புதன், டிசம்பர் 21, 2011

முரண் : கருப்பு - வெள்ளை - வானவில் !!!வெள்ளைப் பூக்கள் 
பூத்து நிற்க ,
பனி போல படர்ந்திருக்க .,
நிலவைப் போல்.,
சிறு பிழைகளும் 
சிதறி இருக்க.,
அழகிய பூஞ்சோலைகள்!!!

கருப்புக் கரி போல ,
காய்ந்து போன 
தேயிலை போல,
நீளம் கலந்த
நிலக்கரி போல,
ஒவ்வொரு தோட்டத்திலும் 
ஒவ்வொரு வண்ண வண்டு.,
தேன் குடித்து நிற்கும்.

கருப்பு வெள்ளைத் தோட்டம் ,
கருப்பு வெள்ளை முரண்.,
வானவில்  காட்டும் 
நம் கண்கள்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக