![]() |
அப்பாக்குட்டியும் நானும்! |
சிறுவயதில் என்னை அவர் அப்படித் தான் அழைப்பார். இப்போது நான் பெரியவள் ஆனதும் அப்படி அழைப்பதில்லை! :( அதனால் என்ன? இப்போது நான் அவரை பதிலுக்கு அப்பாக் குட்டி என்று அழைக்கிறேனே!
இன்று என் அப்பாக் குட்டிக்கு பிறந்தநாள், அதே போல, என்னுடைய இரண்டு வகுப்புத் தோழிகளுக்கும் பிறந்த நாள்! :) ஒரு மிட்டாய் கிடைத்தாலே ஆனந்தம், இதில் இன்று "கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா?", என்பது போல, நிறைய மிட்டாய் கிடைக்கப் போகிறது! :)
மேலும் இன்று என் கல்லூரியில் ஆண்டு விழா வேறு! கேட்கவா வேண்டும், அப்பா அம்மா தம்பி எல்லோரும் வருகிறார்கள், ஒரே ஆனந்தம் தான் இன்று!
இத்தனை நாட்களாக, புத்தகம், சோறு, உறக்கம், இது மட்டுமே செய்து கொண்டிருந்த எனக்கு மாற்றாக, கொஞ்சம் கலை நிகழ்ச்சி, அற்புதமான ஆண்டு விழா உணவு, அப்பா, அம்மா, தம்பியோடு சேர்ந்து இருப்பது என்று நல்ல நல்ல நிகழ்வெல்லாம் நடக்க இருக்கிறது :)
எப்போதும் வேலை செய்து கொண்டு, எப்போதும் படித்துக் கொண்டு இருந்தாலும், வாழ்க்கை சலித்துவிடும் தான் போலும்.
![]() |
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பாக்குட்டி! |
என்றோ ஒரு நாளிதழில் படித்தது இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது, ஒரே போல எப்போதும் கடினமாக உழைப்பவர்களை விட, அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம். எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்தால், சிறப்பாக இருக்காதாம் நாம் செய்யும் வேலை.
அதனால், இன்று ஆனந்தமாக இருக்கும் நாள் :) உங்களுக்கும் தான்!
தங்களின் தந்தைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு:) நன்றி...
நீக்குஉங்களின் அப்பாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு//அவ்வப்போது விடுமுறை, கொண்டாட்டம் என்று இருக்க வேண்டுமாம். அப்படி இருப்பவர்களால் தான் மேலும் சிறப்பாக வேலை செய்ய இயலுமாம்.// மிக சரி. ரிலாக்ஸ் இல்லாத வாழ்க்கை சக்கரத்தின் பல் என்று வேண்டுமானாலும் தேய்ந்து போகலாம்
:) நன்றி :)
நீக்குகண்மணி என பொதுவாக பிள்ளைகளை கொஞ்சுவது வழக்கம். உன்ன மட்டும் கோபத்துல
பதிலளிநீக்குதிட்டுனாலும் கொஞ்சிடே திட்டிரமாற இருக்கும்னு நினைக்கறேன் அப்பாக்கு :)
அவர் இந்த பதிவை படிப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு எனது வாழ்த்துக்கள் நேரடியாக :)
ம்ம் அப்படித் தான் இருக்கும் கொஞ்சுவது போல. ஆனால் என்னை அப்பா திட்டுவதே இல்லை! :) நான் சமத்துப் பிள்ளை! :D நன்றி...
நீக்குசமத்து பிள்ளையா.. அப்பாவ கேட்டா தெரியும், சமத்தா வாலா-னு :D
நீக்கு:D கேளுங்க கேளுங்க! உண்மைல நான் சமத்து தான்.
நீக்குbelated to him. then, you got fellowship . right. congrats do wel the research.
பதிலளிநீக்கு:) நன்றி...!
நீக்குஉங்கள் அப்பாக்குட்டியின் பிறந்தநாளைக்கு ரொம்ப லேட்டாக வந்திருக்கிறேன். எனது வாழ்த்துக்களை சொல்லுங்கள். நீங்களும் உங்கள் அப்பாக்குட்டியும் இதேபோல என்றும் இருக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு:) நன்றி மா. தங்களது வாழ்த்துக்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி! :) :)
நீக்குBelated wishes to the "Moon King!"
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குஎன் பிறந்தநாளை மறக்காமல் இருப்பனு நினைக்கிறன்.உன் அப்பாக்குட்டி பிறந்தநாள் அன்று என்பதால:)
பதிலளிநீக்குஅதெப்படி மறப்பேன் கவி :) உனக்கும் என் அப்பா நினைவு வரும் தானே, உன் பிறந்த நாள் அப்போ?
நீக்கு