செவ்வாய், டிசம்பர் 20, 2011

முரண் --- காதல்!!!கரடுமுரடான
கடுந்தரை போல.,
கொஞ்சம் முரட்டுப்
போக்கிரி ,

கடிந்து பேசும்.,
நிறைய சொற்கள் 
உதிர்க்காத உதிரிப் பூ .,
---அவன் 

தர்பூசணியின் 
உட்புறம் போல.,
தன்மையான 
சிவப்பு நிற.,
சீனி மிட்டாய்.,

சர்க்கரையாக.,
ஆயிரம் வார்த்தைகள்.,
கொட்டும் குற்றாலச் சாரல் ., 
சிரிக்கும் செவ்வந்தி.,
---அவள் 

இருவருக்கும் காதல்.,
கடுந்தரையில் 
கனிந்த மாம்பழம் 
அவனும் அவளும் !!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக