திங்கள், மார்ச் 18, 2013

ஒன்று மட்டும் சொல்கிறேன்!


அருகே வரவும் ஆசை இல்லை,
விலகி நிற்கவும் தோன்றவில்லை!
ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன்,
காலை வானில் வெளிச்சம் இல்லை!
நான் உன்னை நேசிக்கிறேனடி!

விட்டுக் கொடுக்க வருத்தமில்லை,
வாரி அணைக்க வாய்ப்பு இல்லை,
ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன்,
நான் உன்னை நேசிக்கிறேனடி!

மாலை பொழுதில் ஈரம் இல்லை,
காலை வானில் வெளிச்சம் இல்லை,
ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன்,
நான் உன்னை நேசிக்கிறேனடி!

உந்தன் வாழ்க்கையில் நானும் முல்லை,
எனக்கு நீ மட்டுமே முதல் பிள்ளை,
நான் அறிவேனடி,
நீயும் என்னை நேசிக்கிறாய் என்று!

5 கருத்துகள்: