வெள்ளி, டிசம்பர் 16, 2011

இரு தலைக் கொள்ளி எறும்பு!!!தீயில் இட்டு சுடும் ரணம்.,
தார் சாலையில் காலணி இன்றி 
நடக்கும் எரிச்சல்.,
சூரியனின் அருகில் 
குடில் போட்டு 
வசிக்கும் வேதனை.,

எனக்கு நானே 
கொள்ளி வைத்துக் கொல்கிறேன்.,

உன்னை வெறுக்கிறேன்
என்று பொய்
பேசும் பொழுதெல்லாம்!!!

தகப்பன் சொல் கேட்டு .,
திரும்பவும் முடியாமல்.,
உன் வழி பார்த்து .,
நடக்கவும் இயலாமல்.,
இரு தலைக் கொள்ளி 
எறும்பாய் எரிகிறேனடா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக