சனி, நவம்பர் 27, 2010

சிறு கதை

                                                               
குளிர்ந்த காற்று.....


அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் கண்களின் ஓரம் வெள்ளமாய் கண்ணீர் பெருகி வந்தது. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.
தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியது தவறு என்று தோன்ற, அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
இருப்பினும், தன் தந்தையின் மீது அவளுக்கு கோபம் அதிகமாகவே வந்தது.
குளிர்ந்த காற்று அவள் கோபம் தணிக்க முயன்றது. ஆனால் காற்றுக்கும் தோல்வியே!
நடந்ததை நினைத்து பார்த்தாள்......
"எவ்வளவு கம்மியா mark வாங்கியிருக்க? 1130! இந்த மார்க்குக்கு உனக்கு எவன்
medical seat தருவான்? .... என் கனவுல மண்ண போடுட்டியே." "அப்பா.. என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன், இவ்வளவு தன்பா முடிஞ்சுது என்னால please... புரிஞ்சுக்கோங்கப்பா..."(இது பொண்ணு)
"என்னமோ போ! இனி உனக்கு படிக்க என்னால செலவு பண்ண முடியாது,
உன் மார்க்குக்கு எவன் ஓசில சீட் தரானோ , அந்த காலேஜ்ல போய் நீயா சேந்து படிச்சுக்கோ,இல்லன்னா  போ எங்கயாவது..!"
"அப்பா..... அப்படி..."
"நிறுத்து, நான் உனக்கு அப்பனில்ல"
"அப்பா..."
"அப்படி கூப்டாத"
(இந்தப் பாச போராட்டத்துக்குப்  பின் சற்றும் சிந்திக்காமல் வீட்டை விட்டு
வெளியேறினால் அந்த பேதைப் பெண்)
               
மழைச்சாரல் அவள் நினைவைக் கலைத்தது, தன் நிலையை எண்ணி வருந்தி அழுதாள். தன் தாயின் பாசத்தை, தம்பியின் நேசத்தை உதறி வீட்டை விட்டு வந்ததை எண்ணி வருந்தினாள். அச்சமயம், அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஒரு இளைஞன். தன்னை குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளது பெயரைக் கேட்டான்.
பேருந்து இரைச்சலில், அவள் காதில் அவன் கேட்டது விழவில்லை.
"என்ன கேட்டீங்க?....",என்றாள்.
"என் பெயர் குமார் , உங்க name என்ன?
"சுவாதி"
"sweet name"
"ஏன் சோகமா இருக்கிங்கனு தெருஞ்சுக்கலாமா?"
தயங்கியவாறு அவளது கதையைச் சொன்னாள்.
                    "oh what's this shwathi? உங்க அப்பா, உங்க மேல நிறைய நம்பிக்கை வச்சிருந்திருக்காங்க, அதான் அவங்களுக்கு நீங்க 1130 mark வாங்கினதுல கோபம் , நீங்க இன்னும் நிறைய வாங்கனும்னு நினைச்சிருப்பாங்க.!"
"அப்படியா? நெஜமாவா சொல்றிங்க? அப்பாவுக்கு என் மேல நம்பிக்கைன்னு சொல்றிங்களா?
"உண்மையாதான். நீங்க இப்படி வெளிய வந்ததால, உங்களுக்கு எவ்வளவு ஆபத்து? எங்க போவீங்க??என்ன செய்வீங்க?? வீட்டுக்குப் போங்க"
"சரி",சுவாதி.
(குமாரின் பேச்சால் மனம் மாறி வீடு திரும்பினாள் சுவாதி)
        வீட்டில்.............
"அம்மாடி.. வாம்மா... எங்கடா போன? அப்பா ஒரு வார்த்த கோபத்துல சொல்லிட்டா இப்படியா பண்றது..?",என்று சிறு பிள்ளை போல அவளைக் கட்டிக் கொண்டு அழுதார் சுவாதியின் தந்தை.
மனிச்சுடுங்கப்பா... தெரியாம பணிட்டேன்,,,"
"பரவா இல்லம்மா......"
தன் தந்தையின் அன்பைப் புரிந்தவளாய்த் தேம்பி அழுதாள், அவள் ஆனந்தத்தில்.....
குளிர்ந்த காற்று, அவள் அழுகையை தணிக்க விருப்பமின்றி, அவள் தன் தந்தையின் அன்பைப் புரிந்ததால், காற்றும் ஆனந்தத்தில் அழுதது, மழையாய்......
அன்றிலிருந்து, அவள் வாழ்வில் குளிர்ந்த ஆனந்தக் காற்று வீசத் தொடங்கியது...

                                         முற்றும்.

8 கருத்துகள்: