புதன், டிசம்பர் 14, 2011

கனவுப் பட்டறை!!!தூரத்து வால் நட்சத்திரத்தின்.,
வாலை எட்டிப் பிடிக்கும் ஆசையோடு.,
தினமும் துரத்திக் கொண்டு இருக்கிறேன்.,

புல் நுனியின் பசுமையை.,
பதமாக என் உடையில்.,
பூசிக் கொள்ள.,
தினமும் ஏங்கித் தவிக்கிறேன்.,

தெருவில் விளையாடும்.,
சிறுவர்களை எல்லாம்.,
சானக்கியர்களாக மாற்றப் போராடுகிறேன்.,

சிவன் கோவிலையும் .,
மசூதியையும்., தேவாலயத்தையும்.,
ஒன்றாக்கி வணங்குகிறேன் !!

நம் தெற்கு வானின் குருதி 
நிறத்தை எல்லாம்., குளிர்ந்த 
நீலமாய் மாற்றி வரைகிறேன்.,

கனவுகள் தேடியே.,
காலமெல்லாம் தேய்கிறேன்.,
கண் உறங்காமல்.,
காலமெல்லாம் தேய்கிறேன்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக