செவ்வாய், டிசம்பர் 13, 2011

போலிகள் ஆறு !!!!
புன்னகை மறந்து.,
"பொன்னகை" போற்றும் .,
--->சொந்தம்

தோழமை துறந்து .,
"பொறாமை" பூணும் .,
---> நட்பு

இதயம் பாராமல்.,
"எதை எதையோ" பார்க்கும்.,
---> காதல்

திறமை தேடாமல்.,
"பரிந்துரை" தேடி வழங்கும்.,
---> வேலை

சேவை போர்த்தாமல்.,,
"ஊழல்" போர்த்திய.,
---> அரசு

இன்னும் நிறைய இருந்தும்.,
ஐந்து மட்டும் எழுதிய.,
---> "நான்"2 கருத்துகள்: