. பெரும்பாலும் என்னால் தான் இந்தப் பிரச்சனை வரும்! ஆம், உண்மை, நான் தான் என் வீட்டில் நடக்கும் பல சண்டைகளுக்குக் காரணமாக இருப்பேன். எப்படி என்று கேட்கிறீர்களா?
இதோ சொல்கிறேன். எனக்கு உடல் நிலை சரி இல்லை என்றால், என் அப்பாவுக்கு தாங்காது, என்னை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்று அம்மா மீது கோவப்படுவார்.
எனக்கு அப்போது ஒரு எட்டு வயது இருக்கும். எப்போதும் என் வீட்டில் இருக்கவே மாட்டேன், மாடியில் என் அத்தை மாமா அவர்களது பிள்ளைகள் இருவர் இருந்தார்கள். அத்தை என்றால் அப்பாவின் தங்கை. நான் எங்கள் வீட்டில் விடுமுறை என்றால் இருக்கவே மாட்டேன், அதாவது மாடியில் தான் இருப்பேன், அத்தை பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டு. விளையாட்டு என்றால், கோயில் கட்டி விளையாடுவோம், பூத்தொட்டியில் கோயில், தபால் பெட்டியில் கோயில் இப்படி எங்கள் வீட்டில் எல்லா இடத்திலும் நாங்கள் கோயில் கட்டி விளையாடி இருப்போம். இப்படி ஆர்வமாக விளையாடினால் நான் சாப்பிடக் கூட மாட்டேன், விளையாடிக் கொண்டே இருப்பேன்.
எனக்கு அப்போது ஒரு எட்டு வயது இருக்கும். எப்போதும் என் வீட்டில் இருக்கவே மாட்டேன், மாடியில் என் அத்தை மாமா அவர்களது பிள்ளைகள் இருவர் இருந்தார்கள். அத்தை என்றால் அப்பாவின் தங்கை. நான் எங்கள் வீட்டில் விடுமுறை என்றால் இருக்கவே மாட்டேன், அதாவது மாடியில் தான் இருப்பேன், அத்தை பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டு. விளையாட்டு என்றால், கோயில் கட்டி விளையாடுவோம், பூத்தொட்டியில் கோயில், தபால் பெட்டியில் கோயில் இப்படி எங்கள் வீட்டில் எல்லா இடத்திலும் நாங்கள் கோயில் கட்டி விளையாடி இருப்போம். இப்படி ஆர்வமாக விளையாடினால் நான் சாப்பிடக் கூட மாட்டேன், விளையாடிக் கொண்டே இருப்பேன்.
அன்றும் அப்படி தான் நீண்ட நேரம் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டே இருந்தேன். அம்மா என்னை அழைத்திருந்திருக்கிறார் சாப்பிட, அதாவது மாடிப் படி அருகே நின்று கொண்டு, "கண்மணி, கண்மணி.." என்று பல முறை அழைத்து இருக்கிறார்.
நான் தான் என்ன வேலை செய்தாலும் ஆர்வமாக செய்வேனே, அதனால், விளையாட்டு ஆர்வத்தில் அம்மா கூப்பிட்டது காதில் விழவே இல்லை! :)
பிறகு அம்மா ஒரு , ஒரு மணி நேரம் சென்ற பிறகு, மீண்டும் அழைத்து இருக்கிறார், இப்போது நான் விளையாடி முடித்துவிட்டேன், ஆகையால், அம்மா அழைத்தது எனக்குக் கேட்டுவிட்டது.
"என்னம்மா..." என்றவாறு மாடியில் மேல் படியில் நின்று நான் கேட்க, "எவ்ளோ நேரம் கூப்படறது? வர மாட்டியா ஒரு தடவ கூப்டதும்...?", இப்படி அம்மா கோவமாகக் கேட்க, நான் பயந்துவிட்டேன். ஆம், சிறுவயதில் அம்மா என்றால் எனக்கு அத்தனை பயம், ஏதாவது சொல் பேச்சு கொஞ்சம் கேட்காவிட்டாலும் அடி விழும் செமத்தியாக!
அந்த பயத்தில் அம்மாவை பார்த்தபடி நான் மாடியில் இருந்து இறங்க, படியில் காலை மாற்றி வைக்க, உருண்டுவிட்டேன் படியில், குப்புற விழுந்து உருண்டதில், நெற்றி முகம் எல்லாம் அடிபட்டு, ஒரே ரத்தம்! (சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு :) )
![]() |
Dad - mom - kid |
நான் தூங்கிவிட்டேன் அப்பா வந்த போது! இதை அம்மா அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்ல, அப்பா சண்டை போட்டார் அம்மாவோடு. சண்டையில் நான் எழுந்துவிட்டேன். இங்கு, அம்மா இதை அப்பா வீட்டிற்கு வந்தவுடன் சொல்லாமல், சாப்பாடு போட்டு, தூங்கும் போதா சொல்ல முடியும்?
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல, பாட்டி அம்மாவை திட்டுவது, வீட்டில் வேறு ஏதாவது பிரச்சனை என்றால், அம்மாவிற்கு அதை உடனே அப்பாவிடம் தான் சொல்ல வேண்டும் என்று இருக்கும். அது சோகமாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்றில்லை, ஆனந்தமாக இருந்தாலும், அதை உடனே அப்பாவிடம் தான் சொல்ல வேண்டும் என்று தானே இருக்கும் அம்மாவிற்கு?
இப்படி வீட்டிற்கு வந்தவுடன், குறை சொல்வது, ஆனந்தமான செய்தி சொல்வது, இதெல்லாம் அம்மா செய்வதற்கு காரணம், அவருக்கு எந்த விஷயமாக இருந்தாலும், அதை அப்பாவிடம் பகிர்ந்து விட வேண்டும், இது ஒரு வகை அளவு கடந்த பாசம் என்று தானே சொல்ல வேண்டும்?
இன்றும், அம்மாவிற்கு ஏதாவது உடல் நிலை சரி இல்லை என்றால், என்னிடம் சொல்லி, நான் வீட்டில் அம்மாவை பார்த்துக் கொண்டாலும், அப்பாவிடம் அதைச் சொல்லி, அவர் ஆறுதல் சொன்னால் தான் அம்மாவிற்கு ஆனந்தம், அமைதி. இது அம்மா அப்பா மீது வைத்திருக்கும், நம்பிக்கை, அன்பு என்று தான் என்னால் பார்க்க முடிகிறது.
எல்லா நேரங்களிலும் இப்படி வீட்டிற்கு வந்தவுடன் குறை சொல்வது தவறாகப் போகும் என்று சொல்ல இயலாது. என்று அப்பா பணியில் ஏதாவது "டென்சன்" என்று வருகிறாரோ, அன்று தான் சண்டை வரும்.
ஆக, வீட்டிற்கு வரும் போது, அப்பா என்ன மன நிலையில் வருகிறார் என்று அறிந்து பேசுவது, பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
அதே போல, அப்பாவும் புரிந்து கொள்ள வேண்டும். அம்மாவிற்கு, அவரைவிட்டால், ஆறுதல் சொல்லவோ, புலம்பித் தீர்க்கவோ வேறு யாரும் இல்லை என்பதை. அப்படி வேறு யாரிடமும், அதாவது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டால் கூட, அது அம்மாவிற்கு அப்பாவிடம் பகிர்ந்து கொள்வது போல ஒரு ஆனந்தத்தை, நிம்மதியைத் தந்துவிடாது.
ஆக, அம்மாவும் எதை எப்போது சொல்ல வேண்டும் என்று யோசித்துச் சொல்ல வேண்டும், மேலும், அப்பாவும், அம்மா அவர் மீது இருக்கும் அன்பு, நம்பிக்கை தான் இதற்கெல்லாம் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
(ஐந்து முத்துக்கள் எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால், ஒன்றே நீளமாகிவிட்ட காரணத்தால், மீதம் முத்துக்கள் அடுத்த பதிவில்)
(ஐந்து முத்துக்கள் எழுதலாம் என்று நினைத்தேன், ஆனால், ஒன்றே நீளமாகிவிட்ட காரணத்தால், மீதம் முத்துக்கள் அடுத்த பதிவில்)
நல்ல பதிவு.. பொதுவாக ஆண்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் கோபத்தை காட்ட முடியாது.. வேலையில் இருக்கும் கோபம் எல்லாம் அவர்களுக்கு காட்ட இருக்கும் ஒரே இடம் வீடு தான்.. ஆனால் வீட்டிற்குள் வந்தவுடன் அங்கும் உறவு சார்ந்த பிரச்சனைகள் வந்தால், அதிலும் அவனால் கோவப்பட முடியாது.. அதனால் தான் என்ன ஏதுவென்று சரியாக காதில் வாங்கிக்கொள்ளாமலே கத்திவிடுவான்.. ஒரு ஆணிடம் பிரச்சனைகளை சொல்ல சரியான சமயம், என்னை கேட்டால், ஞாயிறு பகல் & சாயந்திரம் தான்.. அப்பத்தான் ஓரளவுக்கு வேலையை மறந்து வீட்டு நினைப்பில் மட்டும் இருப்பான்..
பதிலளிநீக்கு:) அதுக்காக வாரம் முழுக்க வெயிட் பண்ணி லீவ் அன்னிக்கா சொல்ல முடியும் :O
நீக்குநன்றி.
முக்கியமான விசயங்களை/பிரச்சனைகளை சாவகாசமாக சொல்லும் போது தான் அதை பற்றி தெளிவாக பேசி சரியான முடிவை எடுக்க முடியும்.. இல்லேனா சண்டை தான் வரும் பெரும்பாலும்..
நீக்கும்ம்... :)
நீக்குஎல்லாம் சரி, இந்த பதிவுக்கு ஏத்த மாதிரி படம்லாம் எங்க இருந்து பிடிக்கிறிங்க?
பதிலளிநீக்குgoogle ல தேடி கிடைக்காததும் உண்டோ?
நீக்குஅப்போது சிறு சிறு சண்டைகள் தான் வாழ்வின் சுவாரஸ்யமே... எதுவும் அளவோடு(ம்) இருக்க வேண்டும்...
பதிலளிநீக்கு...இதெல்லாம் அம்மா செய்வதற்கு காரணம், அவருக்கு எந்த விஷயமாக இருந்தாலும், அதை அப்பாவிடம் பகிர்ந்து விட வேண்டுm
பதிலளிநீக்கு...இது தான் காரணமா? நான் இது தெரியாமல் வீட்டுக்கு வந்தவுடன் உயிரை வாங்குறியே?? என்பேன்..(ennoda wife i)