ஞாயிறு, மார்ச் 10, 2013

நடை பயண நினைவுகள்!

I pray to be only yours
என் உயிரினுள்ளே இருக்கும் ஒரு பாடல் -அது தான்
நான் மீண்டும் மீண்டும் எழுத நினைக்கும் ஒரு பாடல்!

நீ எனக்காக மீண்டும் மீண்டும்
பாடிக்கொண்டே இருக்க,
நீண்டு கொண்டே போகும் குளிரில்,
நான் கண் விழித்துக்கிடக்கிறேன்.

வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

பாடு எனக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை!

எனது கனவுகள் தூரமானவை - இப்படி
எனக்குத் தோன்றும்போது,
பாடு எனக்காக நீ வைத்திருக்கும்,
நல்ல திட்டங்களை!

வானம் பார்த்து,
 
A walk to remember - There's a song
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!

என் விதியை உன்னிடமே தருகிறேன்,
என்னை முழுவதுமாய் தருகிறேன்,
உன் பாடல்கள் மட்டுமே வேண்டுகிறேன்,
என்னால் முடிந்த மட்டும்,  
என் அன்பைப் பாடிக்கொண்டிருக்கிறேன்!
என் மூச்சின் உச்சத்திலே,
மீண்டும் உனக்கு அதைத் தருகிறேன்!


வானம் பார்த்து,
கைகளை உயர்த்தி,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே, 
நான் இருக்க வேண்டுமென்று,
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
நான் வேண்டிக்கொள்கிறேன்,
உனதாக மட்டுமே,
நான் இருக்க வேண்டுமென்று!
இதோ இப்போது எனக்குத் தெரியும்,
நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!
பி.கு. : "A walk to remember" என்னும் ஆங்கிலப் படத்தில் வரும்,  "There's a song..." என்னும் பாடலை நான் மொழி பெயர்க்கச் செய்த முயற்சி இது!

நல்லா இல்லைனாலும் பொறுத்துக்கோங்க! :)

8 கருத்துகள்:

 1. என்ன இப்படி சொல்லிட்டீங்க...? நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) நல்லா இருக்கா! :) நன்றி நன்றி... நன்றி.... :)

   நீக்கு
 2. பெயரில்லா3/13/2013 6:35 முற்பகல்

  கடைசி வரைக்கும் கண்மணி எழுதியது, ஏதோ இசைய பத்தி சொல்ல வரானு நினச்சு ஏமாந்துட்டேன் :( அப்றம் பின் குறிப்புல மொழிபெயர்ப்புனு போட்டிருக்கு :)
  நல்ல பதிவு! நல்ல பதிவு!

  "பாடு என்னக்காக விண்மீன்களைப் பற்றிய அந்தப் பாடலை -உன்னுடைய
  நாட்டியமாடும், விடாது சிரிக்கும் உலகத்தைப் பற்றிய அந்தப் பாடலை! "

  இந்த மொழிபெயர்ப்பில் பிடித்த வரிகள் :) தமிழ்ல படிக்க அழகா இருக்கு..


  way to go!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "பாடு எனக்காக ..." இந்த வரி உங்களுக்கு உண்மையிலேயே பிடிச்சதா? இல்ல எனக்காக "என்னக்காக"னு தப்பா தட்டச்சு செஞ்சு இருக்றத புரியவைக்கிறதுக்காக சொன்னிங்களா?

   எப்டி இருந்தாலும் சரி, நான் நீங்க போட்ட கருத்துரைய வச்சு தான் அந்த பிழைய கண்டுபிடிச்சேன், சரி செஞ்சுட்டேன். நன்றி அதுக்கு.

   அப்றம், ரெண்டு தடவ நல்ல பதிவு சொல்லி இருகிங்க, அதனால, "நன்றி, நன்றி!"

   :) அழகா இருக்கா? :) நன்றி...!

   நீக்கு
 3. இது நல்ல மொழிபெயர்ப்பா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் ஒரு பாடலாக எனக்கு இது மிக மிக பிடித்திருக்கிறது.. இது சொல்லும் மென் சோகம் என மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கண்மணி..
  // வானம் பார்த்து,
  கைகளை உயர்த்தி,
  நான் வேண்டிக்கொள்கிறேன்,
  உனதாக மட்டுமே,
  நான் இருக்க வேண்டுமென்று,
  நான் வேண்டிக்கொள்கிறேன்,
  உனதாக மட்டுமே,
  நான் இருக்க வேண்டுமென்று!
  நான் வேண்டிக்கொள்கிறேன்,
  உனதாக மட்டுமே,
  நான் இருக்க வேண்டுமென்று!
  இதோ இப்போது எனக்குத் தெரியும்,
  நீ மட்டுமே என் நம்பிக்கை என்று!// இந்த வரிகள் மிக மிக அற்புதம்.. :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) எல்லாப் புகழும் உண்மையா இந்தப் பாட்ட ஆங்கிலத்துல எழுதினவருக்கே!

   நன்றி... :)

   நீக்கு
 4. எழுத்தாளரே , கலக்கிடீங்க, தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள் கண்மணி

  பதிலளிநீக்கு