என் குரலில் இந்தப் பதிவைக் கேட்க,
படிக்க வேண்டும் என்றால் மட்டும் தான்,
படுக்கையை விட்டு அதிகாலை எழுவேன்,
பத்து மணி தான் இல்லை என்றால்!
இரவெல்லாம் படித்தால் தான்,
இன்பமாக இருக்கிறது,
காலையில் கொஞ்சம் தூக்கம்,
கண்கள் கேட்கிறது!
இன்று பரிட்சையும் இல்லை,
படிக்கவும் இல்லை - ஆனால்,
பனி விழும் அதிகாலையிலேயே,
படுக்கையை விட்டு எழுந்தாயிற்று!
குளிர் நீரிலே குளித்தாயிற்று - அம்மாவோடு,
கோயில் கோயிலாய் சென்றாயிற்று,
"கோயிலுக்குச் சென்றால் தான் உண்டா?"
கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டியாயிற்று.

"அன்பின் இடத்தே இறைவன்",
என் நம்பிக்கை அது - பிறகு,
ஏன் கோயிலுக்குச் சென்றேன்,
எதற்காக மண்டியிட்டேன்?
"மார்கழி ஒன்னு,
கோயிலுக்குப் போனா நல்லது!",
அம்மாவின் அன்பான ஆசைக்காக!
என் கொள்கைக்காக!
"அன்பின் இடத்தே இறைவன்"
தெய்வத்தோடு சென்று,
கற்களை வணங்கி நின்றேனே,
காலையிலேயே -அதிகாலையிலேயே!
----------------------------------
காலையில் காலாற நடந்தால் நல்லது என்பார்கள், அம்மா வேறுமாதிரி சொல்கிறார் அதையே, இருப்பினும் நல்லது தானே சொல்கிறார்!
அம்மாவின் அறிவுரையை, பகுத்தறிவு பேச்சால் மீறாமல் நடந்தமை நல்ல பகுத்தறிவு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பயணம்.
பதிலளிநீக்கு:) மிக்க நன்றி அறிவு கடல்!
நீக்குமார்கழிக்கு அழகான வரவேற்பு கவிதை கண்மணி!
பதிலளிநீக்குநன்றி மா :)
நீக்கு"அன்பின் இடத்தே இறைவன்"
பதிலளிநீக்குதெய்வத்தோடு சென்று,
கற்களை வணங்கி நின்றேனே,
அருமையான வரிகள்
ஒலி இணைப்பும் தேன் குரலும் மிக நன்று.
http://abiatchennai.blogspot.in/2012/12/blog-post.html
:) தேனா? :) மிக்க நன்றி
நீக்கு//தெய்வத்தோடு சென்று,
பதிலளிநீக்குகற்களை வணங்கி நின்றேனே,//அருமையான வரிகள்...
அம்மா மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது இந்த வரிகளில்
குரல் அருமை.இனிமை.
மிக்க நன்றி :) அம்மாவை நேசிக்காத, மதிக்காதவர்கள் இருப்பார்களா என்ன?
நீக்குநன்றாக சிந்தனை செய்கின்றீர்கள், உள் அர்த்தம் பொதிந்த வகையிலே கவி எழுதுவது சிலருக்கே வரும். உங்களிடம் அந்த திறமை ஒளிந்து கிடக்கிறது. மெருகேற்றவும்.
பதிலளிநீக்குஒலி வடிவில் கேட்டது புதுமை. சொல் ஏற்ற இ(ற)ரக்கம் கவனிக்கவும். உங்கள் ஊரில் ஹலோ பண்பலை 106.5 கேட்குமானால், இரவில் டைரி என்ற நிகழ்ச்சியை கேட்டு பாருங்கள் சகோ.
மிக்க நன்றி :) ம்ம் இனி கவனிக்கிறேன் ஒலி பதிவு செய்கையில்.
பதிலளிநீக்குவானொலி கேட்க இயலுமா என்று தெரியவில்லை, முயல்கிறேன்.
நன்றி.
//விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...
பதிலளிநீக்கு//விடியா இரவின் இருட்டில், நிலவிற்கு நான் வைத்த முத்தங்கள்!// அழகு ...
பதிலளிநீக்குமிக்க நன்றி :)
நீக்கு